நீதிமன்றம்

 1. முரளிதரன் காசி விஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  Maneka Gandhi

  மேனகா காந்தி வழக்கில் இவ்வளவு பெரிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளிப்பதற்குக் காரணம், நெருக்கடி நிலை காலகட்டத்தில் நீதிமன்றம் செயல்பட்ட முறை பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தது.

  மேலும் படிக்க
  next
 2. திமுக எம்.பி ரமேஷுக்கு நீதிமன்றக் காவல்

  முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்த திமுக கடலூர் எம்.பி ரமேஷை மூன்று நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

  கடலூர் மாவட்டம் பண்ருட்டி குற்றவியல் முதன்மை நீதிமன்ற நீதிபதி கற்பகவள்ளி முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் இன்று காலை சரணடைந்தார்.

  முந்திரி ஆலைத் தொழிலாளி கொலை செய்ததாக சிபிசிஐடி போலீசார் பதிவு செய்த இந்த வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷை முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டதால் அவரை அக்டோபர் 13ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கற்பகவள்ளி உத்தரவிட்டுள்ளார்.

 3. கடலூர் திமுக எம்.பி நீதிமன்றத்தில் சரண்

  நடராஜன் சுந்தர்

  முந்திரி ஆலைத் தொழிலாளி கொலைசெய்யப்பட்டதாகப் பதிவாகியுள்ள வழக்கில் தேடப்பட்டு வந்த கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

  திமுகவைச் சேர்ந்த கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷுக்குச் சொந்தமான முந்திரி ஆலையில் பணியாற்றிய தொழிலாளி இறந்த வழக்கில் ரமேஷ் உள்பட ஆறு பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

  இதில் கடந்த 9ஆம் தேதி காலை இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

  இதனிடையே இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷை சிபிசிஐடி காவல் துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், கடலூர் பண்ருட்டியில் உள்ள குற்றவியல் முதன்மை நீதிமன்றத்தில் ரமேஷ் சரணடைந்தார்.

  முந்திரி திருடி மாட்டிக் கொண்டதால் கோவிந்தராசு எனும் அந்தத் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார் என்று அப்போது ரமேஷ் பிபிசி தமிழிடம் தெரிவித்திருந்தார்.

  ரமேஷ் வெளியிட்ட அறிக்கை

  ரமேஷ் எம்.பி. இன்று வெளியிட்ட அறிக்கையில் , “சிபிசிஐடி என் மீது பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக வைத்து திமுக மீது அரசியல் கட்சிகள் தங்களுக்கே உரித்தான அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தவறான பிரசாரத்தை மேற்கொண்டிருப்பது என் மனதிற்கு நெருடலாகவும், இந்த இயக்கத்தின் தொண்டர்களில் ஒருவனாக இருக்கும் எனக்கு மிகுந்த வேதனையும் அளிக்கிறது."

  "ஆகவே நான் உயிரினும் போற்றும் என் தலைவர் அவர்களின் நல்லாட்சியின் மீது வீண்பழி பேசுபவர்களுக்கு மேலும் இடம் கொடுத்து விட வேண்டாம் என கருதி சிபிசிஐடி பதிவு செய்துள்ள வழக்கில் நீதிமன்றத்தில் சரண் அடைகிறேன். என்மீது சுமத்தப்பட்டுள்ள புகார் ஆதாரமற்றது என்பதை சட்டத்தின் முன்பு உரிய ஆதாரங்களுடன் நிரூபித்து வெளியே வருவேன்” என்று தெரிவித்துள்ளார்.

  கடலூர் திமுக எம்.பி டிஆர்வி. எஸ். ரமேஷ்
  Image caption: கடலூர் திமுக எம்.பி டிஆர்வி. எஸ். ரமேஷ்
 4. Iraqis vote in first parliamentary election since 2019 mass protests

  போராட்டங்கள் காரணமாக அடுத்த ஆண்டு நடைபெற இருந்த நாடாளுமன்ற தேர்தல் தற்போது ஆறு மாதங்களுக்கு முன்கூட்டியே நடத்தப்படுகிறது.

  Follow
  next
 5. ஆஷிஷ் மிஸ்ரா.

  உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின் மீது காரை விட்டு ஏற்றியதிலும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையிலும் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.

  மேலும் படிக்க
  next
 6. லக்கிம்பூர் வன்முறை - உ.பி. அரசின் நடவடிக்கையில் திருப்தி இல்லை: உச்ச நீதிமன்றம்

  கொளுத்தப்பட்ட கார்.
  Image caption: போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்டதில் 4 விவசாயிகள் இறந்தனர்.

  லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக உத்தரப் பிரதேச அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  இந்த வழக்கு விசாரணை நவராத்திரி விடுமுறைக்கு பிறகு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

  உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது வேகமாக கார் ஏற்றப்பட்டதிலும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையிலும் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.

  விவசாயிகள் கூட்டத்தின் மீது ஏற்றப்பட்ட கார் பாஜகவை சேர்ந்த மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவுடன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது.

  இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை உத்தரப்பிரதேச அரசும், மத்திய அரசும் கையாளும் விதத்தை எதிர்க்கட்சியினரும், விவசாயிகளும், செயற்பாட்டாளர்களும் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

  இந்நிலையில் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

  தலைமை நீதிபதி என். வி. ரமணா தலைமையிலான அமர்வின் முன் லக்கிம்பூர் கேரி வழக்கு விசாரணைக்கு வந்தது.

  “உத்தரப் பிரதேச அரசு சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே முன்வைத்த வாதங்களை கேட்டோம். அவர் உபி அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்தது என்று தெரிவித்தார். அது குறித்த அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது ஆனால் உபி அரசாங்கத்தின் நடவடிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை” என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

  “நாட்டில் கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட பிற நபர்களையும் நீங்கள் இவ்வாறுதான் நடத்துவீர்களா?” என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த வழக்கு குறித்த அடுத்த விசாரணை நவராத்திரி விடுமுறை முடிந்து அக்டோபர் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

  மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராதான் விவசாயிகளின் உயிரிழப்புக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் ஆஷிஷ் மிஸ்ரா இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக உத்திரப் பிரதேச அரசு, அஜய் மிஸ்ரா உட்பட 15-20 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இருவரை கைது செய்துள்ளனர். ஆஷிஷ் மிஸ்ராவிற்கு போலிசார் சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால் அவர் இதுவரை போலீசாரின் முன் ஆஜராகவில்லை.

 7. லக்கிம்பூர் கேரி நிகழ்வு - உச்ச நீதிமன்றம் அதிருப்தி

  லக்கிம்பூர் கேரியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் மோதியதில் நான்கு விவசாயிகள் உள்பட எட்டுப் பேர் உயிரிழந்த நிகழ்வு தொடர்பாக ஏன் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று உத்தர பிரதேச மாநில அரசிடம் இந்திய உச்ச நீதிமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பியுள்ளது.

  மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா விவசாயிகள் மீது மோதிய காரை ஓட்டியதாக அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யபட்டுள்ளது. அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.

  "உத்தர பிரதேச அரசு எடுத்த நடவடிக்கையில் எங்களுக்கு போதிய திருப்தி இல்லை. பொறுப்பான அரசு மற்றும் காவல்துறையை நாங்கள் எதிர்பார்க்கிறோம். துப்பாக்கிச் சூடு உள்பட, இந்த நிகழ்வு தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை," என்று தலைமை நீதிபதி என்.வி. ரமணா இன்றைய வழக்கு விசாரணையின்போது தெரிவித்தார்.

  குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளவர்களை காவல்துறை இன்னும் கைது செய்யாதது குறித்து அதிருப்தி வெளியிட்ட தலைமை நீதிபதி, சொற்கள் அளவுக்கு செயல் இல்லாதது போலத் தெரிகிறது என்று கூறினார்.

  இறந்தவர்களின் உடற்கூராய்வு அறிக்கையில் துப்பாக்கிச் சூட்டுகான அறிகுறிகள் இல்லை என்று உத்தர பிரதேச அரசுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே தெரிவித்தார்.

  அக்டோபர் 20ஆம் தேதிக்கு இந்த வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

  lakhimpur kheri farmers death
 8. புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை திரும்பப் பெற்ற தேர்தல் ஆணையம்

  நடராஜன் சுந்தர்

  புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றது புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் அட்டவணை வகுப்பினருக்கு வார்டுகள் ஒதுக்கீடு செய்வதில் குளறுபடி இருப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் திரும்பப்பெற்றது.

  புதுச்சேரியில் நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளுக்கு கடந்த மாதம் 22ஆம் தேதி மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்திருந்தது. இந்த தேர்தலில் பட்டியலினத்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கு வார்டுகள் ஒதுக்கீடு செய்வதில் குளறுபடி உள்ளதால் உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

  இந்த வழக்கை சஞ்சய் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. இதற்கு புதுச்சேரி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வார்டுகள் சுழற்சி முறையில் ஒதுக்கப்பட்டதாக விளக்கமளித்திருந்தார்.

