இலங்கை நாடாளுமன்ற தேர்தல் 2020

 1. இலங்கை

  11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படை தளபதிக்கு எதிரான வழக்கை தொடர முடியாது என அறிவித்தது, கொலை குற்றத்திற்காக தண்டனை வழங்கப்பட்ட முன்னாள் எம்.பி துமிந்த சில்வாவுக்கு, ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியது போன்றவை, நீதி செயல்முறை மீதான நம்பிக்கையை இல்லாது செய்வதாக மிச்செல் பெச்சலெட் தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 2. இலங்கை நிதி ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் எம்பி பதவியை ராஜநாமா செய்தார்

  மப்றூக், இலங்கை

  இலங்கை
  Image caption: நாடாளுமுன்ற பொதுச் செயலாளர் தம்மிக தஸநாயக்கவிடம், இன்று திங்கட்கிழமை தனது ராஜிநாமா கடிதத்தை கப்ரால் ஒப்படைத்தார்.

  லங்கையின் நிதி ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜநாமா செய்துள்ளார்.

  நாடாளுமுன்ற பொதுச் செயலாளர் தம்மிக தஸநாயக்கவிடம், இன்று திங்கட்கிழமை தனது ராஜிநாமா கடிதத்தை கப்ரால் ஒப்படைத்தார்.

  மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் பொதுஜனபெரமுன கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக 2020ஆம் ஆண்டு அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்ட நிலையிலேயே, தற்போது அந்தப் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

  மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் 2006ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் பதவி வகித்தார்.

  பின்னர், கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பிறகு அமைந்த அரசாங்கத்தில் தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட கப்ரால் -நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சராகவும் நியமனம் பெற்றார்.

  இதேவேளை, மத்திய வங்கியின் ஆளுநர் பதவியைப் பொறுப்பேற்பதற்காகவே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வதாக அஜித் நிவாட் கப்ரால் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவி வகித்து வரும் பேராசிரியர் டப்ளியு.டி. லக்ஷ்மன் தனது பதவியிலிருந்து இம்மாதம் 14ஆம் தேதி விலகவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்.

  பேராசிரியர் லக்ஷ்மன் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார்.

  தற்போது 80 வயதாகும் பேராசிரியர் லக்ஷ்மன் ஓய்வுபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

  இது இவ்வாறிருக்க, அஜித் நிவாட் கப்ரால் ராஜிநாமா செய்தமையினை அடுத்து ஏற்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்துக்கு ஜயந்த கெட்டாகொட நியமிக்கப்படவுள்ளார் என பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

  தற்போதைய அரசாங்கத்தில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஜயந்த கெட்டாகொட; மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரான தற்போதைய நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் ஆகுவதற்காக, தனது பதவியை சில மாதங்களுக்கு முன்னர் ராஜிநாமா செய்திருந்தார்.

  இந்த நிலையில், மீண்டும் ஜயந்த கெட்டாகொட நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 3. இலங்கை முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்

  இலங்கை
  Image caption: மங்கள சமரவீர, இலங்கை முன்னாள் அமைச்சர்

  இலங்கையின் மூத்த அரசியல்வாதியான முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர (65) இன்று காலமானார்.

  கோவிட் தொற்று காரணமாக கடந்த 13ம் தேதி கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மங்கள சமரவீர, தீவிர சிகிச்சை பிரிவில் பின்னர் சேர்க்கப்பட்டிருந்தார்.

  இந்த நிலையில் அவர் இன்று அதிகாலை காலமானதாக மருத்துவமனை தகவல்கள் உறுதிப்படுத்தின.

  இலங்கையின் தென் பகுதியான மாத்தறை மாவட்டத்தில் 1956ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி மங்கள சமரவீர பிறந்தார்.

  1983ம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடாக, தனது அரசியல் வாழ்க்கையை மங்கள சமரவீர ஆரம்பித்திருந்தார். அதனைத் தொடர்ந்து,

  1989ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்றார்.

  1994ம் ஆண்டு சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவின் தலைமையில் ஆட்சி அமைத்த அரசாங்கத்தில் தபால் மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சராக மங்கள சமரவீர நியமிக்கப்பட்டிருந்தார்.

  2004ம் ஆண்டு துறைமுகம், விமான சேவைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சராகவும் அவர் கடமையாற்றியிருந்தார்.

  2005ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரையான காலப் பகுதியிலும், 2015ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையான காலப் பகுதியிலும் மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராக கடமையாற்றியிருந்தார்.

  2017ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை இலங்கையின் நிதி அமைச்சராக, மங்கள சமரவீர செயற்பட்டிருந்தார். சுமார் 35 வருடங்களுக்கு மேல் அரசியல் அனுபவத்தை கொண்ட மங்கள சமரவீர, 2019ம் ஆண்டு அரசியலிலிருந்து ஓய்வு பெற்ற நிலையிலும், சில அரசியல் செயற்பாடுகளை இறுதித் தருணங்களில் முன்னெடுத்து வந்திருந்தார்.

