உத்தரப் பிரதேசம்

 1. narendra modi

  "முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் கனவு நிறைவேறியது. கோரக்பூர் உரத்தொழிற்சாலை நிறைவு பெற்றது."

  மேலும் படிக்க
  next
 2. “சிவப்பு தொப்பி அணிந்தவர்கள் உ.பி மாநிலத்திற்கு ஆபத்தானவர்கள்: நரேந்திர மோதி

  உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோதி.

  இதுகுறித்து ஏ.என்.ஐ முகமை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியின்படி, "இன்று உத்தர பிரதேசம் முழுவதும் சிவப்புத் தொப்பி அணிந்தவர்களுக்கு (சமாஜ்வாதி கட்சியை குறிப்பிட்டு) உங்கள் பிரச்னைகள் பற்றியோ, வலிகளை பற்றியோ கவலை இல்லை. சிவப்புத் தொப்பி அணிந்தவர்கள் மாஃபியாவுக்கு விடுதலை அளிக்க, சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமிக்கவும், ஊழல் செய்யவும், பணப்பெட்டியை நிரப்பவும் பதவிக்கு வர வேண்டும் என்று விரும்புகின்றனர்", என்று பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

  மேலும் அவர் பேசுகையில், “தீவிரவாதிகள் மீது பரிவு காட்டி அவர்களை சிறையிலிருந்து வெளியில் கொண்டு வர அரசு அமைக்க வேண்டும் என்று 'சிவப்பு தொப்பிகள்' விரும்புகின்றனர். 'சிவப்புத் தொப்பி' அணிந்தவர்கள் உத்தர பிரதேசத்திற்கு சிவப்பு எச்சரிக்கை போன்றவர்கள் “, என்று தெரிவித்துள்ளார்.

  View more on twitter
 3. Uttar Pradesh: Wasim Rizvi is now Jitendra Tyagi, said after leaving Islam

  "இப்போது நாங்கள் சுதந்திரமாக உணர்கிறோம். அன்பையும் மனிதத்தையும் அடையும் இடத்திற்கு நாங்கள் இனி செல்வோம். சனாதன தர்மமே உலகின் பழமையான மதம் என்பதால் அதனை தழுவியுள்ளேன்."

  மேலும் படிக்க
  next
 4. மதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமி என்று அழைக்கப்படும் இடத்தில் அருகருகே இருக்கும் கோயில் மற்றும் மசூதி.

  டிசம்பர் 6ம் தேதி, மதுராவின் ஷாஹி ஈத்கா பகுதியில் உள்ள மசூதியில் பால கோபாலா (குழந்தை கிருஷ்ணர்) சிலையை நிறுவி, அதற்கு அபிஷேகம் செய்ய அகில இந்திய இந்து மகாசபை திட்டமிட்டிருந்தது.

  மேலும் படிக்க
  next
 5. ராஜேஷ் டோபரியால்

  பிபிசி ஹிந்தி சேவைக்காக டேராடூனில் இருந்து

  ஹர்ஷவந்தி பிஷ்ட்

  பொருளாதார பேராசிரியரான ஹர்ஷ்வந்தி பிஷ்ட், ஐ.எம்.எஃப். பொருளாதார நிலையை மேம்படுத்த விரும்புகிறார். மேலும், மலையேறுபவர்களிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வையும் அதிகம் ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 6. கீதா பாண்டே

  பிபிசி செய்திகள்

  A campaign against child sexual abuse in India

  போக்சோ வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாலியல் குற்றவாளியின் தண்டனை காலத்தை குறைத்த அலகாபாத் உயர் நீதிமன்றம், வாய்வழி புணர்ச்சி தீவிர குற்றமல்ல என்று கூறியிருப்பது நிபுணர்களால் சர்ச்சைக்குரிய தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 7. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  இந்திய உச்ச நீதிமன்றம்

  சட்டப்பேரவையின் கண்டனத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் விஷயம் முடிவுக்கு வந்திருக்கும். ஆனால், அங்கே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுத்ததோடு, சபாநாயகரை முகம்கொடுத்துப் பார்க்கவும் முடியாது எனச் சொல்லிவிட்டார்.

