விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

 1. வங்கிகள் தனியார்மய மசோதாவை கைவிட இந்திய நிதியமைச்சரிடம் விசிக கோரிக்கை

  நிர்மலா சீதாராமன்
  Image caption: இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், ரவிக்குமார்.

  பொதுத்துறை வங்கிகளை தனியார்மயம் செய்வதற்கான சட்ட மசோதாவை இந்த கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய வேண்டாம் என இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

  இந்த சந்திப்பின்போது அக்கட்சியைச் சேர்ந்தவரும் எம்.பி.யுமான ரவிக்குமாரும் உடனிருந்தார்.

  இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரவிக்குமார், "எந்தெந்த வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்பது இதுவரை முடிவாகவில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறினார். இந்த கூட்டத்தொடரில் மசோதா பட்டியலிடப்பட்டிருந்தாலும் இன்னும் அதற்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

  மழை வெள்ளத்தில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வரலாறு காணாத அளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் நிர்மலா சீதாராமனிடம் இருவரும் தெரிவித்தனர்.

  இந்த விவகாரத்தில் தமிழக அரசு கோரியுள்ள பேரிடர் நிவாரண நிதியை விடுவித்து உதவுமாறு வலியுறுத்தியதாகவும் நிவாரண சட்டத்தில் உள்ளபடி நிச்சயம் செய்வதாக அமைச்சர் உறுதியளித்தார் என்றும் ரவிக்குமார் கூறினார்.

 2. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழ்

  உள்ளாட்சித் தேர்தல்: மலர்ந்ததா தாமரை, வீழ்ந்ததா அதிமுக? -உண்மை நிலவரம் இதுதான்

  21 மாநகராட்சிகள், 150 நகராட்சிகள் என முக்கிய பதவிகளுக்காக இந்தத் தேர்தல் நடக்கவுள்ளதால் தொண்டர்கள் மிகுந்த ஆர்வத்துடன் மனுக்களைப் பெற்றுச் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  மேலும் படிக்க
  next
 3. மலையை காக்க கரம் கோர்த்த பாமக விசிக

  பாமக- விசிக இணைந்து போராட்டம்
  Image caption: பாமக- விசிக இணைந்து போராட்டம்

  மலையின் வளத்தைக் காப்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பா.ம.கவும் இணைந்து போராட்டம் நடத்திய சம்பவம், ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

  ` எங்கள் கிராமத்தில் இரு தரப்பினரும் ஒற்றுமையாக இருப்பதால், அனைத்துப் போராட்டங்களிலும் பா.ம.கவினர் எங்களுக்குத் துணை நிற்கின்றனர்' என்கிறார் ஊராட்சி மன்றத் தலைவி ஜெயலட்சுமி.

  வி.சி.க நடத்திய போராட்டத்தில் பா.ம.க பங்கேற்றது எப்படி? என்றோம். `` நாங்கள் அனைவரும் ஒரே ஊரில் வசிக்கிறோம். இங்கு வன்னியர்களும் தலித் மக்களும் நிரம்பியுள்ளனர். இங்கு 560 வன்னியர் வாக்குகள் உள்ளது என்றால் அதில் 500 வாக்குகள் எங்களுக்கு விழுந்தன. அவர்களையும் அரவணைத்துச் செல்வதால் எந்தப் பிரச்னையும் இல்லை என்று கூறினார்.

  இது தொடர்பாக முழுமையாகப் படிக்க

 4. ஆ விஜயானந்த்

  பிபிசி தமிழ்

  விசிக - பாமக இணைந்து போராட்டம்.

  மலையின் வளத்தைக் காப்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பா.ம.கவும் இணைந்து போராட்டம் நடத்திய சம்பவம், ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ` எங்கள் கிராமத்தில் இரு தரப்பினரும் ஒற்றுமையாக இருப்பதால், அனைத்துப் போராட்டங்களிலும் பா.ம.கவினர் எங்களுக்குத் துணை நிற்கின்றனர்' என்கிறார் ஊராட்சி மன்றத் தலைவி ஜெயலட்சுமி.

  மேலும் படிக்க
  next
 5. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழ்

  அதிமுக

  அ.தி.மு.கவின் நிலையான பலமாகக் கருதப்பட்ட கிராமப்புற வாக்குகள், அக்கட்சிக்கு இப்போது பெரிதும் உதவாதது போலவே தெரிகிறது. அதிமுக குற்றம் சாட்டுவது போல திமுக அரசின் முறைகேடுகளால் இந்தச் சரிவா, இல்லை அக்கட்சி தனது பலத்தை இழந்துள்ளதா?

