இணையவழி குற்றம்

 1. நடராஜன் சுந்தர்

  பிபிசி தமிழுக்காக

  ஆன்லைன் மோசடி

  அந்த பெண்ணை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிரான்ஸ் நாட்டில் அதிக சம்பளத்துடன் மேலாளர் பதவி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பிறகு பல்வேறு காரணங்களைக் கூறி ரூ. 5.25 லட்சம் வரை சந்தேக நபர் பெற்றுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 2. எம்.ஏ.பரணிதரன்

  பிபிசி தமிழ்

  ஆன்லைன் மோசடிகளில் இருந்து தப்புவது எப்படி

  நுனிநாக்கு ஆங்கிலம் அல்லது காதல் ரசம் சொட்டும் மொழிகளில் பேசி இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் எளிதில் வசப்படக்கூடிய பெண்கள் அல்லது ஆண்களை தங்களுடைய இலக்காக்குகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 3. எம்.ஏ. பரணிதரன்

  பிபிசி தமிழ்

  கோப்புப் படம்

  வேகமாக வளர்ந்து வரும் இன்டர்நெட் உலகில், அரசாங்கமே ரொக்கப் பரிவர்த்தனையை தவிருங்கள் - ஆன்லைன் பரிவர்த்தனையை செய்யுங்கள் என ஊக்குவிக்கிறது. ஆனால், இதைப் பயன்படுத்தியே மோசடிகளும் தடையின்றி தொடருவதுதான் வேதனை தரும் விஷயம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 4. Video content

  Video caption: ஆன்லைனில் கேமரா வாங்க முயன்று 22 லட்சத்தை இழந்த மாணவர்

  ஆன்லைனில் கேமரா வாங்க முயன்று 22 லட்சத்தை இழந்த மாணவர்

 5. பேஸ்புக்கில் பெண் என நினைத்து பழகியவர் ஆண் என்று தெரிந்ததும் கொலை செய்த இளைஞர் கைது

  கைது
  Image caption: காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள காஞ்சிபுரம் முருகன்

  பேஸ்புக்கில் பெண் என்று அடையாளப்படுத்திக் கொண்டு பழகியவர் ஆண் என்று தெரிந்ததால் அவரை கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மேலக்கரந்தை சுடுகாட்டுக்கு அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக வந்த தகவலையடுத்து. மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

  மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் இருந்த கண்ணாணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் செல்போன் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவற்றை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

  அதில் இறந்தவர் விளாத்திகுளம் அருகே உள்ள மேலஈரால் பகுதியை சேர்ந்த முருகன் (28) என்பதும், அவரை கொலை செய்தது காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் பகுதியைச் சேர்ந்த் முருகன் (24) என்பதும் தெரியவந்தது.

  முருகன் கொலை குறித்து கைது செய்யப்பட்ட முருகனிடம் போலீசார் நடத்திய விசரணையில், இறந்து போன முருகன் அமுதா என்ற பெண் பெயரில் முகநூல் கணக்கு ஒன்று உருவாக்கி வைத்துள்ளார்.

  அந்த முகநூல் வழியாக காஞ்சிபுரம் மாவட்டம் முருகன் விளாத்திகுளத்தை சேர்ந்த முருகனிடம் பெண் என்று நினைத்து பேஸ்புக் வழியாக பழகி வந்துள்ளார்.

  பின்னர் இருவரும் செல்போன் நம்பர் பரிமாறிக் கொண்டுள்ளார்.; காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த முருகனிடம் விளாத்திகுளத்தை சேர்ந்த முருகன் செல்போனில் பெண் குரலில் பேசி வந்துள்ளார்.

  இருவரும் காதலர் தினத்தன்று சந்திக்க திட்டமிட்டு காஞ்சிபுரத்தை சேர்ந்த முருகன் எட்டையாபுரம் வந்துள்ளார்.

  எட்டயபுரத்தில் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தான் பேசிய பழகி வந்த நபர் பெண்ணல்ல ஆண் என்பது காஞ்சிபுரம் முருகனுக்கு தெரிய வந்தது.

