இந்தியா

 1. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இந்தியா வர அழைப்பு விடுத்த பிரதமர் மோதி

  அமெரிக்க அதிபர் ஜோ பைடனை இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் நரேந்திர மோதி அழைப்புவிடுத்திருப்பதாக மத்திய வெளிவிவகார அமைச்சக செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஸ்ரீங்கலா கூறியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை கூறுகிறது.

  இந்திய பிரதமர் நரேந்திர மோதி மூன்று நாள் சுற்று பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கே குவாட் உச்சி மாநாட்டிலும் கலந்து கொண்டார்.

  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இந்திய பிரதமர் மோதி ஒருவரையொருவர் நேரில் சந்தித்துக் கொள்வது இதுவே முதல்முறை.

  இந்த சந்திப்பின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இந்தியா வர அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோதி. பைடனும் அதை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், விரைவில் அமெரிக்க அதிபரின் இந்திய வருகையை எதிர்பார்ப்பதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செயலர் ஹர்ஷ் வர்தன் ஸ்ரீங்கலா கூறியுள்ளார்.

 2. நரேந்திர மோதி & ஜோ பைடன்

  இந்தியா கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியைத் தொடங்கவிருப்பதற்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

  Follow
  next
 3. விகாஸ் பாண்டே

  பிபிசி நியூஸ், டெல்லி

  மோதி

  அண்மையில் அறிவிக்கப்பட்ட ஆக்கஸ் என்று அழைக்கப்படும் சர்ச்சைக்குரிய உடன்பாடு தொடர்பான தீவிரமான விவாதம் ஏற்பட்டிருக்கும் நிலையில், குவாட் குழு மீண்டும் ஒரு சந்திப்பை வாஷிங்டனில் நடத்துகிறது.

  மேலும் படிக்க
  next
 4. அரவிந்த் சாப்ரா

  பிபிசி செய்தியாளர்

  அமரீந்தர்

  "என்னை கட்சியிலிருந்து வெளியேற்றுங்கள், நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை. நான் அவரை (நவஜோத் சித்து) (முதல்வர்) ஆக விடமாட்டேன்" என்று கூறியிருக்கிறார் பஞ்சாபின் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்.

  மேலும் படிக்க
  next
 5. பைடன் மற்றும் மோதி

  வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் பைடனை சந்தித்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி; இருநாட்டு தலைவர்களும் பல முக்கிய விஷயங்கள் தொடர்பாக ஆலோசனைகளை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  Follow
  next
 6. 3 தீவிரவாதிகளைக் கொன்ற இந்திய ராணுவம்

  இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் 3 தீவிரவாதிகளை இந்திய ராணுவம் கொன்றதாக அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது ஏ.என்.ஐ. செய்தி முகமை.

  கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டில் உள்ள யூரி அருகே உள்ள ராம்பூர் செக்டாரில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தங்கள் டிவிட்டர் பதவில் கூறியுள்ளது ஏ.என்.ஐ.

  இந்த மூவரும் பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் இருந்து அண்மையில் இந்தியப் பக்கத்துக்கு ஊடுருவி வந்தவர்கள் என்றும், கொல்லப்பட்டவர்களிடம் இருந்து மூலம் ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் ஐந்து, பிஸ்டல்கள் எட்டு, கையெறி குண்டுகள் எழுபது ஆகியவை கைப்பற்றப்பட்டதாகவும் அரசுத் தரப்பு தெரிவித்ததாக கூறியுள்ளது ஏ.என்.ஐ.

 7. பெகசாஸ் விவகாரத்தை விசாரிக்க தனி நிபுணர் குழு - உச்ச நீதிமன்றம்

  View more on twitter

  பெகாசஸ் உளவு விவகாரத்தை விசாரிக்க, ஒரு தனி தொழில்நுட்ப நிபுணர் குழுவை அமைக்கவிருப்பதாக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என் வி ரமணா கூறியுள்ளதாக என ஏ.என்.ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

  இந்த குழுவில் இணைய சில நிபுணர்கள் சொந்த காரணங்களை முன்னிட்டு மறுத்ததாகவும், எனவே தான் நிபுணர் குழு அமைப்பது தொடர்பான உத்தரவைப் பிறப்பிக்க தாமதமானதாக கூறியுள்ளதாக பார் அண்ட் பெஞ்ச் வலைதளத்தில் கூறப்பட்டுள்ளது.

  சமீபத்தில் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக, தேசிய பாதுகாப்பு காரணங்களால் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய முடியாது என உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்தது இந்திய அரசு.

