மொபைல் போன்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள்

 1. தங்கம்

  மின்னணுக் கருவிகளின் மின்சுற்று அட்டைகளில்(circuit boards) இருந்து 99 சதவிகிதம் தங்கத்தைப் பிரித்தெடுக்க கனடாவின் தொடங்கு நிறுவனமான எக்சைருடன் ராயல் மின்ட் ஒப்பந்தம் செய்திருக்கிறது

  மேலும் படிக்க
  next
 2. விக்டோரியா கில்

  அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ்

  மின்னணு பொருடகள்

  2021ம் ஆண்டில் சேர்ந்த பழைய மொபைல் போன், டிவி போன்ற எலக்ட்ரானிக் கழிவுகள் 57 மில்லியன் டன் அளவுக்கு குவிந்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 3. ஜூம் போன்கால்

  "இங்கே மொபைல் போனைப் பயன்படுத்துபவர்கள் அதிகம். ஆனால், அதே நேரம் உள்ளடங்கிய பகுதிகளில் சிக்னல் கிடைப்பதில் பிரச்னை இருக்கிறது. ஆகவே எந்த விதமான நெட்வொர்க்கிலும் Zoom இயங்குவதை உறுதிப்படுத்தியிருக்கிறோம்."

  மேலும் படிக்க
  next
 4. செல்பேசி

  ஸியோமி, க்வாவே செல்பேசி ரகங்களில் தணிக்கை செயலிகள், தரவுகள் கசிவு போன்ற ஆபத்துகள் இருப்பதாக லித்துவேனியா பாதுகாப்புத்துறை கூறியுள்ளது.

  மேலும் படிக்க
  next
 5. குதா-இ-நூர் நாசிர்

  பிபிசி, இஸ்லாமாபாத்

  ஆப்கானிஸ்தான்

  முன்பு ஆப்கானிஸ்தான் ராணுவ சோதனைச் சாவடிகள் மற்றும் கோட்டைகள் இருந்த அனைத்து நிலைகளிலும் தாலிபன் போராளிகள் தங்கள் கொடிகளை நாட்டியிருந்தனர். தங்களின் எதிரிகளை கண்காணிக்க மிகப்பெரிய அளவில் உளவுக்குழுவை அவர்கள் நியமித்திருக்கிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 6. சாம்சங்

  சாம்சங் நிறுவனம் கேலக்சி Z ஃப்லிப் 3 மற்றும் ஃபோல்ட் 3 என இரண்டு ரக மடக்கு வசதி கொண்ட (Holdable) ஸ்மார்ட் செல்ஃபோன்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 7. செளதிக் பிஸ்வாஸ்

  பிபிசி இந்தியா

  மோதி

  மாநில மற்றும் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் உச்ச பதவியில் இருக்கும் அதிகாரிகளின் அனுமதியோடு, இந்தியாவின் இறையாண்மை மற்றும் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்காக இந்தியாவில் ஒருவரின் செல்ஃபோனை ஒட்டு கேட்கலாம்.

  மேலும் படிக்க
  next
 8. "ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிக்க முயற்சி" - திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு

  THIRUMURUGAN
  Image caption: திருமுருகன் காந்தி, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்

  மக்களுக்காக உழைப்பவர்களின் செல்பேசிகளை ஒட்டுக்கேட்பது சட்டவிரோதமானது என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

  கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் இன்று அவர் கு.ராமகிருட்டிணன், வெண்மணி ஆகியோருடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது:

  உலகம் முழுவதும் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் சுமார் 1,500 பத்திரிகையாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உளவு பார்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

  இந்தியாவிலும் 50க்கும் மேற்பட்டவர்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்களின் செல்போன் தரவுகள் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டுள்ளது.

  மோதி அரசு பெகாசஸ் மூலம் உளவு பார்த்து இருக்கிறது. பெகாசஸ் ஸ்பைவேரின் மூலம் மொபைல், கம்யூட்டர்களில் உள்ள தகவல்களை எடுக்க முடியும். இமெயிலில் நுழைந்து பார்க்கவும், அதை செயல்படுத்தவும் முடியும். ஆவணங்கள், புகைப்படங்கள், பேசுவதை ஒட்டுக்கேட்பது போன்ற அனைத்தையும் இதன் மூலம் செய்ய முடியும்.

  கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிராவைச் சேர்ந்த ரோனா வில்சன் எனும் பத்திரிக்கையாளரை உளவு பார்த்து பொய்யான தகவல்களை பதிவு செய்து, அவர் உட்பட சமூக செயல்பட்டாளர் பலர் மீது பொய்வழக்கு போடப்பட்டுள்ளது.

  மத்திய அரசுக்கு செல்பேசியை உளவு பார்க்க வேண்டிய அவசியம் என்ன?

  மக்களுக்காக போராடுபவர்கள் மீது இதுபோன்ற உளவு வேலையை செய்வதன் நோக்கம் தமது தவறுகளை சுட்டிக்காட்டும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்த அரசு முயல்கிறது.

  இதை கண்டிக்காவிட்டால் யார் மீது வேண்டுமானாலும் இந்த செயலியை பயன்படுத்தி தவறான தகவல்களை பதிவு செய்து சிறையில் அடைத்துவிட முடியும். இஸ்ரேலில் உருவாக்கப்படும் இந்த மென்பொருள் தனியார்களுக்கு விற்கப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  7 ஆண்டுகளாக பிரதமர் மோதி ஊடகத்தை சந்திக்கவில்லை, ஆனால் இப்போது ஊடகங்களுக்கு அரசு பல வழிகளில் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. பத்திரிகை சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் மோசமான இடத்தில் வைத்திருக்கும் நாடுகள் இந்த செயலியை பயன்படுத்துகின்றன. இந்திய அரசும் இந்த செயலியை பயன்படுத்துகிறது.

  பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை 6 மாதத்திற்குள் ஊடகங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவோம் என்கிறார். ஆனால் அதற்கு முன்பாகவே ஊடகங்களை அவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டனர் என தெரிகிறது.

  எமர்ஜென்ஸி காலத்தில் இருந்த நடைமுறைகள் போல இப்போது இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளோம்' என திருமுருகன் காந்தி தெரிவித்தார்.

  மே 17 இயக்கம் அறிக்கை

  இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெகாசஸ் விவகாரம் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களை அச்சுறுத்தும் வகையில் அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதன் முழு விவரம்:

  பெகாசஸ் ஸ்பைவேர் (Pegasus Spyware) என்ற உளவுச் செயலியின் மூலம் உலகின் பல நாடுகளை சேர்ந்த முக்கிய நபர்களின் தொலைபேசிகள் அரசுகளால் உளவு பார்க்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அவ்வாறு உளவு பார்க்கப்பட்டிருக்கக்கூடும் என்ற பட்டியலில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களின் தொலைபேசியும் இருக்கிறது என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

  திருமுருகன் காந்தியின் தரவுகளை சேகரித்து அவரை முடக்கி விடலாம் என்ற எண்ணத்தில் இந்திய ஒன்றிய மோதி அரசு ஈடுபட்டுள்ளது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.

  திருமுருகன் காந்தி உட்பட முற்போக்கு செயற்பாட்டாளர்களை, பத்திரிக்கையாளர்களை முடக்கி, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்க முயலும் பாஜக மோதி அரசை மே பதினேழு இயக்கம் மிக வன்மையாக கண்டிக்கிறது.

  இஸ்ரேல் நாட்டை சேர்ந்த என்.எஸ்.ஓ. (NSO) என்ற நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் என்ற உளவு செயலியின் மூலம் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த அரசுகள் அந்நாட்டின் செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோரின் தொலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டு, வாட்சப் தகவல்கள் உட்பட மொபைல் தரவுகள் அனைத்தையும் சேகரித்துள்ளன என இந்தியாவின் தி வயர் (The Wire), தி பிரிண்ட், இங்கிலாந்தின் கார்டியன், அமெரிக்காவின் தி வாசிங்டன் போஸ்ட், தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் உட்பட உலகின் முன்னணி பத்திரிக்கைகள் பல நேற்று (18-07-2021) இரவு செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் 40 பத்திரிக்கையாளர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோரின் தொலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டிருக்கும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  அவற்றில் ஒன்று தான் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் தொலைபேசியும் என்ற தகவல் வெளிவந்துள்ளது. தமிழீழ விடுதலை மற்றும் தமிழ்நாட்டின் வாழ்வுரிமை சிக்கல்களை முன்வைத்து போராடி வரும் தமிழ்த்தேசிய அமைப்பான மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஒன்றிய பாஜக அரசின் தமிழின விரோத போக்கை தமிழர்களிடையே அம்பலப்படுத்துவதும், தமிழர்களை எளிமையாக அரசியல்படுத்தும் வேலையை செய்வதும் மோடி அரசை சினம்கொள்ள செய்துள்ளது.

