பாண்டிச்சேரி (புதுச்சேரி)

 1. தேவமணி

  இந்த சம்பவத்தை அடுத்து திருநள்ளாறு சாலை மற்றும் தேவமணி வீடு, கட்சி அலுவலகம் அருகே பதட்டமான சூழல் நிலவியதால் பாதுகாப்புக்காக நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 2. பாலியல் சீண்டல்

  சிறுமிக்கு பாலியல் சீண்டல் அளித்ததாகத் தெரிவிக்கப்பட்ட புகாரில் திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மருமகன் உட்பட 5 பேர் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 3. டெல்லியில் தொடங்கியது காவிரி நதி நீர் ஒழுங்குமுறை குழு கூட்டம்

  காவிரி கூட்டம்
  Image caption: டெல்லியில் இன்று கூடியுள்ள காவிரி நீர் ஒழுங்குமுறை குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ள தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி பிரதிநிதிகள்.

  டெல்லியில் காவிரி நதிநீர் ஒழுங்குமுறைப்படுத்தும் குழுவின் 53ஆம் கூட்டம் அதன் தலைவர் நவீன் குமார் தலைமையில் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறை செயலாளர் திரு.சந்தீப் சக்சேனா, காவிரி நதிநீர் ஒழுங்குமுறைப்படுத்தும் குழு உறுப்பினர், திருச்சி மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி,மற்றும் காவேரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம், காவேரி தொழில்நுட்பக் குழு உறுப்பினர் பட்டாபிராமன், செயற்பொறியாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். காவிரி விவகாரத்தில் தொடர்புடைய நான்கு மாநிலங்களான ,தமிழ்நாடு கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் காவிரி நீர் தொடர்பான தங்களுடைய கோரிக்கைகளை எழுத்துபூர்வமாக சமர்ப்பித்துள்ளனர்.

 4. புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை திரும்பப் பெற்ற தேர்தல் ஆணையம்

  நடராஜன் சுந்தர்

  புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றது புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் அட்டவணை வகுப்பினருக்கு வார்டுகள் ஒதுக்கீடு செய்வதில் குளறுபடி இருப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் திரும்பப்பெற்றது.

  புதுச்சேரியில் நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளுக்கு கடந்த மாதம் 22ஆம் தேதி மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்திருந்தது. இந்த தேர்தலில் பட்டியலினத்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கு வார்டுகள் ஒதுக்கீடு செய்வதில் குளறுபடி உள்ளதால் உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

  இந்த வழக்கை சஞ்சய் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. இதற்கு புதுச்சேரி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வார்டுகள் சுழற்சி முறையில் ஒதுக்கப்பட்டதாக விளக்கமளித்திருந்தார்.

  “10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுழற்சி முறை ஒதுக்கீடு என்பது இரண்டு முறை மட்டுமே வழங்கப்படும். ஆனால் தொடர்ந்து சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்தால் பிரச்னை ஏற்படும். இதில் தவறுகள் இருப்பதால் இது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும். சுழற்சி முறை ஒதுக்கீடு என்பது விதிகள் அடிப்படையில் மட்டுமே இருக்கவேண்டும். அதைத் தவிர்த்து அரசாணை அடிப்படையில் இருக்கக்கூடாது. வார்டு ஒதுக்கீட்டில் ‌குறைகள்‌ உள்ளது. இது சம்பந்தமாக உரிய‌ விளக்கம் அளிக்கவில்லை என்றால் தேர்தலை தடைவிதிக்க நேரிடும்” எனச் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்தது. உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக கடந்த 2019ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை உள்ளாட்சித்துறை ரத்து செய்தது.

  குறிப்பாக 2011 ஆம் அண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி போது, பட்டியலினத்தவர், பெண்கள் இட ஒதுக்கீட்டிற்கு வார்டு சீரமைக்கப்பட்டிருக்கிறது.

  ஆனால் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினருக்கு சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு செய்யாமல், கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் நடைமுறை அடிப்படையில் தேர்தல் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

  இதனிடையே கடந்த இரண்டு வாரங்களாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று முன்தினம் தேர்தல் முன்னேற்பாடுகளில் குளறுபடி இருப்பதை உறுதி செய்த நீதிபதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பைத் திரும்பப்பெற்று கொள்ளலாம். மேலும் அறிவிப்பை ரத்து செய்துவிட்டு ஐந்து நாட்களுக்குள் மாநில தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும். மேலும் இட ஒதுக்கீடு விதிமுறைகள் முறையாக பின்பற்றி விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என தெரிவித்தனர்.

