லண்டன்

 1. Video content

  Video caption: இதுதான் உலகின் பழமையான தொப்பி கடை

  இதுதான் உலகின் பழமையான தொப்பி கடை

 2. பிட்காயின்

  ``பெரு நிறுவனமான அமேசானுக்கு, பணம் செலுத்தப் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்கள் மீது ஆர்வமிருப்பது ஆச்சரியமான ஒன்றல்ல. ஒரு புதிய டிஜிட்டல் நாணயத்தை உருவாக்கக் கூட அவர்களிடம் திட்டம் இருக்கலாம்``

  மேலும் படிக்க
  next
 3. விஜய் மல்லையா திவாலானவர் என அறிவித்தது லண்டன் உயர் நீதிமன்றம்

  விஜய் மல்லையா
  Image caption: விஜய் மல்லையா

  இந்தியாவில் வங்கிக் கடன் மோசடி வழக்குகளில் தேடப்பட்டு வருபவரும் லண்டனில் வாழ்ந்து வருபவருமான விஜய் மல்லையாவை "திவாலானவர்" என்று அறிவித்துள்ளது லண்டன் உயர் நீதிமன்றம்.

  இது தொடர்பாக அவர் கடன் பெற்றிருந்த வங்கிகள் குழுவுக்கு தலைமை தாங்கும் இந்திய ஸ்டேட் வங்கி 2018இல் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், "விஜய் மல்லையா திவாலனவர். அவரது சொத்துகளை ஜப்தி செய்யலாம்," என்று கூறியுள்ளது.

  இந்த தீர்ப்பு இந்திய வங்கிகள் குழுவுக்கு வெற்றியாக கருதப்பட்டாலும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான உரிமை விஜய் மல்லையாவுக்கு உள்ளது.

  முன்னதாக, விஜய் மல்லையாவுக்கு எதிராக எஸ்பிஐ தலைமையில் பரோடா வங்கி, கார்பரேஷன் வங்கி, ஃபெடரல் வங்கி, ஐடிபிஐ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஜம்மு காஷ்மீர் வங்கி, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, மைசூர் ஸ்டேட் வங்கி, யூகோ வங்கி, யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா, ஜேஎம் ஃபைனான்ஷியல் அசெட் ரீகன்ஸ்டிரக்ஷன் உள்ளிட்ட 13 நிதி நிறுவனங்கள் சேந்து ஒரு குழுவாக எஸ்பிஐ தலைமையில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

  2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் தேதி முதல் கணக்கிட்டு, ஆண்டுக்கு 11.5 சதவீத வட்டியுடன் கூடிய கடன் தொகையை விஜய் மல்லையா செலுத்த வேண்டும் என்று அந்த வங்கிகள் கோரின.

  ஆனால், இந்தியாவில் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர்ந்த விஜய் மல்லையா, வட்டித் தொகையுடன் கூட்டு வட்டி விதிக்கப்படுவதை எதிர்த்தார். இந்த வகையில், விஜய் மல்லையா பிரிட்டன் பண மதிப்பில் 1 பில்லியன் பவுண்டுகள் வரை வங்கிகளுக்கு அவர் செலுத்த வேண்டும்.

  இந்த நிலையில் விஜய் மல்லையாவை திவாலானவர் என்று லண்டன் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் அந்த பணத்தை விஜய் மல்லையாவின் சொத்துகளை ஜப்தி செய்து ஈடு செய்ய இதுவரை நிலவி வந்த சட்ட தடங்கல்கள் நீங்கியுள்ளன.

  இருப்பினும், மேல்முறையீட்டிலும் இந்த வங்கிகள் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய வங்கிகளால் விஜய் மல்லையாவின் சொத்துகளை ஜப்தி செய்து விற்க முடியும்.

 4. ஜேன் வேக்ஃபீல்ட்

  தொழில்நுட்ப செய்தியாளர்

  சீனா

  லண்டனில் உள்ள சீன தூதரகம் இந்த கூற்றுகளுக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை. ஆனால் எல்லா இனத்தவர்களுக்கும் அரசியல் மற்றும் சமூக உரிமைகளுக்கான உத்தரவாதம் உள்ளதாக கூறுகிறது.

  மேலும் படிக்க
  next
 5. வைர வியாபாரி மெஹுல் சோக்ஸியை இந்தியா கொண்டு வர நடவடிக்கை: சிபிஐ

  Mehul Choksi

  இந்தியாவின் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,600 கடன் மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் நீரவ் மோதியுடன் சேர்த்து குற்றம்சாட்டப்பட்டுள்ள மெஹுல் சோக்ஸி டொமினிகா நாட்டில் பிடிபட்டதையடுத்து, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும்படி டொமினியா அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய புலனாய்வுத்துறையான சிபிஐ தெரிவித்துள்ளது.

  ஆன்டிகுவா மற்றும் பர்புடா நாட்டில் குடியுரிமை பெற்றுள்ள மெஹுல் சோக்ஸி, 2018ஆம் ஆண்டு முதல் அந்நாட்டில் வசித்து வந்தார்.

  இந்த நிலையில், கியூபா செல்லும் திட்டத்திடன் அங்கிருந்து தப்பித்து டொமினிகா நாட்டுக்கு படகில் சென்றபோது இன்டர்போல் அதிகாரிகளிடம் அவர் பிடிபட்டார்.

  அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு டொனினிகா அரசை மெஹுல் குடியுரிமை பெற்றுள்ள ஆன்டிகுவா நாட்டின் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

  இந்த செய்தியின் முழுமையான தகவலை அறிய இங்கே கிளிக் செய்து படிக்கவும்.

 6. சாரா கேம்பெல்

  அரசக் குடும்ப செய்தியாளர்

  இளவரசர் ஃபிலிப் மற்றும் ராணி இரண்டாம் எலிசபெத்

  "இந்த உலகத்தில் இளவரசர் ஃபிலிப் மட்டுமே அரசியை சக மனிதராக நடத்தக்கூடிய ஒரே மனிதர். அவரால் மட்டுமே அது முடியும்," என தனிச் செயலர் ஒருமுறை தெரிவித்திருந்தார். இவர்களின் திருமணம் அன்பால் ஆனது. அவர்கள் ஒருவரை ஒருவர் தேர்வு செய்திருந்தனர்.

  மேலும் படிக்க
  next
 7. இளவரசர் ஃபிலிப்

  அரசியின் கணவராக 73 ஆண்டுகள் வாழ்ந்த இளவரசர் ஃபிலிப், சமீபத்தில் நோய்த்தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

  மேலும் படிக்க
  next
 8. மியான்மர்

  மியான்மர் தூதரகத்தின் ராணுவ அதிகாரி (Military Attache) மற்ற தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு கூறியுள்ளார். மேலும், இனி க்யாவ் ஸ்வார் மின் மியான்மர் நாட்டின் பிரதிநிதி அல்ல எனவும் அந்த ராணுவ அதிகாரி கூறியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

  மேலும் படிக்க
  next
 9. மோதி

  மாவட்ட நீதிமன்றத்தால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான உரிமை நீரவ் மோதிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஒருவேளை நீரவ் மோதி சார்பில் மேல்முறையீடு செய்யப்படுமானால், அதன் மீதான விசாரணை நடந்து தீர்ப்பு வர மேலும் சில மாதங்களாகலாம்.

  மேலும் படிக்க
  next
 10. லண்டன் மருத்துவர்

  "பழைய கொரோனா வைரஸ் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை எளிதாக பாதித்து வந்தது. இந்த புதிய திரிபு 40 வயதளவில் இருப்பவர்களைக்கூட எளிதாக தாக்குகிறது."

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 4