சிவ சேனை

 1. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  ரானே

  மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்த மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை மகாராஷ்டிர மாநில அரசு கைது செய்துள்ளது. மத்திய அமைச்சர்களை மாநில அரசுகள் கைது செய்தால் என்ன நடக்கும்?

  மேலும் படிக்க
  next
 2. மத்திய அமைச்சர் நாராயண் ரானே கைது - மகாராஷ்டிரா காவல்துறை நடவடிக்கை

  மகாராஷ்டிரா கைது
  Image caption: நாராயண் ரானே, மத்திய அமைச்சர்

  மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன் என்று கூறிய மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை, முதல்வரை அவதூறாக பேசியதாகக் கூறி அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  இந்த விவகாரம் தொடர்பாக ரானே மீது புனேவில் ஒரு புகாரும், மஹாட் பகுதியில் ஒரு வழக்கும் பதிவாகியுள்ளன.

  நாசிக் நகர சிவசேனை தலைவர் சுதாகர் பத்குஜரும் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

  இந்த நிலையில், முதல்வரை அவதூறாக பேசிய நாராயண் ரானேவை கைது செய்ய வேண்டும் என்று கோரி அம்மாநிலத்தில் ஆளும் சிவசேனை கட்சித் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  மும்பை நகரின் பல இடங்களில் ரானேவை கைது செய்ய வலியுறுத்தி அவர்கள் பதாகைகளை வைத்தனர்.

  இதனால் பதற்றமான சூழல் நிலவிய நிலையில், இந்த நிலையில், மத்திய அமைச்சரவை கைது செய்ய நாசிக் காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவின்படி நாராயண் ரானேவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  பிணை நிராகரிப்பு

  அரசியலமைப்பு பொறுப்பில் உள்ள ஒருவர் அதேபோன்ற பொறுப்பில் உள்ள மற்றவர் மீது புகார் அளித்துள்ளார். இந்த பிரச்னையின் தீவிரம ்கருதி சட்டப்படி காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்று நாசிக் நகர காவல் ஆணையர் தெரிவித்தார்.

  நாராயண் ரானேவை கைது செய்ய தங்களுக்கு எவ்வித அழுத்தமும் கிடையாது என்றும் அவர் கூறினார்.

  இதற்கிடையே, தன்னை காவல்துறையினர் கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் வழங்கக் கோரி நாராயண் ரானே சார்பில் ரத்னகிரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதில் சில குறைபாடுகள் இருப்பதாகக் கூறி அந்த மனு ஏற்கப்படவில்லை.

  இதையடுத்து முன்ஜாமீன் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் ரானே சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதை அவசரகால மனுவாக ஏற்க உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

  பாஜகவினர் போராட்டம்

  இதற்கிடையே, நாராயண் ரானேவை காவல்துறையினர் விடுவிக்கும்வரை மும்பை - கோவா நெடுஞ்சாலையை முடக்குவோம் என்று பாஜகவினர் எச்சரித்துள்ளனர். அந்த நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான பாஜகவினர் திரண்டுள்ளதால் வாகன போக்குவரத்து ஏற்பட்டுள்ளது.

  என்ன பேசினார் ரானே?

  கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற பாஜகவின் மக்கள் ஆசிர்வாத யாத்திரை நிகழ்ச்சியொன்றில் பேசிய ரானே, இந்த அரசு சரியான ஓட்டுநரின்றி இயங்குகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் ஆட்சி அதிகாரத்தை அனுபவிக்கின்றனர். அரசை யாரும் தட்டிக்கேட்பதில்லை," என்று பேசினார்.

  மேலும், "இந்த மாநிலத்தில் ஆளும் முதல்வருக்கு இது எத்தனையாவது சுதந்திர தினம் என்பது கூட தெரியவில்லை. உதவியாளரிடம் அதை கேட்கிறார். தாய்நாட்டின் சுதந்திர தினத்தை தெரியாமல் ஒரு முதல்வர் இருப்பது அவமானமாகும். நான் மட்டும் அந்த இடத்தில் இருந்திருந்தால் ஒரு அறை விட்டிருப்பேன்," என்று நாராயண் ரானே பேசினார்.