 8. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டுக்கு அங்கீகாரம் வழங்கிய பிரிட்டன் - ஆனாலும் தொடரும் குழப்பம்

  கொரோனா
  Image caption: இந்தியாவில் விரிவான பயன்பாட்டில் உள்ளது கோவிஷீல்டு கொரோனா வைரஸ் தடுப்பூசி

  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளது பிரிட்டன் அரசு. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம்,

  ஆஸ்ட்ராசெனிகா நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசி மருந்துதான் கோவிஷீல்டு.

  இந்த தடுப்பூசிக்கு பிரிட்டன் அங்கீகாரம் மறுத்த விவகாரம், இந்தியாவில் கொந்தளிப்பை உருவாக்கியது.

  இந்தியாவில் இதுவரை 721 மில்லியன் டோஸ்கள் அளவுக்கு கோவிஷீல்டு மருந்து பயனர்களுக்கு போடப்பட்டுள்ளது.

  இந்த தடுப்பூசி போட்டுக் கொண்டு தங்களுடைய நாட்டுக்குள் வரும் பயணிகளை 10 நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு வரும் 4ஆம் தேதி முதல் உட்படுத்தப்படுவார்கள் என்று பிரிட்டன் அரசு தெரிவித்தது.

  ஆனால், இந்த நடவடிக்கை பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்றும் கோவிஷீல்டு இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் சுய தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசு கூறியது.

  இந்த விவகாரம் குறித்து பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ்ஸுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியிருந்தார்.

  இந்த விவகாரத்தில் இந்தியாவை பாரபட்சமாக நடத்தும் போக்கு தொடர்ந்தால் அதேபோல இந்தியாவும் எதிர்வினையாற்ற நேரிடும் என்று இந்தியா தெரிவித்தது. இந்த நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளதாக பிரிட்டன் அரசு கூறியுள்ளது.

  இது தொடர்பாக சமீபத்தில் வெளியிட்ட விதியிலும் அந்நாட்டு அரசு திருத்தம் செய்தது. அதே சமயம், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட வேண்டுமா என்பதை பிரிட்டன் அரசு தெளிவுபடுத்தவில்லை.

 9. ஆ.விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

  " ஒன்பது மாவட்டங்களிலும் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. தி.மு.கவோடு கூட்டணி உறவு சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக சமரசமாகச் சென்றோம். நாங்கள் 4 இடங்களைக் கேட்டால் அதில் ஓர் இடத்தை ஒதுக்கினார்கள். சில இடங்களில் அதையும் தரவில்லை."

  மேலும் படிக்க
  next
 10. கொரோனாவால் இறப்பவர்களுக்கு மாநிலங்கள் மூலம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு: இந்திய அரசு

  கொரோனா மரணங்கள்

  இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பவரின் குடும்பத்துக்கு இழப்பீடாக மாநில அரசுகள் சார்பில் ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என்று இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது.

  இதற்கு முன்பு ஏற்பட்ட கொரோனா உயிரிழப்புகளுக்கு மட்டுமின்றி, எதிர்காலத்தில் கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டாலும் இந்த தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

  இது தொடர்பாக மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கொரோனா நிவாரணப்பணிகள் அல்லது முன்னேற்பாடு நடவடிக்கையின்போது யாராவது இறந்தாலும் அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

  அவர்களுடைய மரணத்துக்கு காரணம் கொரோனா தான் என்பது இந்திய சுகாதார அமைச்சக வழிகாட்டுதலின்படி வழங்கப்பட்டிருந்தால் இந்த தொகையை இறந்தவர்களின் குடும்பங்கள் பெறலாம் எஎன்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

  இந்த காப்பீடு கோரல், சரிபார்ப்பு, தொகை வழங்கல் போன்ற நடவடிக்கைகளை எளிதான வகையிலும் விரைவாகவும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதற்கான கோரல்கள் 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த விவகாரத்தில் குறைகள் ஏதேனும் இருந்தால், அதை மாவட்ட கூடுதல் ஆட்சியர், தலைமை மருத்துவ அதிகாரி, கூடுதல் மருத்துவ அதிகாரி, மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தலைவர், அந்த துறையில் நிபுணத்துவம் பெற்றவர் அடங்கிய மாவட்ட அளவிலான குழு கையாளும் என்று மத்திய அரசு பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளது.

  மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சாதகமாக இழப்பீடு கோரல் முடிவை அந்த குழு வழங்காவிட்டால், அது ஏன் என்பதை எழுத்துபூர்வமாக அந்த குழு பதிவு செய்ய வேண்டும் என்றும் பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  இந்தியாவில் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது அப்போது முதல் இதுவரை நான்கரை லட்சத்துக்கும் அதிகமான கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

பக்கம் 1 இல் 100