  “10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுழற்சி முறை ஒதுக்கீடு என்பது இரண்டு முறை மட்டுமே வழங்கப்படும். ஆனால் தொடர்ந்து சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்தால் பிரச்னை ஏற்படும். இதில் தவறுகள் இருப்பதால் இது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும். சுழற்சி முறை ஒதுக்கீடு என்பது விதிகள் அடிப்படையில் மட்டுமே இருக்கவேண்டும். அதைத் தவிர்த்து அரசாணை அடிப்படையில் இருக்கக்கூடாது. வார்டு ஒதுக்கீட்டில் ‌குறைகள்‌ உள்ளது. இது சம்பந்தமாக உரிய‌ விளக்கம் அளிக்கவில்லை என்றால் தேர்தலை தடைவிதிக்க நேரிடும்” எனச் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்தது. உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக கடந்த 2019ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை உள்ளாட்சித்துறை ரத்து செய்தது.

  குறிப்பாக 2011 ஆம் அண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி போது, பட்டியலினத்தவர், பெண்கள் இட ஒதுக்கீட்டிற்கு வார்டு சீரமைக்கப்பட்டிருக்கிறது.

  ஆனால் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினருக்கு சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு செய்யாமல், கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் நடைமுறை அடிப்படையில் தேர்தல் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

  இதனிடையே கடந்த இரண்டு வாரங்களாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று முன்தினம் தேர்தல் முன்னேற்பாடுகளில் குளறுபடி இருப்பதை உறுதி செய்த நீதிபதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பைத் திரும்பப்பெற்று கொள்ளலாம். மேலும் அறிவிப்பை ரத்து செய்துவிட்டு ஐந்து நாட்களுக்குள் மாநில தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும். மேலும் இட ஒதுக்கீடு விதிமுறைகள் முறையாக பின்பற்றி விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என தெரிவித்தனர்.

  இதனையடுத்து புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் இன்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 243K மற்றும் 243ZK ஆகியவற்றில் உள்ள ஷரத்துக்களின் படியும், இந்திய கிராம மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து சட்டம்,1973 பிரிவு 9A, புதுச்சேரி நகராட்சிகள் சட்டம் 1973 பிரிவு 15A-ல் அளிக்கப்பட்ட அதிகாரங்கள் மற்றும் இது தொடர்பான விதிகள் மற்றும் ஷரத்துக்கள் படியும் மாநில தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 22ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெறுகிறது," என்று தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

  இதனால் புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 23ஆம் தேதி வெளியிட்ட நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துக்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பான அறிவிக்கையை திரும்பப் பெற்றுள்ளது. இதையடுத்து புதிய இட ஒதுக்கீடு விவரம் வெளியாகிறது.

  அதன்படி புதுச்சேரி நகராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் மற்றும் பதவிகளை அளித்தல் மற்றும் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்தல் ஆகியவை 1996-ன் 3-வது விதியின் படியும், புதுச்சேரி, மாநில தேர்தல் ஆணையம், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 5 நகராட்சிகளுக்கான பதவிகளுக்கு அட்டவணை வகுப்பினர், அட்டவணை வகுப்பு பெண்கள், பொது பெண்கள் மற்றும் பொதுப்பிரிவுகளுக்கான இட ஒதுக்கீடு பற்றிய புதிய அறிவிக்கையை நேற்று இரவு புதுச்சேரி மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி புதுச்சேரி மற்றும் காரைக்கால் நகராட்சிகள்- பெண்களுக்கும் (பொது), உழவர்கரை மற்றும் மாஹே நகராட்சிகள் பொது ஒதுக்கீட்டிலும், ஏனாம் நகராட்சி- அட்டவணை இனத்தவருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரி, உழவர்கரை, காரைக்கால், மாஹே, ஏனாம் நகராட்சிகளிலுள்ள கவுன்சிலர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு பட்டியல்களும் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த மாதம் 22ஆம் தேதி உள்ளாட்சித்தேர்தல் நடத்துவதற்காக வெளியிடப்பட்ட அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ள நிலையில், புதிய தேர்தல் அட்டவணை அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

 9. ஹிட்லர் bbc

  சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த கைதிகளை சுட்டுக் கொல்லவும் பிறரை சைக்லான் - பி நச்சுக் காற்றை செலுத்திக் கொல்லவும் ஜோசஃப் எஸ் எனும் அந்த நபர் உடந்தையாக இருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 10. ஆ.விஜய் ஆனந்த்

  பிபிசி தமிழுக்காக

  விசிக தலைவர் தொல். திருமாவளவன்

  தமிழ்நாடு முழுவதும் `ஆபரேஷன் டிஸ்ஆர்ம்' என்ற பெயரில் ரவுடிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்து கொடூர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 28