  இந்த நிலையில், நாராயண் ரானேவின் பேச்சுக்கு ஆளும் சிவசேனை தொண்டர்கள் கடும் கண்டனம் தெரிவித்து கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் நாராயண் ரானேவை கிண்டல் செய்யும் வகையில் அவரை கோழி திருடன் என கூறி சுவரொட்டிகளை ஆங்காங்கே ஒட்டினர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சிவசேனை கட்சியில் இருந்தபோது நாராயண் ரானே செம்பூர் பகுதியில் கோழிக்கடை நடத்தி வந்ததை சித்தரிக்கும் விதமாக அந்த சுவரொட்டி காட்சி இருந்தது.

  இந்த நிலையில், மாநில முதல்வரை பொது நிகழ்ச்சியில் அவதூறாக பேசிய நாராயண் ரானேவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று சிவசேனை எம்.பி விநாயக் ரெளட் குரல் கொடுத்தார்.

  பாஜக மேலிட தலைவர்களை ஈர்ப்பதற்காக சிவசேனை தலைமையை ரானே இலக்கு வைப்பதாக அக்கட்சியினர் குற்றம்சாட்டினர்.

  யார் இந்த நாராயண் ரானே?

  சிவசேனை கட்சியின் தலைவராக பால் தாக்கரே இருந்தபோது அரசியலுக்குள் நுழைந்தவர் நாராயண் ரானே. 1990இல் சிவசேனை கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார்.

  1999இல் ரானேவை முதல்வராக்க பால் தாக்கரே முயன்றபோது அந்த முடிவுக்கு உத்தவ் தாக்கரே எதிர்ப்பாக இருந்தார். அப்போது முதலே சிவசேனை கட்சியில் எதிரும் புதிருமாக அவர் இருந்தார்.

  இருப்பினும் பால் தாக்கரே தமது முடிவில் உறுதியாக இருந்ததால் 1999இல் ரானே முதல்வரானார். அப்போது ரானே ராஜ் தாக்கரேவுக்கு நெருக்கமாக இருந்தார். உத்தவ் தாக்கரே மனோகர் ஜோஷிக்கு நெருக்கமாக இருந்தார்.

  1999ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது கட்சி அடைந்த தோல்விக்கு உத்தவ் தாக்கரேவே காரணம் என்று ரானே குற்றம்சாட்டினார். 2002இல் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான அரசை கவிழ்க்க அவர் முயன்றபோது அதை உத்தவ் தாக்கரே ஆதரிக்கவில்லை. 2003இல் ரானேவின் வீட்டை தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் எரித்தனர். அந்த சம்பவத்தின்போது ரானேவை சந்திக்க ஒரு சிவசேனை கட்சி தலைவர் கூட செல்லவில்லை. இது உத்தவ் தாக்கரே, ரானே இடையிலான மோதலை மேலும் கடுமையாக்கியது.

  2005இல் பால் தாக்கரேவுக்கும் உத்தவ் தாக்கரேவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டபோது சிவசேனை கட்சியில் இருந்து விலகிய ரானே, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அப்போது மாநிலத்தில் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், 2017இல் தன்னை முதல்வராக நியமிக்க காங்கிரஸ் மேலிடம் தவறி விட்டதாகக் கூறி அந்த கட்சியில் இருந்து விலகிய ரானே, தமது மகன்களுடன் சேர்ந்து தனி கட்சி கண்டார். பிறகு அந்த கட்சியை பாஜகவுடன் அவர் இணைத்தார்.

 3. பாஜக - சிவசேனா இடையே கருத்து வேறுபாடு உண்டு, ஆனால், இரண்டும் எதிரிகள் அல்ல

  பாஜக முன்னாள் முதல்வர் பட்னாவிஸ் கருத்து

  பாஜக - சிவசேனை இரண்டு கட்சிகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடு உண்டு. ஆனால், இரண்டும் எதிரிகள் அல்ல என்று தெரிவித்துள்ளார் மகாராஷ்டிர பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ்.

