இந்து மதம்

 1. அனந்த் பிரகாஷ்

  பிபிசி செய்தியாளர்

  ஆனந்த் கிரி

  ஆனந்த் கிரி தனது பாஸ்போர்ட்டில் கூட, தாயின் பெயருக்குப் பதிலாக, இந்து சமயப் பெண் தெய்வமான பார்வதி தேவியின் பெயரையும் தந்தை பெயருக்குப் பதிலாகத் தனது குருவின் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறார்.

  மேலும் படிக்க
  next
 2. சமீராத்மஜ் மிஷ்ரா

  பி பி சி ஹிந்திக்காக

  நரேந்திர கிரி

  "தற்போது இது ஒரு தற்கொலை வழக்கு போல் தெரிகிறது. தடயவியல் குழு சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கோணங்களிலிருந்தும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது."

  மேலும் படிக்க
  next
 3. Video content

  Video caption: ஆரியர்களைத் தேடி சென்னை வரை வந்த ஹிட்லரின் விஞ்ஞானிகள்

  யூத அழிப்பின் முக்கிய கூட்டாளியான ஹென்ரிக் ஹிம்லர், ஐந்து பேர் கொண்ட குழுவை திபெத்துக்கு அனுப்பி ஆரிய இனத்தின் தோற்றம் பற்றிய அறிய முயன்றார்

 4. திருப்பதி தேவஸ்தான வாரிய உறுப்பினராக மகாராஷ்டிர சிவசேனை பிரமுகர் நியமனம்

  திருமலை திருப்பதி தேவஸ்தான வாரிய உறுப்பினராக, சிவசேனை கட்சித் தலைவர்களில் ஒருவரும் மகாராஷ்டிர முதல்வரின் தனி உதவியாளருமான மிலிந்த் கேஷவ் நர்வேகர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆந்திரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.

  View more on twitter
 5. பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பிள்ளையார் சிலைகளை உசேன் சாகரில் 'கரைக்க' தெலுங்கானா அரசுக்கு அனுமதி

  நீரில் கரையாத பிளாஸ்டர் ஆஃப் பாரிசை கொண்டு செய்யப்பட்ட பிள்ளையார் சிலைகளை இந்த ஆண்டு உசேன் சாகர் ஏரியில் கரைக்க தெலுங்கானா அரசுக்கு அனுமதி அளித்துள்ளது உச்ச நீதிமன்றம். ஆனால், இது வெறும் சம்பிரதாயமான 'கரைப்பாக' மட்டுமே இருக்கும் என்றும். நீரில் போட்டவுடன் பிள்ளையார் சிலையை தூக்கிவிடப் போவதாகவும் தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது.

  View more on twitter
 6. Video content

  Video caption: உலகை உலுக்கிய 9/11 தாக்குதல் எப்படி நடந்தது? பின் விளைவுகள் எப்படி இருந்தன?

  உலகை உலுக்கிய 9/11 தாக்குதல் எப்படி நடந்தது? பின் விளைவுகள் எப்படி இருந்தன?

 7. தடையை மீறி விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டுவந்த பாஜகவினர், சேலத்தில் பரபரப்பு

  சேலத்தில் தடையை மீறி விநாயகர் சிலையை பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் ஊர்வலமாக எடுத்து வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இன்று விநாயகர் சதுர்த்தி. ஆனால், கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மக்கள் கூட அனுமதிப்பது தொற்றுப் பரவலுக்கு வழி வகுக்கும் என்றுகூறி, பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் அரசு தடை விதித்துள்ளது.

  இந்த தடையை எதிர்த்து, சேலம் எல்லை பிடாரி அம்மன் கோவில் பகுதியில் பாஜக, இந்து முன்னணி சார்பாக விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. போலீசார் அதைத் தடுத்தனர்.

  உடனே இந்து அமைப்பினர் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் முன்பு சிலை வைத்து, மாலை அணிவித்து பூஜைகள் நடத்தினர்.

  போலீஸ் தடுப்பை மீறி பிறகு விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் அவர்கள் முற்பட்டனர். இதனால் காவல்துறையினருக்கும் சிலை எடுத்து வந்தவர்களுக்கும் வாக்குவாதம் மற்றும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து இந்து முன்னணி சேலம் மண்டலத் தலைவர் சந்தோஷ்குமார் காவல்துறையினரிடம் சிலையை தனது கடைக்கு எடுத்துச் செல்வதாகக் கூறினார்.

  இதை தொடர்ந்து காவல்துறையினர் சிலையை எடுத்து செல்ல ஒரு நபரை மட்டும் அனுமதித்தனர். இதனால் இப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. இந்து முன்னணி சேலம் மண்டல தலைவர் சந்தோஷ்குமார் கூறும்போது, வழக்கமாக விநாயகர் சதுர்த்தியன்று எல்லைப்பிடாரி அம்மன் கோயில் அருகே உள்ள பீடத்தில் வைத்துதான் மூன்று நாட்கள் பிள்ளையாரை வழிபடுவோம்.