  இவ்வாறான நிலையிலேயே, கோவிட் தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மங்கள சமரவீர, இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

 4. இலங்கை அமைச்சரவையில் திடீர் மாற்றம்

  இலங்கை
  Image caption: கோட்டாபய ராஜபக்ஷ

  இலங்கை அமைச்சரவையில் இன்று (ஆகஸ்ட் 16) சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

  அமைச்சரவை திருத்தத்திற்கு அமைய, 6 அமைச்சு பொறுப்புக்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

  அத்துடன், புதியதொரு அமைச்சு பொறுப்பும் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  7 புதிய அமைச்சர்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று சத்திய பிரமாணம் செய்துக்கொண்டனர்.

  மேலும் விவரம் அறிய இங்கே சொடுக்கவும்.

 5. ரஞ்சன் அருண்பிரசாத்

  பிபிசி தமிழுக்காக

  ரிஷாட் பதியூதீன்

  18 வயதுக்கு குறைவான சிறுமியொருவரை இரவு நேரத்தில் தனியான அறையில் பாதுகாப்பற்ற முறையில் அடைப்பது தண்டனைக்குரிய குற்றம். இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், குற்றம்சாட்டப்படும் நபர்களுக்கு 2 முதல் 10 வருடங்கள் வரை தண்டனை கிடைக்கலாம்.

  மேலும் படிக்க
  next
 6. இலங்கை எரிபொருள் விலை உயர்வுக்கு வித்தியாசமாக எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்கட்சிகள் எம்.பி.க்கள்

  இலங்கை அமைச்சர் SJB Media Unit

  இலங்கையில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்திற்கு தங்களுடைய வாகனங்களில் வருகைத் தவிர்த்து, டிராக்டர்கள், டிரக்குகள், ஆட்டோ போன்ற வாகனங்களில் வந்து தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர்.

  முன்னதாக, வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை, பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, சபாநாயகரிடம் கையளித்தது. எரிபொருள் விலை அதிகரிப்பை முன்னிலைப்படுத்தி, அமைச்சருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

  இலங்கை அமைச்சர் SJB Media Unit
  இலங்கை அமைச்சர் SJB Media Unit
  இலங்கை அமைச்சர் SJB Media Unit
  இலங்கை அமைச்சர் SJB Media Unit
  இலங்கை அமைச்சர் SJB Media Unit
 7. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  செல்வப்பெருந்தகை

  தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவராக கு.செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் காங்கிரஸ் கட்சிக்குள் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது?

  மேலும் படிக்க
  next
 8. சீமான்

  "நாம் மூன்றாவது பெரிய கட்சி என சிலரை போல நாமே அறிவித்துக் கொள்ளவில்லை. தேர்தல் ஆணையம்தான் கூறியிருக்கிறது. கோட்பாடு அளவில், கொள்கை அளவில் சமரசமின்றி நாம் போட்டியிடுகிறோம். என்றும் நாட்டுக்கும் மக்களுக்கும் உண்மையாக இருப்போம். உறுதியாக நாம் வெல்வோம். இனி வரும் காலங்களில் நம்மை நாமே செதுக்கிக் கொண்டு செயல்படுவோம்", என்கிறார் சீமான்.

  மேலும் படிக்க
  next
 9. மமதா பானர்ஜி

  மமதா பானர்ஜி தனி ஒரு நபராக தன்னை மையப்படுத்தி இந்த முறை தேர்தல் பரப்புரையை செய்தார். தமிழ்நாட்டில் ஜெயலலிதா அதிமுக பொதுச்செயலாளராக இருந்தபோது அவர் மேற்கொண்ட தேர்தல் பரப்புரைகள், அவரை மையப்படுத்தியதாகவே இருக்கும். அதுபோலவே, மமதா பானர்ஜியின் பரப்புரை அமைந்ததாக நான் பார்க்கிறேன் என்கிறார் பிபிசி தமிழ் சேவை ஆசிரியர் தங்கவேல்.

  மேலும் படிக்க
  next
 10. தேர்தல் ஆணையம்

  தேர்தல் பரப்புரையின்போது கொரோனா பரவலை தடுக்கும் வழிமுறைகளை சரியாக கண்காணிக்க தேர்தல் ஆணையம் தவறி விட்டதாக வழக்கு ஒன்றில் சென்னை உயர் நீதிமன்றம் தனது அதிருப்தயை பதிவு செய்தது. கொல்கத்தா உயர் நீதிமன்றமும் மேற்கு மாநிலத்தில் தேர்தல் பரப்புரைகளின்போது கொரோனா வழிகாட்டுதல்கள் சரியாக பின்பற்றப்படவில்லை என்று கடுமையான அதிருப்தியைப் பதிவு செய்தது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 7