  அவரது கருத்து அரசியல் ஊகங்களை கிளப்பிவிட்டிருக்கிறது.

  பாஜக - சிவசேனை இடையே மீண்டும் கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு பதில் சொல்லும்போதுதான் இந்தக் கருத்தை அவர் வெளியிட்டார்.

  "அரசியல் முடிவுகள் அவ்வப்போது உள்ள அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்பவே எடுக்கப்படுகின்றன. சிவசேனை பாஜகவுடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டது. தேர்தல் முடிவுக்குப் பிறகு காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கைகோர்த்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்றும் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

  சிவசேனை தலைவர் சஞ்சய் ரௌத் பாஜக தலைவர் ஒருவரை சந்தித்தது பற்றி கேட்டபோது, அது பற்றித் தமக்குத் தெரியாது என்றும், சஞ்சய் காலையில் ஒன்று பேசுவார், மாலையில் வேறொன்று பேசுவார் என்று கூறினார்.

  தேவேந்திர பட்னாவிஸ்
  Image caption: கருத்து வேறுபாடு உண்டு. எதிரிகள் அல்ல. சிவசேனை குறித்து தேவேந்திர பட்னாவிஸ் கருத்து.
 4. கொரோனா

  தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தைக் கடந்தது

  Catch up
  next
 5. திலிப் லண்டே

  கவுன்சிலர் தன் வேலையை முறையாகச் செய்யவில்லை. கழிவு நீர் வடிகாலை முறையாக சுத்தம் செய்யவில்லை எனவே தற்போது சாலையில் நீர் தேங்கிக் கொண்டிருக்கிறது என குற்றம் சாட்டினார்.

  மேலும் படிக்க
  next
 6. உத்தவ் தாக்கரே

  மகாராஷ்டிராவில் நகர்ப்புறங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் கொரோனா பரவல் அதிகமாக காணப்படுகிறது. மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால், கடந்த 10ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசிய மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, முழு பொது முடக்கத்தை தவிர அரசுக்கு வேறு வாய்ப்பு இல்லை என்பதை குறிப்பால் உணர்த்தினார்.

  மேலும் படிக்க
  next
 7. மனோ தணேடன்

  இலங்கையில் பாஜக கிளையை நிறுவுவது தொடர்பாக திரிபுரா மாநில முதலமைச்சரை பார்த்து ஒருபுறம் சிரிப்பு வந்தாலும், மறுபுறம் அவரது எண்ணத்தை ரசிப்பதாக மனோ கணேசன் தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 8. தன்வே

  விவசாயிகள் போராட்டத்தை பற்றி முந்தைய நாள் பிரிட்டன் பிரதமர் தவறாகப் புரிந்து கொண்டு பாகிஸ்தானுடன் இந்தியா பேசித்தீர்க்க வேண்டிய பிரச்னை என்றார். இப்போது இந்திய அமைச்சர் ஒருவரே இதை பாகிஸ்தான், சீனா தூண்டுதல் போராட்டம் என்று கூறியிருக்கிறார்.

  மேலும் படிக்க
  next
 9. திவ்யா ஆர்யா

  பிபிசி செய்தியாளர்

  அர்னாப்

  அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்டோரின் மனுக்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவசர வழக்காக அவற்றை விசாரிக்க பட்டியிடக்கூடாது என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் துஷ்யந்த் தவே, உச்ச நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு கடிதம் எழுதினார். ஆனாலும் அவரது மனு பல மணி நேரம் விசாரிக்கப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 10. வெங்காயம்

  இந்திய வெங்காயத்துக்கு ஏற்றுமதி தடை விதிக்கப்பட்டிருப்பதால் அதனால் பலன் பெறப்போவது பாகிஸ்தான்தான். சர்வதேச தந்தையில் இந்திய வெங்காயத்துக்கு உள்ள மதிப்பை பாதிக்கும் வகையில் அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது என்று சரத் பவார் கூறியுள்ளார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 4