  இதனையடுத்து புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் இன்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 243K மற்றும் 243ZK ஆகியவற்றில் உள்ள ஷரத்துக்களின் படியும், இந்திய கிராம மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து சட்டம்,1973 பிரிவு 9A, புதுச்சேரி நகராட்சிகள் சட்டம் 1973 பிரிவு 15A-ல் அளிக்கப்பட்ட அதிகாரங்கள் மற்றும் இது தொடர்பான விதிகள் மற்றும் ஷரத்துக்கள் படியும் மாநில தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 22ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெறுகிறது," என்று தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

  இதனால் புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 23ஆம் தேதி வெளியிட்ட நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துக்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பான அறிவிக்கையை திரும்பப் பெற்றுள்ளது. இதையடுத்து புதிய இட ஒதுக்கீடு விவரம் வெளியாகிறது.

  அதன்படி புதுச்சேரி நகராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் மற்றும் பதவிகளை அளித்தல் மற்றும் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்தல் ஆகியவை 1996-ன் 3-வது விதியின் படியும், புதுச்சேரி, மாநில தேர்தல் ஆணையம், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 5 நகராட்சிகளுக்கான பதவிகளுக்கு அட்டவணை வகுப்பினர், அட்டவணை வகுப்பு பெண்கள், பொது பெண்கள் மற்றும் பொதுப்பிரிவுகளுக்கான இட ஒதுக்கீடு பற்றிய புதிய அறிவிக்கையை நேற்று இரவு புதுச்சேரி மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி புதுச்சேரி மற்றும் காரைக்கால் நகராட்சிகள்- பெண்களுக்கும் (பொது), உழவர்கரை மற்றும் மாஹே நகராட்சிகள் பொது ஒதுக்கீட்டிலும், ஏனாம் நகராட்சி- அட்டவணை இனத்தவருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரி, உழவர்கரை, காரைக்கால், மாஹே, ஏனாம் நகராட்சிகளிலுள்ள கவுன்சிலர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு பட்டியல்களும் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த மாதம் 22ஆம் தேதி உள்ளாட்சித்தேர்தல் நடத்துவதற்காக வெளியிடப்பட்ட அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ள நிலையில், புதிய தேர்தல் அட்டவணை அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

 5. Video content

  Video caption: தெருவிலங்குகளை அரவணைத்து, மருத்துவ சிகிச்சை எல்லாம் கொடுத்து வளர்க்கும் இளைஞர்கள் குழு

  புதுச்சேரி தமிழக எல்லையில், ஒரு இளைஞர்கள் குழு தெரு விலங்குகளுக்கு அடைக்கலம் கொடுத்து, அதனை முறையாக பராமரிக்கும் தன்னார்வ சேவை மையம் ஒன்றை நடத்தி வருகிறார்கள்.

 6. புதுச்சேரியில் 15 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு

  தேர்தல் ஆணையம்

  புதுச்சேரியில் வரும் அக்டோபர் 21, 25, 28 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

  புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடைசியாக 2006 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு பல்வேறு காரணங்களால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

  இந்நிலையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் தேர்தல் தேதி விவரங்களை புதுச்சேரி தேர்தல் ஆணையர்‌ ராய் பி. தாமஸ் வெளியிட்டார். அறிவித்தார்.

  அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 5 நகராட்சிகள், 10 கொம்யூன் பஞ்சாயத்துக்கான உள்ளாட்சி தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நகராட்சிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறும்.

  இரண்டாம் கட்டமாக புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளுக்கு அக்டோபர் 25ஆம் தேதி நடைபெறும்.

  மூன்றாம் கட்டமாக கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு அக்டோபர் 28ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது.

  முதல்கட்ட தேர்தல் வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 7ஆம் தேதி நிறைவடைகிறது. இரண்டாம்கட்ட தேர்தல் வேட்புமனு தாக்கல் அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 11ஆம் தேதி நிறைவடைகிறது.

  மூன்றாம் கட்ட தேர்தல் வேட்புமனு தாக்கல் அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 15ஆம் தேதி நிறைவடைகிறது. மூன்றுகட்ட வாக்குப்பதிவு முடிந்த பின் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 31ஆம் தேதி நடைபெறுகிறது.

  வாக்குப்பதிவு நேரம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை. இதில் கடைசி ஒரு மணி நேரமாக மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா நோயாளிகள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  இந்த உள்ளாட்சித் தேர்தலில் 10 லட்சத்து 3 ஆயிரத்து 755 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். அதில் 4 லட்சத்து 72 ஆயிரத்து 202 பேர் ஆண்கள், 5 லட்சத்து 30 ஆயிரத்து 930 பெண்கள் என 117 பேர் திருநங்கைகள் உள்ளனர் என்று புதுச்சேரி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 7. புதுச்சேரி பாஜக மாநிலங்களவை வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

  நடராஜன் சுந்தர்

  புதுச்சேரி பாஜக மாநிலங்களவை வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளார்.