  உடனே முருகன் தன்னுடைய சொந்த ஊருக்குத் திரும்புவதாக கூறி கிளம்பியபோது, அவருடன் சமரசம் பேசி தன்னுடன் அழைத்துச் சென்ற ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

  இந்த நிலையில் விளாத்திகுளத்தை சேர்ந்த முருகன் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகனை மிரட்டி மீண்டும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வற்புறுத்தி அழைத்துள்ளார்.

  ஆனால் முருகன் மறுத்துவிடவே இருவரும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வீடியோவை உனது குடும்பத்திற்கு அனுப்பி விடுவதாக முருகனை மிரட்டியதாக கூறப்படுகிறது.

  இதனால் ஆத்திரம் அடைந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த முருகன் எப்படியாவது விளாத்திகுளத்தை சேர்ந்த முருகனை கொலை செய்துவிட்டு அவனது செல்போனில் உள்ள ஆபாச வீடியோவை அழித்து விட வேண்டும் என திட்டமிட்டு குளிர் பானத்தில் விஷத்தை ஊற்றி வைத்துள்ளார். இருவரும் எட்டயபுரம் அருகே உள்ள மேலக்கரந்தை சுடுகாட்டு பகுதிக்கு சென்று மதுபானம் அருந்தியுள்ளனர்.

  அப்போது விஷம் கலந்த குளிர்பானத்தை காஞ்சிபுரம் முருகன் விளாத்திகுளம் முருகனுக்கு கொடுத்துள்ளார்.அதை குடித்த முருகன் மயக்கத்தில் இருந்துள்ளார். அப்போது காஞ்சிபுரத்தை சேர்ந்த முருகன் அருகில் இருந்த கல்லை முருகனின் தலையில் போட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். கொலை செய்த இடத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த முருகன் தனது மணி பர்ஸ்சை தவற விட்டு சென்றுள்ளார்.

  முருகன் தனது வீட்டிற்கு சென்ற போது தன்னுடைய மணி பர்ஸ்சை தவறவிட்டு வந்ததை அறிந்து, அதை எடுப்பதற்காக மீண்டும் மறுநாள் எட்டயபுரம் அருகே உள்ள மேலக்கரந்தை சென்றபோது அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

 6. விஷ்ணுப்ரியா ராஜசேகர்

  பிபிசி தமிழ்

  பெண்

  "`டேட்டா எகானமி` அதாவது தரவுகளை அடிப்படையாக கொண்ட பொருளாதாரம் ஒன்று இயங்குகிறது. எனவே பங்குதாரர்களால் தரவுகள் பணமாக்கப்படுவது மட்டுமல்லாமல் அது பல சமயங்களில் தவறாகவும் பயன்படுத்தப்படுகிறது," என்கிறார் டகல்.

  மேலும் படிக்க
  next
 7. பிரபுராவ் ஆனந்தன்

  பிபிசி தமிழுக்காக

  கணினி

  "அறியாமை மற்றும் பேராசை இந்த இரண்டு காரணங்களால் தான் ஆன்லைன் மோசடிகள் அதிகம் நடைபெறுகிறது." என்கிறார் எஸ்.பி அர்ஜுன் சரவணன்.

  மேலும் படிக்க
  next
 8. பெகாசஸ் விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

  பெகாசஸ்
  Image caption: என்எஸ்ஓ என்ற இஸ்ரேலி நிறுவனத்தின் தயாரிப்பான பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி இந்தியா முக்கிய நபர்களை உளவு பார்த்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

  பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தி உளவு பார்த்ததாக இந்திய அரசுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  முன்னதாக, இந்த விவகாரத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமிக்க உத்தரவிடும்படி சிலர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

  அவற்றை நேற்று விசாரித்த இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா அடங்கிய அமர்விடம், இதுபோன்ற தகவல்களை பொதுவெளியில் வெளியிடுவது தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும். என்று மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறினார்.

  வேண்டுமானால் இந்த விவகாரத்தில் தவறான தகவல்கள் பரவுவதை தவிர்க்கும் விதமாக சிறப்புக் குழுவை மத்திய அரசு நியமிக்க தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார். இதுபோன்ற விவகாரத்தில் தேச நலனுக்கு எது தேவையோ அதை மட்டுமே அரசு செய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.