  பாஜக அரசியலுக்கு தடையாக இருக்கும் திருமுருகன் காந்தி அவர்களை முடக்கிவிட்டால், தமிழ்நாட்டு அரசியலை மாற்றிட முடியும், தமிழ்நாட்டு அரசியலில் இலகுவாக செயல்பட முடியும் என்ற நோக்கத்திலேயே தான், அவரது தொலைபேசியை உளவு பார்த்து அவரது தனிப்பட்ட தரவுகளை சேகரிக்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. இச்செயலியின் மூலம் பல்வேறு நாடுகளை சேர்ந்த அரசுகளால் உளவு பார்க்கப்பட்டுள்ள நபர்கள் யாரென்று உற்று நோக்குகையில் இதனை அறிந்துகொள்ள முடிகிறது. பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, தற்போது தொலைபேசி உளவு பார்க்கப்பட்டவருள் ஒருவரான ரோனா வில்சன் என்பவது மடிக்கணினி ஹேக் (Hack) செய்யப்பட்டு போலியான மின்னஞ்சல்கள் அவர் அனுப்பியது போல் நிறுவப்பட்டது. அதனை அமெரிக்காவின் டிஜிட்டல் தடயவியல் நிறுவனம் ஒன்றும் உறுதிபடுத்தியது.

  இப்படியாக போலியான தரவுகள் மூலம் பீமா கோரேகான் வழக்கில் சிக்க வைக்கப்பட்ட ரோனா வில்சன் உட்பட பலர் பிணை கூட வழங்கப்படாமல் மூன்று ஆண்டுகளாக விசாரணையின்றி சிறையில் உள்ளனர். அதேபோல், தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் தொலைபேசியிலும் போலியான தகவல்களை நிறுவி, திருமுருகன் காந்தி அவர்களை சதியின் மூலம் ஏதேனும் ஒரு வழக்கில் சிக்க வைக்கும் பாஜக அரசின் கீழ்த்தரமான முயற்சி என்று மே பதினேழு இயக்கம் கருதுகிறது. உளவு பார்க்கப்பட்டதாக கருதப்படும் 2018 காலகட்டத்தில், தோழர் திருமுருகன் காந்தி மீது அரசு சட்டவிரோத நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டதை “ஆபரேசன் டிஎம்ஜி” என்று நக்கீரன், விகடன் போன்ற பத்திரிக்கைகள் அம்பலப்படுத்தி எழுதின என்பதையும் நினைவுகூர வேண்டும்.

  2019 நாடாளுமன்ற தேர்தலின் போது மே பதினேழு இயக்கத்தின் செயல்பாட்டை தடுக்க வேண்டும் என்ற எண்ணம் பாஜகவிடம் இருந்தது. இதற்காக, திருமுருகன் காந்தி உட்பட மே பதினேழு இயக்கத் தோழர்கள் மீது 2017 முதல் கடுமையான நெருக்கடிகள் தினிக்கப்பட்டது. 2017-ல் தமிழீழ இனப்படுகொலைக்காக நினைவேந்தல் நடத்தியதற்காக தோழர் திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

  குண்டர் சட்டம் உடைக்கப்பட்டு சிறையிலிருந்து வெளியே வந்து, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்ததற்காக தேச துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2018ம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை படுகொலையை ஐநா மனித உரிமை மன்றத்தில் பதிவு செய்ததற்காக, உபா (UAPA) என்னும் கருப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அன்று முதல் அவரது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.

  இந்த காலகட்டத்தில் 40 வழக்குகளுக்கு மேல் பதிவு செய்யப்பட்டதோடு, அனைத்து வழக்குகளும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்குகளை சந்திக்க இன்றளவும் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களுக்கு சென்று வருகிறார். தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மீதான அடக்குமுறைகள் என்பது மே பதினேழு இயக்கத்தை முடக்குவதற்கான முயற்சிகள். அதனை பாஜக தலைவர்களின் பேச்சும் உறுதி செய்துள்ளது.