  புதுச்சேரியில் காலியாக உள்ள ஒரே ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளராக ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவைச் சேர்ந்த செல்வகணபதியை பாஜக மேலிடம் நேற்று அறிவித்தது.

  இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் செல்வகணபதி, முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரி முனுசாமியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

  புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள கோகுலகிருஷ்ணனின் பதவிக்காலம் நிறைவடைவதையொட்டி புதிய உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வரும் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறுகிறது.

  இந்த நிலையில், வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில் யாரும் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்யாததால், பாஜக வேட்பாளர் செல்வகணபதி போட்டியின்றி ராஜ்யசபா எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

  pondicherry bjp
 8. வந்துகொண்டிருக்கும் செய்திபுதுச்சேரி மாநிலங்களவை வேட்பாளரை அறிவித்தது பாஜக

  நடராஜன் சுந்தர், புதுச்சேரி

  மாநிலங்களவை தேர்தல் புதுச்சேரி
  Image caption: செல்வகணபதி

  புதுச்சேரியில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளராக ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவைச் சேர்ந்த செல்வகணபதியை பாஜக மேலிடம் அறிவித்துள்ளது. இந்த பதவிக்கான வேட்பாளராகும் வாய்ப்பை யாருக்கு தருவது என்பதில் ஆளும் என்.ஆர். காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே இழுபறி நீடித்து வந்தது.

  இந்த நிலையில் அந்த வாய்ப்பை பாஜகவிற்கே என்.ஆர். காங்கிரஸ் வழங்கியிருக்கிறது. இதற்கு முதல்வர் ரங்கசாமிக்கு மத்தியில் ஆளும் பாஜக கொடுத்த அழுத்தமே காரணம் என்று கூறப்படுகிறது.

  பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செல்வகணபதி, அக்கட்சியின் பொருளாளருமாக இருப்பவர. முன்னாள் பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

  கட்சி மேலிட அறிவிப்பைத் தொடர்ந்து நாளை அவர் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.

  புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள கோகுலகிருஷ்ணனின் பதவிக்காலம் நிறைவடைவதையொட்டி புதிய உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வரும் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.

  இதில் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்கும் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறவே அதிக வாய்ப்பு உள்ளது.

  ஏனெனில் என்.ஆர்.காங்கிரசிடம் 10 சட்டமன்ற உறுப்பினர்கள், 3 சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள், பா.ஜ.க.வுக்கு 6 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இது தவிர, பா.ஜ.க. ஆதரவு சுயேச்சைகள் 3 பேரும் உள்ளனர்.

  எனவே ஆளும் கூட்டணி எளிதாக வெற்றி பெறுவதற்கே வாய்ப்பு உள்ளது.

  புதுச்சேரி
 9. புதுச்சேரி கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு

  நடராஜன் சுந்தர், புதுச்சேரி

  விநாயகர் சதுர்த்தி

  புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நகரின் பல்வேறு பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலில் கரைக்கப்பட்டன.

  புதுச்சேரி மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட புதுச்சேரி அரசு அனுமதி வழங்கியிருந்தது.

  இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 5 அடி முதல் 25 அடி உயரத்திலான பிள்ளையார் சிலைகளை பொது இடத்தில் வைத்து வழிபட்டனர்.

  இந்நிலையில் புதுச்சேரி நகரின் பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் பொது இடங்களில் வைக்கப்பட்டு வழிபட்ட 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று பிற்பகல் புதுச்சேரி சாரம் அவ்வைத்திடலில் இருந்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக கடற்கரைக்கு எடுத்துச் சென்றனர்.

  அரசின் வழிகாட்டுதல்களின்படி விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் நடந்தது. இதையொட்டி நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

  ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட விநாயகர் சிலைகள் புதுச்சேரி கடற்கரை சாலை பழைய துறைமுகம் அருகே உள்ள கடலில் கரைக்கப்பட்டன.

 10. நடராஜன் சுந்தர், மு. ஹரிஹரன்

  பிபிசி தமிழுக்காக

  மணப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர் வெ.ஜெயசுந்தர்

  இந்திய அரசு சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு ஆசிரியர் தினத்தன்று தேசிய நல்லாசிரியர் விருதினை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு தேர்வான 44 ஆசிரியர்களில் மூன்று பேர் தமிழர்கள்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 27