  தற்போது அனுமதி மறுத்து உள்ளதால் சிலையை நாங்கள் எங்கள் கடைக்கு எடுத்துச் செல்கிறோம் ஊர்வலமாக செல்ல வில்லை என்றார்.

 8. பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபட அனுதிக்க நீதிமன்றம் மறுப்பு

  முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  விநாயகர் சதுர்த்தியின்போது பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட அனுமதி கேட்ட கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. பொதுநலனைக் கருத்தில் கொண்டே தடை விதிக்கப்பட்டிருப்பதால் அதில் தலையிட முடியாது என தீர்ப்பளித்துள்ளது.

  கொரோனா பரவலை மனதில் கொண்டு, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின்போது பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த இல. கணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.

  அந்த வழக்கில், பொது இடங்களில் விநாயகரை வைத்து வழிபடவும் பிறகு ஊர்வலமாகச் சென்று நீர் நிலைகளில் கரைக்கவும் அனுமதிக்க வேண்டும். குறைந்தது ஐந்து பேர் என்ற அளவிலாவது ஊர்வலமாகச் செல்ல அனுமதிக்க வேண்டும்; இது மத உரிமை என்று கூறியிருந்தார்.

  இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், "மத உரிமை என்பது முக்கியம்தான். ஆனால், அதைவிட வாழ்வாதாரம் மிக முக்கியம்" என தெரிவித்தனர். பொதுநலன் கருதியே அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்றும் அதில் தாங்கள் தலையிட முடியாது என்று கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

  திருப்பூரைச் சேர்ந்த இந்து முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பைச் சேர்ந்த கோபிநாத் என்பவரும் இதேபோன்ற ஒரு வழக்கைத் தொடர்ந்திருந்தார்.

  அதில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகரை பொது இடங்களில் வைத்து வழிபடவும் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கவும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டுமெனக் கோரி அந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார்.

  அந்த வழக்கில் ஆஜரான தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக கூறினார். இதையடுத்து அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

 9. நாராயண மூர்த்தி

  இந்தியாவின் புகழ்பெற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸை குறி வைத்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊடகம் என்று கருதப்படும் 'பாஞ்சஜன்யா'வில் வெளியான கட்டுரைக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

  மேலும் படிக்க
  next
 10. புதுவையில் பிள்ளையார் சிலை வைக்க அனுமதி

  தமிழிசை சௌந்தரராஜன்.
  Image caption: தமிழிசை சௌந்தரராஜன்.

  பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி புதுவையில் எல்லா இடத்திலும் பிள்ளையார் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

  புதுச்சேரியில் 25-வது முறையாக கொரோனா மேலாண்மை ஆலோசனைக் கூட்டம் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி போடுவது அதிகப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், "கொரோனா பாதிப்பு கடந்த 2 நாள்களாக அதிகரித்து வருகிறது, இது குறித்து மக்கள் அஞ்சத் தேவையில்லை. எச்சரிக்கையுடன் இருந்து அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்," என்றார்.

  இதையடுத்து தமிழ்நாட்டில் பிள்ளையார் சிலை வைப்பதற்கு தடை இருக்கின்ற சூழலில் புதுச்சேரியில் அனுமதி வழங்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

  அதற்கு பதிலளித்த தமிழிசை, "இன்னொரு மாநிலத்தின் முடிவு பற்றி என்னால் கூற முடியாது. ஆனால் தெலுங்கானா மாநிலத்தில் எல்லா இடங்களிலும் பிள்ளையார் சிலை வைக்க அனுமதி அளித்துள்ளனர்.‌ அதைப் போன்று புதுச்சேரி மாநிலத்திலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  இறைவனை வணங்குவோருக்கு விழிப்புணர்வு உள்ளது. அவர்கள் வழிபாடு செய்யும்போது விழிப்புணர்வோடு நடந்து கொள்வார்கள். மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கும்போது எதற்கு தடைவிதிக்க வேண்டும்? என்று அவர் கேட்டார். கொரோனா பற்றிய விழிப்புணர்வும், அதில் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது என்பது பற்றியும் மக்களுக்கு தெரிகிறது. கட்டுப்பாட்டோடு மக்கள் ஒரு சூழலை அணுகும்போது அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுக்கலாம். மற்றொரு மாநில நடவடிக்கையைப் பற்றி சொல்வதற்கு எனக்கு உரிமையில்லை. ஆனால் நான் தொடர்புடைய இரு மாநிலத்திலும் திருவிழாக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

  பிள்ளையார் சிலை வைக்க எந்த தடையும் இல்லை. தெலுங்கானா மாநிலத்தில் சிலை உயரத்திற்கு இருந்த கட்டுப்பாடு கூட இந்த ஆண்டு நீக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று மிக உயரமான விநாயகர் சிலையை தெலுங்கானா மாநிலத்தில் நான் திறந்து வைக்கவுள்ளேன்," என்றார் தமிழிசை சௌந்தரராஜன்.

பக்கம் 1 இல் 28