  மேலும் படிக்க
  next
 6. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழ்

  சீமான்

  "சீமானின் பேச்சுகள் அனைத்தும் தமிழ்த் தேசியத்துக்கு எதிராக உள்ளன. நாம் தமிழர் என்ற கட்சியைத் தொடங்கும்போது இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், கரு.பழனியப்பன் உள்ளிட்ட பலர் சீமானுடன் இருந்தனர். தற்போது அவர்கள் யாரும் இவருடன் இல்லை" என்கிறார் வன்னி அரசு

  மேலும் படிக்க
  next
 7. ஆ.விஜய் ஆனந்த்

  பிபிசி தமிழுக்காக

  விசிக தலைவர் தொல். திருமாவளவன்

  தமிழ்நாடு முழுவதும் `ஆபரேஷன் டிஸ்ஆர்ம்' என்ற பெயரில் ரவுடிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்து கொடூர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

  மேலும் படிக்க
  next
 8. மோரூர் பேருந்து நிலைய விவகாரத்தில் ஆதரவு கொடுத்த சீமானுக்கு திருமாவளவன் நன்றி

  மோரூர் பேருந்து நிலையத்தில் பொது இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியேற்றத்துக்கு தடைவிதித்த காவல்துறையின் ஒரு சார்பு நிலையிலான பாகுபாட்டையும் சாதி வெறியர்களையும் கண்டித்த அன்புச் சகோதரர் சீமான் அவர்களுக்கும் எஸ்டிபிஐ தலைவர் சகோதரர் நெல்லை முபாரக் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றி என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் திருமாவளவன்.

  View more on twitter
 9. ஆ.விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

  " ஒன்பது மாவட்டங்களிலும் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. தி.மு.கவோடு கூட்டணி உறவு சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக சமரசமாகச் சென்றோம். நாங்கள் 4 இடங்களைக் கேட்டால் அதில் ஓர் இடத்தை ஒதுக்கினார்கள். சில இடங்களில் அதையும் தரவில்லை."

  மேலும் படிக்க
  next
 10. ஆளுநர் பதவியேற்பில் பங்கேற்காதது ஏன்? திருமா

  தொல் திருமாவளவன்.

  தமிழ்நாடு ஆளுநர் பதவியேற்பு விழாவிற்கு எனக்கு அழைப்பு வந்தது, ஆனால் ஆளுநர் நியமனத்தில் உடன்பாடு இல்லாத காரணத்தால் பங்கேற்கவில்லை என்று தெரிவித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன்.

  சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது:

  நீட் தேர்வு தமிழக மாணவர்களை பழிவாங்கி கொண்டிருக்கிறது. எனவே நீட் தேர்வு மற்றும் வேளாண் சட்டத்திற்கு எதிரான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 20ஆம் தேதி அவரவர் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்பட உள்ளது.

  மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து இந்த போராட்டம் நடைபெறுகிறது . தமிழக ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ரவி மீது பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. நாகலாந்து மாநிலத்தில் அவருக்கு எதிராக மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது என்பது அரசியல் விமர்சகர்கள் கருத்து.

  எனவேதான் அவரது நியமனத்தை திரும்பபெற வேண்டும் என்று விசிக கோரிக்கை விடுத்தது. ஆளுநர் பதவியேற்பு விழாவிற்கு எனக்கு அழைப்பு வந்தது,ஆளுநர் நியமனத்தில் உடன்பாடு இல்லாத காரணத்தால் நான் பங்கேற்கவில்லை அதிமுக ஆட்சியில் அடி முதல் நுனி வரை ஊழல் தலைவிரித்து ஆடியது.

  இன்றைக்கு அது வெளிச்சத்துக்கு வருகிறது. இதை அதிமுகவே அமைதியாக வேடிக்கை பார்க்கிறது. எதிர்ப்பே, விமர்சனமே அவர்களிடம் இருந்து வரவில்லை. கடமையை செய்யும் ஊடகவியலாளர்களை தாக்குவது கண்டத்திற்குரியது.

  தமிழகத்தில் 9 மாவட்டங்களில் திமுக உடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது . தமிழகத்தில் திமுகவின் ஆட்சி சிறப்பாக உள்ளது.

  திமுக அரசு என்பதைவிட சமூக நீதி அரசு என்பதே பொருத்தமானது என்று கூறினார்.

பக்கம் 1 இல் 3