இதழியல்

 1. முரளிதரன் காசி விஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  freedom of expression india

  பொதுவாக இந்தியா முழுவதும் சிறையில் நடக்கும் கொடுமைகள், கைதிகள் மரணடைவது குறித்து தீவிர விமர்சனங்களையும் முன்வைத்தது. இந்த நிலையில், சேலம் மத்திய சிறைச்சாலையில் ஒரு பயங்கரமான சம்பவம் நடைபெற்றது.

  மேலும் படிக்க
  next
 2. அ.தா.பாலசுப்ரமணியன்

  பிபிசி தமிழ்

  அறிஞர் அண்ணா

  காங்கிரஸ் அல்லாத கட்சி ஒன்றின் சார்பில் இந்தியாவில் முதலமைச்சரான இரண்டாவது தலைவர் அண்ணா. தமிழ்நாட்டில் இடையறாமல் நடந்துவரும் 53 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு அதன் மூலம் அடித்தளம் இட்டவர். நவீன தமிழின் மீது, மக்கள் புழங்கும் தமிழின் மீது அண்ணா செலுத்தியிருக்கும் தாக்கம் அளப்பரியது. பெரிதாக ஆவணமாக்கப்படாதது.

  மேலும் படிக்க
  next
 3. வினீத் கரே

  பிபிசி நிருபர், டெல்லி

  தாலிபன்

  காபூலில் பெண்களின் ஆர்ப்பாட்டம் தொடர்பான செய்தி சேகரிக்கச் சென்ற தங்களை பிடித்து தாலிபன்கள் காவலில் வைத்து தாக்கியதில் இருவரும் மயக்கமடைந்ததாக தெரிவித்தனர். ஆப்கானிஸ்தானில் பத்திரிகையாளர்களின் எதிர்காலம் குறித்தும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 4. தாலிபன்கள்

  "நான் என்னை தற்காத்துக் கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்தேன், ஏனென்றால் அவர்கள் என்னை இன்னும் மோசமாக அடிப்பார்கள் என்று நினைத்தேன், அதனால் நான் என் உடலின் முன்புறத்தை பாதுகாக்கும் நிலையில் தரையில் படுத்தேன்"

  மேலும் படிக்க
  next
 5. தாலிபன்

  "அவர்கள் நிறைய கெட்ட வார்த்தைகளைக் கூறி திட்டினார்கள், எங்களைக் கேவலப்படுத்தினார்கள். அவர்கள் எங்களை நோக்கி அழைத்த பெயர்களை மீண்டும் சொல்வதற்கு எனக்கு மிகவும் வெட்கமாக இருக்கிறது."

  மேலும் படிக்க
  next
 6. முரளிதரன் காசி விஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  பெரியார்

  தமிழ்நாடு அரசின் சார்பிலேயே பெரியாருக்கு 95 அடி உயர சிலை அமைக்கப்பட போவதாக பலரும் புரிந்துகொண்டனர்.குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியாருக்கு சிலை அமைப்பதைக் கடுமையாக விமர்சித்தார். உண்மையில் பெரியாருக்கு சிலை வைப்பது யார்?

  மேலும் படிக்க
  next
 7. Video content

  Video caption: நான் யாரென தெரிந்தால் கொன்றிருப்பார்கள்: ஆப்கன் பெண் பத்திரிகையாளரின் கலங்கவைக்கும் பேட்டி

  நான் யாரென தெரிந்திருந்தால் கொன்றிருப்பார்கள்: ஆப்கன் பெண் பத்திரிகையாளரின் கலங்கவைக்கும் பேட்டி

 8. Video content

  Video caption: தாலிபன் வென்ற பிறகு அலுவலகத்தில் என்ன நடந்தது? ஆப்கன் பெண் பத்திரிகையாளர் கூறும் செய்தி

  தாலிபன் வென்ற பிறகு அலுவலகத்தில் என்ன நடந்தது? ஆப்கன் பெண் பத்திரிகையாளர் கூறும் செய்தி

 9. தாலிபன்களால் பத்திரிகையாளரின் உறவினர் சுட்டுக் கொலை

  ஆப்கானிஸ்தான்

  டாயிஷ் வில்லே என்கிற ஜெர்மனியைச் சேர்ந்த ஊடகத்தில் பணியாற்றி வந்த ஒரு பத்திரிகையாளரின் நெருங்கிய உறவினர் ஒருவரை தாலிபன்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். அப்பத்திரிகையாளர் தற்போது ஜெர்மனியில் பணியாற்றி வருகிறார்.

  அப்பத்திரிகையாளருக்காக நடத்தப்பட்ட சோதனையில் அவரது உறவினர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார், மற்றொரு உறவினர் படுகாயமடைந்துள்ளார். இவரைப் போலவே இன்னும் மூன்று டாயிஷ் வில்லே ஊடகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்களை தாலிபன்கள் வீடுவீடாக தேடி வருகின்றனர்.

  தாலிபன்களின் கொலை நடவடிக்கையை டாயிஷ் வில்லேவின் இயக்குநர் பீட்டர் லிம்பார்க் கண்டித்துள்ளார். மேலும் “ஆப்கானிஸ்தானில் பணியாற்றும் தங்கள் ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பயங்கர ஆபத்தில் இருக்கிறார்கள்” எனவும் கூறியுள்ளார்.

  “காபூல் மற்றும் ஆப்கானிஸ்தானின் மாகாணங்களில் தாலிபன்கள் முறையாக பத்திரிகையாளர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி. நமக்கு நேரம் குறைவாகத் தான் இருக்கிறது” என கூறியுள்ளார்.

 10. கர்நாடகா பள்ளிகள்

  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அனைத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கட்டாயமாக்கப்படும். தடுப்பூசி போடாதவர்களை பள்ளிக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

  Follow
  next
பக்கம் 1 இல் 7