  அரசின் நெருக்கடியை சந்தித்ததால், திருமுருகன் காந்தி உட்பட மே பதினேழு இயக்கத் தோழர்களை ஊடகங்கள் புறக்கணிப்பும் செய்தன. மே பதினேழு இயக்கம் தொடர்பான செய்திகளை வெளியிடாமல் இருப்பது, இரட்டடிப்பு செய்வது போன்றவையும் நடந்தேறின. அதே போல், மே பதினேழு இயக்கத்தோடு இணைந்து செயல்பட்ட பல அமைப்புகள் காவல்துறையின் நெருக்கடியை சந்தித்தன. இதனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமையில் 2019 டிசம்பரில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டு, மே பதினேழு இயக்கத்தின் மீதான அடக்குமுறைகளை கண்டித்தும், திருமுருகன் காந்தி மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இச்சூழலில், திருமுருகன் காந்தி அவர்களின் தொலைபேசி மோதி அரசினால் உளவு பார்க்கப்பட்டிருக்கக் கூடும் என்ற செய்தி மே பதினேழு இயக்கத்தை முடக்க பாஜக அரசு முயல்கிறது என்பதையே உறுதிபடுத்துகிறது.

  இவ்வாறு, திருமுருகன் காந்தியை முடக்க முயலும் முயற்சிகளை மே பதினேழு இயக்கம் ஜனநாயக ரீதியில் எதிர்கொள்ளும். பாஜக அரசின் இது போன்ற செயல்கள் மூலம் மே பதினேழு இயக்கத் தோழர்களை அச்சமடைய செய்திட முடியும், அதன் மூலம் மே பதினேழு இயக்கத்தை முடக்கிவிட முடியும் என்ற எண்ணத்தை மே பதினேழு இயக்கம் உடைத்தெறியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

  பெகாசஸ் உளவு வேலையை இந்திய ஒன்றிய பாஜக அரசு மறுத்தாலும், பெகாசஸ் செயலியின் நிறுவனமான என்.எஸ்.ஓ., அரசு மற்றும் அரசு நிறுவனங்களுடன் மட்டுமே வணிக தொடர்பு வைத்திருப்பதாக உறுதிபட கூறியிருக்கிறது. இதன் மூலம், மோடி அரசு இச்செயலில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. மேலும், மோடி அரசை விமர்சிக்கும் செயல்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள், எதிர்கட்சியினர் உட்பட நூற்றுக்கணக்கான நபர்களின் தொலைபேசி பெகாசஸ் செயலியின் மூலம் மோடி அரசினால் உளவு பார்க்கப்பட்டிருக்கக் கூடும் என்ற செய்தி, ஜனநாயகத்தை முடக்கும் முயற்சியாகும். இது, மோடி அரசு பாசிசத்தை நோக்கி செல்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது.

  மோதி அரசின் இத்தகைய ஜனநாயக விரோத, பாசிச போக்கு மிக வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவை. நாட்டின் ஜனநாயக முற்போக்கு சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து மோதி அரசின் இந்த பாசிச போக்கை கண்டிக்க முன்வர வேண்டுமென மே பதினேழு இயக்கம் அறைகூவல் விடுக்கிறது.

  இந்த உளவு செயலில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பத்திரிக்கையாளர்களை காக்க, அனைத்து ஊடகங்களும் முன்வர வேண்டும். அரசின் ஜனநாயக விரோத செயல்களை அம்பலப்படுத்தி, அரசின் அடக்குமுறையை அறத்துடன் எதிர்கொள்வதன் மூலம் மட்டுமே பாசிசத்தை வேரறுக்க முடியும் என்பதை ஊடகங்கள் உணர வேண்டும். அப்படியான முன்னெடுப்புகளுக்கு மே பதினேழு இயக்கம் உறுதுணையாக இருக்கும் என்பதை கூறிக்கொள்கிறோம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 9. செல்பேசி திருட்டு

  உங்கள் மொபைலின் பாதுகாப்பில் இடையூறு செய்யப்படுவதால், உங்கள் அடையாளம் மற்றும் தனியுரிமை தரவுகளின் கசிவு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

  மேலும் படிக்க
  next
 10. ஐபோன் 12

  ஆப்பிள் நிறுவனம் பட்டியலிட்டு இருக்கும் தன் எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களை, மருத்துவக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும் இடத்திலிருந்து குறைந்தது ஆறு அங்குலம் (15 சென்டிமீட்டர்) தொலைவாக வைக்க வேண்டு என குறிப்பிட்டு இருக்கிறது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 5