பாஜக

 1. புதுச்சேரி பாஜக மாநிலங்களவை வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

  நடராஜன் சுந்தர்

  புதுச்சேரி பாஜக மாநிலங்களவை வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளார்.

  புதுச்சேரியில் காலியாக உள்ள ஒரே ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளராக ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவைச் சேர்ந்த செல்வகணபதியை பாஜக மேலிடம் நேற்று அறிவித்தது.

  இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் செல்வகணபதி, முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரி முனுசாமியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

  புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள கோகுலகிருஷ்ணனின் பதவிக்காலம் நிறைவடைவதையொட்டி புதிய உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வரும் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறுகிறது.

  இந்த நிலையில், வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில் யாரும் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்யாததால், பாஜக வேட்பாளர் செல்வகணபதி போட்டியின்றி ராஜ்யசபா எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

  pondicherry bjp
 2. வந்துகொண்டிருக்கும் செய்திபுதுச்சேரி மாநிலங்களவை வேட்பாளரை அறிவித்தது பாஜக

  நடராஜன் சுந்தர், புதுச்சேரி

  மாநிலங்களவை தேர்தல் புதுச்சேரி
  Image caption: செல்வகணபதி

  புதுச்சேரியில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளராக ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவைச் சேர்ந்த செல்வகணபதியை பாஜக மேலிடம் அறிவித்துள்ளது. இந்த பதவிக்கான வேட்பாளராகும் வாய்ப்பை யாருக்கு தருவது என்பதில் ஆளும் என்.ஆர். காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே இழுபறி நீடித்து வந்தது.

  இந்த நிலையில் அந்த வாய்ப்பை பாஜகவிற்கே என்.ஆர். காங்கிரஸ் வழங்கியிருக்கிறது. இதற்கு முதல்வர் ரங்கசாமிக்கு மத்தியில் ஆளும் பாஜக கொடுத்த அழுத்தமே காரணம் என்று கூறப்படுகிறது.

  பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செல்வகணபதி, அக்கட்சியின் பொருளாளருமாக இருப்பவர. முன்னாள் பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

  கட்சி மேலிட அறிவிப்பைத் தொடர்ந்து நாளை அவர் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.

  புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள கோகுலகிருஷ்ணனின் பதவிக்காலம் நிறைவடைவதையொட்டி புதிய உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வரும் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.

  இதில் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்கும் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறவே அதிக வாய்ப்பு உள்ளது.

  ஏனெனில் என்.ஆர்.காங்கிரசிடம் 10 சட்டமன்ற உறுப்பினர்கள், 3 சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள், பா.ஜ.க.வுக்கு 6 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இது தவிர, பா.ஜ.க. ஆதரவு சுயேச்சைகள் 3 பேரும் உள்ளனர்.

  எனவே ஆளும் கூட்டணி எளிதாக வெற்றி பெறுவதற்கே வாய்ப்பு உள்ளது.

  புதுச்சேரி
 3. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலை

  கூட்டணியில் பேச்சுவார்த்தை முடியும் முன்னரே வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க வெளியிட்டதை கூட்டணிக் கட்சியினர் எதிர்பார்க்கவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜ.க இடையேயான இடப்பங்கீடு முடிவுக்கு வந்துவிட்டது.

  மேலும் படிக்க
  next
 4. மு.க.ஸ்டாலின் - ஆர்.என். ரவி.

  நான் இப்போதுதான் பதவியேற்றிருக்கிறேன். இப்போது இங்கே மக்களால் தேர்வுசெ்யயப்பட்ட ஆட்சி நடக்கிறது. அரசை நடத்துவது அரசாங்கம். ஆளுநர் என்பவர் அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கும் அளவுக்குள்தான் செயல்பட முடியும். அதனை மனதில் வைத்து செயல்படுவேன்.

  மேலும் படிக்க
  next
 5. தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்பு

  ஆர்.என்.ரவி
  Image caption: பிரதமர் நரேந்திர மோதியுடன் ஆர்.என்.ரவி - கோப்புப் படம்.

  தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்றுக்கொண்டுள்ளார். ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

  தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதால், நாகாலாந்தின் ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

  ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் நடந்த விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தலைமைச் செயலர் இறையன்பு, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, மத்திய அமைச்சர் எல். முருகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  பிகாரில் உள்ள பாட்னாவில் பிறந்த ஸ்ரீ ரவீந்திர நாராயண் ரவி, 1974 இல் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். கல்லூரி படிப்பை முடித்ததும், சில காலம் பத்திரிகைத் துறையில் பணியாற்றிய இவர், 1976இல் இந்திய காவல் பணியில் சேர்ந்தார். அவருக்கு கேரளா பிரிவு ஒதுக்கப்பட்டது.அங்கு அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட கண்காணிப்பாளர், காவல் துணைத் தலைவர் உட்பட பல்வேறு பதவிகளில் பணியாற்றினார்,

  பின்னர் மத்திய அரசுப் பணிக்கு மாற்றலாகி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார்.மத்திய புலனாய்வுத்துறை பணியின்போது, நாட்டில் சுரங்க மாஃபியாக்கள் உட்பட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு எதிராக பல ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொண்டார்.

  இந்தியாவின் உளவுத்துறையான இன்டலிஜென்ஸ் பியூரோவிலும் இவர் பணியாற்றியுள்ளார்.அந்த பணியில் இருந்தபோது, இவர் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இயங்கி வந்த குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் மூளையாக செயல்பட்டார்.

  உளவுத்துறையில் சிறப்பு இயக்குநராக இருந்தபோது, ஐ.பி இயக்குநராக இருந்தவர் அஜித் தோவல். அவர்தான் தற்போது பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கிறார். அந்த வகையில் தோவலுக்கும் ஆர்.என். ரவிக்கும் நெருக்கமான புரிந்துணர்வு உள்ளது. 2012இல் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பிரதமர் அலுவலகத்தில் மத்திய உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு உளவு அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணிக்காக நியமிக்கப்பட்ட கூட்டு புலனாய்வு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

  2014ஆம் ஆண்டில் மத்தியில் நரேந்திர மோதி தலைமையில் புதிய அரசு அமைந்த சில மாதங்களில், அதே ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி, நாகாலாந்தில் நாகா சமாதான பேச்சுவார்த்தைக்கான மையத்தின் மத்தியஸ்தராக ரவி நியமிக்கப்பட்டார்.

  அதைத்தொடர்ந்து, 2018ஆம் ஆண்டு அக்டோபரில் அவர் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அவர் நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்து வந்தார். பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் அவர் தமிழக ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

 6. பதவி விலகிய முதல்வர் விஜய் ரூபானியுடன், புதிதாக முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட பூபேந்திர பட்டேல் (இடது).

  குஜராத் அரசியலில் திடீர் திருப்பமாக முதலமைச்சர் விஜய் ரூபானி தனது பதவியில் இருந்து விலகுவதாக சனிக்கிழமை அறிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 7. குஜராத் முதல்வரை தேர்வு செய்ய இந்திய அமைச்சர்கள் இருவர் பயணம்

  குஜராத் மாநில பாஜக முதல்வர் விஜய் ரூபானி தனது பதவி விலகல் கடிதத்தை சனிக்கிழமை ஒப்படைத்துள்ள நிலையில், புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக பாஜக மத்தியப் பார்வையாளர்களாக இரண்டு ஒன்றிய அமைச்சர்கள் குஜராத் பயணம் செய்கிறார்கள்.

  அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி, நரேந்திர சிங் தோமர் ஆகிய இருவரும்தான் மத்தியப் பார்வையாளர்களாக குஜராத் செல்கிறவர்கள்.

  புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான பாஜக சட்டமன்றக் கட்சியின் கூட்டம் இன்று நடக்கிறது.

 8. இம்ரான் குரேஷி

  பிபிசி இந்திக்காக

  பிஷப் மார் ஜோசஃப் கல்லாரங்கட்

  கேரளாவில் கிறிஸ்தவர்கள் 18 சதவீதம் இஸ்லாமியர்கள் 26 சதவிகிதம் என ஒட்டுமொத்தமாக சுமார் 44 சதவிகித வாக்கு வங்கியைத் தங்கள் வசம் வைத்துள்ளனர். இவர்கள் பெரும்பாலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

  மேலும் படிக்க
  next
 9. விஜய் ரூபானி

  கோவிட் 19 சிக்கலை மோசமாக கையாண்டதற்காக விஜய் ரூபானி பதவி விலகியிருந்தால் அவரை மக்கள் பாராட்டியிருப்பார்கள் என்று குஜராத்தை சேர்ந்த பிரபல தலித் தலைவரும், சுயேச்சை எம்.எல்.ஏ.வுமான ஜிக்னேஷ் மேவானி கூறியுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 10. நாராயண மூர்த்தி

  இந்தியாவின் புகழ்பெற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸை குறி வைத்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊடகம் என்று கருதப்படும் 'பாஞ்சஜன்யா'வில் வெளியான கட்டுரைக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 81