  ஆனால், விசாரணையின் கடைசிவரை பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி சாமானியர்களையும் முக்கிய பிரமுகர்களையும் அரசு வேவு பார்த்ததாக என்ற விவரத்தை அவர் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தவில்லை.

  இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் அரசு ஏன் ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யாமல் தவிர்க்கிறது? என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அரசு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யாவிட்டால், அடுத்ததாக இந்த விவகாரத்தில் குழுவை அமைக்க மனுதாரர்கள் விடுக்கும் கோரிக்கை மீது மட்டுமே விசாரணை நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

  இதைத்தொடர்ந்து இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, மனுதாரர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். ஆட்சியில் இருப்பவர்கள் மனுக்களில் கோரியுள்ளது போல எந்த அளவுக்கு தகவல்களை நீதிமன்றத்தில் பகிர்ந்து கொள்ள முடிவெடுக்கிறார்கள் என்பதை அந்த பதிலை வைத்துப் பார்க்கலாம் என்று தலைமை நீதிபதி கூறினார்.

  அப்போது குறுக்கிட்ட சொலிசிட்டர் ஜெனரல், "இதுபோன்ற தகவல்களை பொதுவெளியில் தெரிவிக்க முடியாது. வேண்டுமானால் ஒரு குழு நியமிக்கப்பட்டால் அதன் முன்பு சில தகவல்களை வரம்புக்கு உட்பட்டு தெரிவிக்கிறோம்," என்று கூறினார்.

  இதையடுத்து தலைமை நீதிபதி, "நாங்களும் உங்களிடம் எல்லா நுட்பமான தகவல்களையும் எதிர்பார்க்கவில்லை. அதற்கு உங்களை நாங்கள் கட்டாயப்படுத்தவும் இல்லை. நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். உங்களுடைய பதிலை அதில் தெரிவியுங்கள்," என்று கூறினார்.

  அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் மூத்த தலைவரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான கபில் சிபல், "தேச பாதுகாப்பு தொடர்பான தகவல்களை மனுதாரர்களும் கோரவில்லை. பெகாசஸ் என்ற தொழில்நுட்பத்தை இந்திய அரசு பயன்படுத்தியதா என்பதை அறியவே விரும்புகிறோம்," என்று தெரிவித்தார்.

  இதைத்தொடர்ந்து இரு தரப்பு வாதங்களைக் கேட்ட தலைமை நீதிபதி, "சிறப்புக் குழு அமைப்பதா வேண்டாமா என்பதை பின்னர் முடிவு செய்கிறோம். இப்போது மனுக்களை விசாரணைக்கு ஏற்பது பற்றியே விவாதிக்கிறோம். அரசு தரப்பு தனது நிலைப்பாட்டை மனு மூலமாக தெளிவுபடுத்தட்டும். அடுத்த 10 நாட்களில் மீண்டும் இந்த மனுக்களை விசாரிக்கிறோம். அவற்றை ஏற்பது பற்றி அப்போது முடிவெடுக்கிறோம்," என்று குறிப்பிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

 9. பிற கிரிப்டோசிகரன்சிகளை விட பிட்காயின் மிகவும் பிரபலமானதாக உள்ளது.

  பணத்தைத் திருடிய ஹேக்கர் பாலி நெட்வொர்க் எனும் நிறுவனத்திடமிருந்து திருடிய 600 மில்லியன் டாலர் மதிப்பிலான கிரிப்டோகரன்சிகளில் 260 மில்லியன் டாலர் (சுமார் 2000 கோடி இந்திய ரூபாய்) பணத்தை திருப்பி அளித்துள்ளார் .

  மேலும் படிக்க
  next
 10. Naomi Baker/Getty Images

  முன்னதாக டோக்யோ ஒலிம்பிக்கின் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் சீனாவின் ஹீ பிங்ஜியவோவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார் இந்தியாவின் பி.வி. சிந்து

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 7