ஆங் சாங் சூச்சி

 1. ஆங் சான் சூ ச்சீ: மியான்மர் தலைவருக்கு எதிரான வழக்கு விசாரணை தொடங்கியது

  ஆங் சான் சூ ச்சீ

  மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கைப்பற்றிய ராணுவ நிர்வாகம், அந்நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ ச்சீக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணை தொடங்கியுள்ளது.

  கொரோனா விதிகளை மீறியது, உரிமம் இல்லாமல் வாக்கி டாக்கி கருவிகளை வாங்கியது போன்ற குற்றச்சாட்டுகளின்கீழ் தற்போதைய விசாரணையை அவர் எதிர்கொண்டுள்ளார்.

  இது தவிர அவர் மீது ஊழல் முறைகேடு மற்றும் அலுவல்பூர்வ ரகசிய காப்புப் பிரமாணத்தை மீறியதாகவும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவற்றின் மீதான விசாரணை பின்னர் நடத்தப்படும் என்று தெரிகிறது.

  ராணுவ நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை மனித உரிமைகள் குழுக்கள் கண்டித்துள்ளன. எதிர்கால தேர்தல்களில் ஆங் சான் சூ ச்சீ போட்டியிடுவதை தடுக்க மேற்கொள்ளப்படும் முயற்சி இது என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

  75 வயதாகும் ஆங் சான் சூ ச்சீ, கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ராணுவ நிர்வாகத்தால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு அவ்வப்போது நீதிமன்றங்களுக்கு அழைத்து வரப்படும்போது மட்டும் சில நிமிடங்கள் அவரை சிலர் பார்த்துள்ளனர்.

  அவர் மீதான குற்றச்சாட்டுகளில் ராணுவ நிர்வாகம் தரப்பு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அவரது தரப்பு வழக்கறிஞர்கள் அனுமதி கோரியுள்ளனர்.

  இது தவிர, ஆங் சான் சூ ச்சீ மீது தேச துரோக குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கின் விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. அதில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 14 ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

  கடந்த வாரம் ஆங் சான் சூ ச்சீ மீது சட்டவிரோதமாக ஆறு லட்சம் அமெரிக்க டாலர்கள் வாங்கியது மற்றும் சுமார் 11 கிலோ தங்கம் வைத்திருந்ததாக மேலும் சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

  கடந்த பிப்ரவரி மாதம் மியான்மரில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவ தலைமை, கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாலேயே இந்த நடவடிக்கையை எடுத்ததாக கூறியது.

  ஆனால், சுயாதீன தேர்தல் பார்வையாளர்கள், அந்த தேர்தல் வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் நடந்ததாக கூறினார்கள். அரசியல் உள்நோக்கத்துடன் ஆங் சான் சூ ச்சீ மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

  ஆங் சான் சூ ச்சீ
 2. தனது வீட்டில் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட பான் இ பியூ

  என்னை கடைசியாக ஒருமுறை அம்மா என்று அழைப்பதைக் கேட்க ஆசைப்பட்டேன். அது நடக்கவில்லை. உடல் எங்கும் ரத்தம். பார்க்கவே எனக்குத் துணிவில்லை. உடலை வீட்டுக்கு எடுத்த வருவதைத் தவிர வேறு ஒன்றும் எனக்குத் தோன்றவில்லை

  மேலும் படிக்க
  next
 3. மியான்மர்

  "இது இனப்படுகொலை போன்றது. அவர்கள் ஒவ்வொரு நிழலையும் சுடுகிறார்கள்" என மக்கள் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் யே ஹடுட் கூறியதாக, மியான்மர் நவ் செய்தி நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது.

  மேலும் படிக்க
  next
 4. மியான்மர்

  இதுவரை 12 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் துப்பாக்கிசூட்டிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 5. மியான்மர்

  கடுமையான வன்முறை பிரயோகிக்கப்படும் என ராணுவம் தெரிவித்த பிறகும் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான போராட்டகாரர்கள் சனிக்கிழமையன்று வீதிகளில் குவிந்தனர்.

  மேலும் படிக்க
  next
 6. ஆங் தோரா

  பிபிசி பர்மிய சேவையை சேர்ந்த ஆங் தோரா மியான்மர் தலைநகர் நேப்பிடாவில் நீதிமன்றம் ஒன்றிற்கு வெளியே நின்று கொண்டு செய்தி வழங்கி கொண்டிருந்தபோது, சீருடை அணியாதவர்களால் அழைத்து செல்லப்பட்டார்.

  மேலும் படிக்க
  next
 7. People clash with security forces as they continue to protest against the military coup and detention of elected government members in Hlaing Tharyar, Yangon

  மியான்மரில் மிகப்பெரிய நகரமான யாங்கூனில் உள்ள ஒரு பகுதியில், ஞாயிறன்று போராட்டம் நடத்தியவர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அப்போது ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களிடம் தடிகளும் கத்திகளுமே இருந்துள்ளன.

  மேலும் படிக்க
  next
 8. ஆங் சாங் சூச்சி

  மியான்மரில் ராணுவம் "மனிததன்மைக்கு எதிரான குற்றங்களைச்" செய்து வருகிறது என, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆய்வாளர் ஒருவர் குற்றஞ்சுமத்தி இருக்கிறார்.

  மேலும் படிக்க
  next
 9. இந்தியாவுக்கு தப்பித்து சென்ற காவலர்கள் - திருப்பி அனுப்ப கோரும் மியான்மர்

  சமீபத்தில் மியான்மரைச் சேர்ந்த காவல் துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சிலர் எல்லையைக் கடந்திருப்பதாக இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர். தங்கள் இரு நாடுகளுக்கு இடையில் நட்பு ரீதியிலான உறவுமுறை தொடர, அவர்களை திருப்பி அனுப்புமாறு கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளது மியான்மர்.

  மேலும் படிக்க
  next
 10. நாடு முழுவதும் போராட்டக்காரர்கள் தடுப்பரண்களை ஏற்படுத்திக் கொண்டனர்.

  பல நகரங்களில் போராட்டக்காரர்கள் மீது எச்சரிக்கைகூட விடுக்காமல் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பாதுகாப்புப் படைகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2