கருணாநிதி

 1. எம்.ஏ.பரணிதரன்

  பிபிசி தமிழ்

  காமராஜ்

  1963ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காமராஜ் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தபோது, அவருக்கு திராவிடர் கழக தலைவர் ஈ.வெ. ராமசாமி ஒரு தந்தி அனுப்பினார். அதில், காமராஜின் முடிவு அவருக்கு மட்டுமின்றி தமிழக மக்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு ஒப்பானது என்று ஈ.வெ.ரா குறிப்பிட்டார்.

  மேலும் படிக்க
  next
 2. அ.தா.பாலசுப்ரமணியன்

  பிபிசி தமிழ்

  அறிஞர் அண்ணா

  காங்கிரஸ் அல்லாத கட்சி ஒன்றின் சார்பில் இந்தியாவில் முதலமைச்சரான இரண்டாவது தலைவர் அண்ணா. தமிழ்நாட்டில் இடையறாமல் நடந்துவரும் 53 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு அதன் மூலம் அடித்தளம் இட்டவர். நவீன தமிழின் மீது, மக்கள் புழங்கும் தமிழின் மீது அண்ணா செலுத்தியிருக்கும் தாக்கம் அளப்பரியது. பெரிதாக ஆவணமாக்கப்படாதது.

  மேலும் படிக்க
  next
 3. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  அதிமுக திமுக ஜெயலலிதா ஸ்டாலின்

  ஓமந்தூரார் கட்டடம் மருத்துவ நோக்கத்துக்காக கட்டப்படவில்லை. தற்போது புனித ஜார்ஜ் கோட்டையில் ராணுவத்துக்குச் சொந்தமான கட்டடத்தில் வாடகை அடிப்படையில் தலைமைச் செயலகம் இயங்கி வருகிறது.

  மேலும் படிக்க
  next
 4. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  ரானே

  மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்த மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை மகாராஷ்டிர மாநில அரசு கைது செய்துள்ளது. மத்திய அமைச்சர்களை மாநில அரசுகள் கைது செய்தால் என்ன நடக்கும்?

  மேலும் படிக்க
  next
 5. கருணாநிதி பட திறப்பு

  `ஜனநாயக அடிப்படையிலான நிர்வாகத்தை உறுதி செய்வதில் சட்டப்பேரவை சிறப்பான அமைப்பாக உள்ளது" என குறிப்பிட்ட இந்திய குடியரசு தலைவர், பாரதியின் `வானை அளப்போம், கடல் மீனை அளப்போம், சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்' என்ற வரிகளை தமிழில் மேற்கோள் காட்டினார்.

  மேலும் படிக்க
  next
 6. கருணாநிதி

  மதுரை மாவட்டம் நத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான இடத்தில் `கலைஞர் நினைவு நூலகம்' ஒன்றைக் கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. சுமார் 70 கோடி மதிப்பில் 2 ஏக்கர் பரப்பளவில் இந்த நூலகம் அமைய உள்ளது.

  மேலும் படிக்க
  next
 7. நடராஜன் சுந்தர்

  பிபிசி தமிழுக்காக

  கலைஞர் டிவி

  கடலூர் மாவட்டத்தில் 10 ஆண்டுகளாக ஆயிரத்துக்கும் அதிகமான இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படாமல் சமுதாய நலக்கூடத்தில் முடங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருந்தது.

  மேலும் படிக்க
  next
 8. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  ஸ்டாலின்

  இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை டெல்லியில் சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவருக்கு மதுரை குறித்த 'Multiple Facets of My Madurai' என்ற புத்தகத்தை பரிசளித்திருக்கிறார். மனோகர் தேவதாஸின் இந்தப் புத்தகம் எதைப் பற்றியது?

  மேலும் படிக்க
  next
 9. மதுரையில் கலைஞர் நூலகம், சென்னையில் புதிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை

  தமிழ்நாடு அரசு அறிவிப்பு

  மு.கருணாநிதி

  சென்னையில் 250 கோடி ரூபாய் செலவில் புதிதாக பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையும் மதுரையில் 70 கோடி ரூபாய் செலவில் புதிய நூலகமும் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவச பயணமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி தமிழ்நாடு அரசு ஆறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்ட்டிடியூட் வளாகத்தில் 250 கோடி ரூபாய்செலவில் 500 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைஅமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தைப் போல மதுரையில் இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என்றும் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இலக்கிய மாமணி விருது வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் மூன்று பேருக்கு வழங்கப்படும் இந்த விருதில், பாராட்டுப் பத்திரமும் ஐந்து லட்சம் ரூபாய் சன்மானமும் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அதேபோல, அகில இந்திய அளவில் சாகித்ய அகாதெமி,ஞானபீடம் விருதுகளைப் பெற்றவர்களுக்கு, அவர்கள் சொந்த மாவட்டத்தில் அல்லது விரும்பிய மாவட்டத்தில் வீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  டெல்டா மாவட்டங்களில் விவசாய விளை பொருட்கள் மழையால் சேதமடைவதைத் தடுப்பதற்காக திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, கோட்டூர், நீடாமங்கலம், நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி, வலங்கைமான் ஆகிய இடங்களில் 16 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக்கிடங்குகள் கட்டப்படும் என்றும் தானியங்கள், பயறு வகைகளை உலரவைக்க 54 உலர் களங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ஏற்கனவே பெண்களுக்கு இலவச பயணம் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோருக்கும் இனி கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கு முடிவுக்குவந்ததும் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

 10. முரளிதரன் காசி விஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  2006 சட்டமன்றத் தேர்தல்: தி.மு.கவின் முதல் 'மைனாரிட்டி' அரசு அமைந்தது எப்படி?

  2006ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.க. அரசு, ஐந்தாவது முறையாக ஆட்சியில் அமர்ந்தது. ஜெயலலிதா ஏன் ஆட்சியை இழந்தார்? தி.மு.கவுக்கு ஏன் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை? ஒரு பரபரப்பான ஐந்தாண்டுகளின் கதை இது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 6