இலக்கியம்

 1. சூப்பர் மேன்

  சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களில் அதிக பன்முகத் தன்மையை கொண்டுவர டிசி நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

  மேலும் படிக்க
  next
 2. மகாராஜா

  ஆங்கிலேயர்கள் தங்கள் காலத்தில், உள் நாட்டு இளவரசர்களைக் கோழைகளாகவும் அரசாட்சியில் கவனமின்றி சிற்றின்பத்துக்கு அடிமையானவர்களாகவும் இருந்ததாகவே சித்தரித்திருந்தார்கள்.

  மேலும் படிக்க
  next
 3. சாஃபோ லெஸ்பியன்

  "சாஃபோ பெரும்பாலும் ஓரினச்சேர்க்கையாளராக இருந்தார். பாலியல் நோக்குநிலை எதுவாக இருந்தாலும், காதல் அனுபவத்தை வெளிப்படுத்தி பிரபலமடைந்தார். காதல் ரசம் சொட்டச் சொட்ட அவர் தன் பாலியன பெண்களின் அழகியலை விவரித்தார்," என்று வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 4. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  சங்க இலக்கியங்கள்.

  சங்க இலக்கியங்களை இந்த கால தலைமுறையினரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிதாக சந்தி பிரித்து செம்பதிப்புகளாக வெளியிடுவது என்பது ஒரு அறிவிப்பு. திராவிடக் களஞ்சியம் என்பது மற்றொரு அறிவிப்பு.

  மேலும் படிக்க
  next
 5. அ.தா. பாலசுப்ரமணியன்

  பிபிசி தமிழ்

  சுகிர்தராணி

  பெண் என்பவள் வீட்டுக்குள்ளே இருக்கவேண்டும், கணவனே கண்கண்ட தெய்வம் என்று போற்றவேண்டும் என்ற இந்துத்துவத்தின் பெண் குறித்த பார்வையும் இதற்குப் பின்னால் இருக்கிறது என்கிறார் சுகிர்தராணி.

  மேலும் படிக்க
  next
 6. செளதிக் பிஸ்வாஸ்

  இந்தியா செய்தியாளர்

  பருல் காக்கர்

  இந்த கவிதை ஒரு முரண்பட்ட நையாண்டி போன்றது. அவர் மோதி என்று பெயரிடவில்லை. ஆனால் அவரது வேதனையும் கோபமும் தெளிவாக தெரிகிறது.

  மேலும் படிக்க
  next
 7. மதுரையில் கலைஞர் நூலகம், சென்னையில் புதிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை

  தமிழ்நாடு அரசு அறிவிப்பு

  மு.கருணாநிதி

  சென்னையில் 250 கோடி ரூபாய் செலவில் புதிதாக பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையும் மதுரையில் 70 கோடி ரூபாய் செலவில் புதிய நூலகமும் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவச பயணமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி தமிழ்நாடு அரசு ஆறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்ட்டிடியூட் வளாகத்தில் 250 கோடி ரூபாய்செலவில் 500 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைஅமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தைப் போல மதுரையில் இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என்றும் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இலக்கிய மாமணி விருது வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் மூன்று பேருக்கு வழங்கப்படும் இந்த விருதில், பாராட்டுப் பத்திரமும் ஐந்து லட்சம் ரூபாய் சன்மானமும் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அதேபோல, அகில இந்திய அளவில் சாகித்ய அகாதெமி,ஞானபீடம் விருதுகளைப் பெற்றவர்களுக்கு, அவர்கள் சொந்த மாவட்டத்தில் அல்லது விரும்பிய மாவட்டத்தில் வீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  டெல்டா மாவட்டங்களில் விவசாய விளை பொருட்கள் மழையால் சேதமடைவதைத் தடுப்பதற்காக திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, கோட்டூர், நீடாமங்கலம், நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி, வலங்கைமான் ஆகிய இடங்களில் 16 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக்கிடங்குகள் கட்டப்படும் என்றும் தானியங்கள், பயறு வகைகளை உலரவைக்க 54 உலர் களங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ஏற்கனவே பெண்களுக்கு இலவச பயணம் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோருக்கும் இனி கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கு முடிவுக்குவந்ததும் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

 8. Video content

  Video caption: தமிழ் பாடலாசிரியர் வைரமுத்து ஓஎன்வி இலக்கிய விருது சர்ச்சை: மறுபரிசீலனை முடிவு ஏன்?

  தமிழ் சினிமாவின் முன்னணி பாடகர்களில் ஒருவரான வைரமுத்துவுக்கு ஓஎன்வி இலக்கிய விருது வழங்குவதில் சர்ச்சை எழுந்துள்ளது. மறுபரிசீலனை முடிவு ஏன்? என்ன நடந்தது?

 9. வைரமுத்து

  இந்த முறை பரிசு பெறுபவரைத் தேர்வுசெய்வதற்கான தேர்வுக் கமிட்டியில் கவிஞர் பிரபா வர்மா, மலையாள பல்கலைக்கழக துணை வேந்தர் அனில் வல்லத்தோள், எழுத்தாளர் ஆலங்கொடே லீலா கிருஷ்ணன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த அமைப்பின் தலைவராக இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் செயல்பட்டுவருகிறார்.

  மேலும் படிக்க
  next
 10. வைரமுத்து

  சில ஆண்டுகளுக்கு முன்பு வைரமுத்து மீது பாலியல் சீண்டல் புகார் சுமத்தியிருந்தவர் திரைப்பட பாடகி சின்மயி. மீ டூ இயக்கம் தமிழ்நாட்டில் எதிரொலித்த காலத்தில் சின்மயி வைரமுத்துக்கு எதிராக சுமத்திய புகார் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அதன் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 5