கம்யூனிசம்

 1. Video content

  Video caption: சீனாவின் மாவோ ஆட்சியில் புனிதமாகக் கருதப்பட்ட மாம்பழங்கள்

  மாவோ கொடுத்த மாம்பழங்களை பிரித்துச் சாப்பிடுவதா, இல்லை பாதுகாப்பதா என்ற நீண்ட விவாதத்துக்குப் பிறகு சில தொழிலாளர்கள் மாம்பழங்களை ஃபார்மால்டிஹைடு மூலம் பாதுகாக்க முடிவு செய்தனர்.

 2. எம். மணிகண்டன்

  பிபிசி தமிழ்

  தாலிபன்

  காபூல் நகரை தாலிபன்கள் கைப்பற்றியிருப்பதன் மூலம் அமெரிக்காவுக்கு வியட்நாமில் ஏற்பட்டதைப் போன்ற தோல்வி ஆப்கானிஸ்தானிலும் ஏற்பட்டிருப்பதாக பல பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகிறார்கள். சய்கோன் வீழ்ச்சியுடன் காபூலையும் ஒப்பிடுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 3. Fidel Castro

  கியூப புரட்சியின் தந்தையும், கியூபாவின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோவின் 93வது பிறந்தநாள் இன்று. அவரது வாழ்க்கை குறித்த 20 முக்கியத் தகவல்களைத் தொகுத்து வழங்குகிறோம்.

  மேலும் படிக்க
  next
 4. மாவோவின் படத்தை சீன வீராங்கனைகள் வைத்திருந்தது ஏன்? ஒலிம்பிக் கமிட்டி விசாரணை

  வீராங்கனைகள்

  டோக்யோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற இரு சீன வீராங்கனைகள் தங்கள் ஆடையில் மாவோ சே துங்கின் படத்தை பொருத்தியிருந்தது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

  இது தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி விசாரணை நடத்தி வருகிறது. சீன ஒலிம்பிக் கமிட்டியிடம் இது தொடர்பாக விளக்கம் கோரியிருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

  பாவோ சான்ஜு, ஷோங் தியான்ஷி இணை திங்கள்கிழமை நடந்த சைக்கிள் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது.

  ஒலிம்பிக் விதிகளின்படி போட்டி நடக்கும் இடங்களில், பதக்க மேடையில் அரசியல் ரீதியிலான கருத்துகளை வெளிப்படுத்துவது, போராட்டம் நடத்துவது, முழக்கங்களை எழுப்புவது உள்ளிட்டவை தடை செய்யப்பட்டிருக்கின்றன.

  "எந்தவிதமான போராட்டம், அரசியல், மத, இன பரப்புரைகளுக்கு அனுமதியில்லை" என்று ஒலிம்பிக் சாசனத்தின் 50-ஆவது பிரிவு கூறுகிறது.

  எனினும் கடந்த மாதம் இதில் சிறிய தளர்வு அளிக்கப்பட்டது. அதன் படி இனப் பாகுபாட்டைக் குறிக்கும் வகையில் ஒருகால் முட்டிபோட்டு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

  போட்டிக்கு முன்னும் பின்னும் வீரர்கள் இதைச் செய்யலாம். ஆனால் வேறு எந்தக் குறியீட்டுக்கும், அறிக்கைக்கும் அனுமதி கிடையாது.

  ஏற்கெனவே அமெரிக்காவின் குண்டு எறிதல் வீராங்கனை ரேவன் சாண்டர்ஸ் எக்ஸ் வடிவத்தில் கைகளை உயர்த்திக் காட்டியது தொடர்பாக ஒலிம்பிக் கமிட்டி விசாரித்து வருகிறது.

  இப்போது சீன வீராங்கனைகள் மாவோவின் படத்தை சட்டையில் பொருத்தியது சர்ச்சையாகி இருக்கிறது.

  1949 முதல் 1976 வரை சீனாவை ஆட்சி செய்த மாவோ, அந்த நாட்டின் முக்கியமான அடையாளம். 1960-களில் அவரது படம் பொறிக்கப்பட்ட பேட்ஜ்கள் கோடிக்கணக்கில் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டன. தற்போதைய அதிபர் ஸீ ஜின்பிங்கும் மாவோவின் பெயரை முன்னிலைப்படுத்தி வருகிறார்.

 5. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  சிபிஎம்

  1965ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை அரசு கைது செய்யத் துவங்கியது. இதில் சங்கரய்யாவும் கைதானார். 16 மாத கால சிறைவாசத்திற்குப் பிறகு 1966ல் அவர் விடுதலை செய்யப்பட்டார். அவர் விடுதலையான பிறகு, தீக்கதிர் கட்சியின் அதிகாரபூர்வ ஏடாக அங்கீகரிக்கப்பட்டது. என். சங்கரய்யா அதன் ஆசிரியரானார்.

  மேலும் படிக்க
  next
 6. ரெஹான் ஃபசல்

  பிபிசி செய்தியாளர்

  கம்யூனிஸ்ட்

  1964 ஆம் ஆண்டில் கட்சியில் பிளவு ஏற்பட்டபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. மேற்கு வங்கம் மற்றும் கேரளாவின் பெரும்பாலான தலைவர்கள் அதில் இணைந்தனர். ஆந்திராவில் சுமார் பாதி பேர் சிபிஎம் உடன் சேர்ந்தனர்.

  மேலும் படிக்க
  next
 7. Video content

  Video caption: சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்குக்கு என்ன காரணம்?

  நூற்றாண்டு பழமையான சீன கம்யூனிஸ்ட் கட்சி சீனாவில் எப்படி இருக்கிறது?

 8. சீன அதிபர்

  ஹாங்காங்கில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும் அங்கு ஜனநாயக ஆதரவுக்குரல்கள் ஒடுக்கப்படுவதாகவும் உலக அளவில் பரவலாக விமர்சனங்கள் முன்வைக்கப்படும் வேளையில், சீன அதிபரின் இந்த கடுமையான எச்சரிக்கை அமெரிக்காவை குறிப்பிட்டுப் பேசுவது போல உள்ளதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 9. ஜோ பாயில்

  பிபிசி செய்திகள்

  மாவோ சேதுங்

  சீனாவின் காலஞ்சென்ற தலைவர் மாவோ சேதுங் பிறந்து 127 ஆண்டுகள் கடந்துவிட்டன. தனது மூன்று தசாப்த கால ஆட்சியில் மாவோ, அரசியல் முழக்கங்களை கலை வடிவத்திற்கு உயர்த்தினார்.

  மேலும் படிக்க
  next
 10. பிரதீக் ஜாக்கர்

  கிழக்கு ஆசியா நிபுணர்

  சீனா

  மீண்டும் புத்துயிர் பெறும் திறனிருந்தாலும், தொடர்ந்து உயிர்ப்புடன் இருப்பதற்காக அக்கட்சி அதிக கவனம் செலுத்திவருகிறது. மக்களின் நம்பிக்கை சற்றே குறையும் நிலை ஏற்பட்டால் கூட, அதற்கு உடனடியாக எதிர்வினையாற்றி வருகிறது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 3