  மேலும் படிக்க
  next
 8. Video content

  Video caption: பசுக்களின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்கும் யோகி அரசு - டிசம்பரில் 24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவை

  உத்தர பிரதேச மாநிலத்தில் பசுக்களுக்காக 24 மணி நேரமும் இயங்கக் கூடிய ஆம்புலன்ஸ் சேவையை வரும் டிசம்பர் மாதம் அமல்படுத்தப்படுகிறது.

 9. யோகி ஆதித்யநாத்

  இலவச உயர்தர விந்து மற்றும் கரு மாற்று தொழில்நுட்பத்தை வழங்குவதன் மூலம் மாநிலத்தின் பசுக்கள் இனப்பெருக்க திட்டத்திற்கு ஊக்கம் கிடைக்கும் என்று உத்தர பிரதேச அரசு நம்புகிறது.

  மேலும் படிக்க
  next
 10. கூட்டுப்பாலியல் வழக்கு: உத்தர பிரதேச முன்னாள் அமைச்சர் உள்பட மூவருக்கு ஆயுள் சிறை

  கூட்டுப்பாலியல் வழக்கு

  உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருந்தபோது சுரங்கத்துறை அமைச்சராக இருந்த காயத்ரி பிரஜாபதி மற்றும் அவரது கூட்டாளிகள் இருவருக்கு கூட்டுப்பாலியல் வழக்கில் ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

  லக்னெளவில் உள்ள எம்பி-எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றநீதிபதி பவன் குமார் ராய் இந்த தீர்ப்பை வழங்கினார். குற்றவாளிகள் மூவருக்கும் தலா ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

  அந்த அபராதத் தொகை பாதிக்கப்பட்ட பெண்ணின் மறுவாழ்வுக்கு பயன்படுத்தப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

  மாநில சுரங்கத்துறை அமைச்சர் பதவி வகித்த காயத்ரி பிரஜாபதி மற்றும் அவரது கூட்டாளிகள், சித்ரகூட் பகுதியில் மைனர் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

  இந்த வழக்கில் காயத்ரி பிரஜாபதியுடன் சேர்த்து ஆஷிஷ் ஷுக்லா, அசோக் திவாரி, விகாஸ் வர்மா, ரூபேஸ்வர், அமரந்தர் சிங், பின்டூ, சந்தரபால் ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

  இதில், ஆஷிஷ் ஷுக்லா, அசோக் திவாரிக்கும் ஆயுள் சிறை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மற்றவர்கள் வழக்கில் இருந்து விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்.

  தண்டனைக்குள்ளான சந்திரபால், காயத்ரி பிரஜாபதியின் துப்பாக்கி ஏந்திய காவலர். வழக்கில் குற்றம்சாட்டிருந்தவர்கள் பிரஜாபதியின் நெருங்கிய உதவியாளர்கள் ஆவர்.

  இந்த கூட்டுப்பாலியல் சம்பவம் 2017ஆம் ஆண்டு லக்னெளவில் உள்ள கெளதம்பள்ளியில் உள்ள அமைச்சரின் அதிகாரபூர்வ இல்லத்தில் நடந்தது. வழக்குப் பதிவு செய்யாமல் இருந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் தலையீட்ட பிறகே காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து குற்றம்சாட்டப்பட்ட நபர்களை அதே ஆண்டு மார்ச் மாதம் கைது செய்தனர்.

  2017ஆம் ஆண்டு உத்தர பிரதேச முதல்வராக அகிலேஷ் யாதவ் இருந்தார். அவரது அமைச்சரவையில் சுரங்கத் துறை அமைச்சராக இருந்தவர் காயத்ரி பிரஜாபதி. இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டபோது, உத்தரபிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து கொண்டிருந்தது.

  அகிலேஷ் யாதவ் ஆட்சியில் சுரங்கத்துறையில் முறைகேடு நடந்ததாக கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. அதில் காயத்ரி பிரஜாபதிக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் காயத்ரி பிரஜாபதியின் கோடிக்கணக்கான சொத்துகளை அமலாக்க இயக்குநரகம் முடக்கி நடவடிக்கை எடுத்தது.

பக்கம் 1 இல் 24