இலங்கை அரசியல்சாசன குழப்பம்

 1. கொரோனா

  பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள், கட்டாய தகனங்கள் முதல் நிகாப் மற்றும் மதரசாக்கள் வரை, இலங்கை அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிராக அப்பட்டமான பாரபட்சமான கொள்கை நிகழ்ச்சி நிரலை பின்பற்றி வருகிறது. தற்போது முன்மொழிவுகளாகவுள்ள திட்டங்களை மறுபரிசீலனை செய்யுமாறு அதிகாரிகளை நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 2. நமல் ராஜபக்ச

  நிருபமா ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலப் பகுதியான 2010ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை நீர்வழங்கல் பிரதி அமைச்சராக கடமையாற்றியிருந்தார்.

  மேலும் படிக்க
  next
 3. இலங்கை

  11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படை தளபதிக்கு எதிரான வழக்கை தொடர முடியாது என அறிவித்தது, கொலை குற்றத்திற்காக தண்டனை வழங்கப்பட்ட முன்னாள் எம்.பி துமிந்த சில்வாவுக்கு, ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியது போன்றவை, நீதி செயல்முறை மீதான நம்பிக்கையை இல்லாது செய்வதாக மிச்செல் பெச்சலெட் தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 4. இலங்கை நிதி ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் எம்பி பதவியை ராஜநாமா செய்தார்

  மப்றூக், இலங்கை

  இலங்கை
  Image caption: நாடாளுமுன்ற பொதுச் செயலாளர் தம்மிக தஸநாயக்கவிடம், இன்று திங்கட்கிழமை தனது ராஜிநாமா கடிதத்தை கப்ரால் ஒப்படைத்தார்.

  லங்கையின் நிதி ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜநாமா செய்துள்ளார்.

  நாடாளுமுன்ற பொதுச் செயலாளர் தம்மிக தஸநாயக்கவிடம், இன்று திங்கட்கிழமை தனது ராஜிநாமா கடிதத்தை கப்ரால் ஒப்படைத்தார்.

  மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் பொதுஜனபெரமுன கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக 2020ஆம் ஆண்டு அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்ட நிலையிலேயே, தற்போது அந்தப் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

  மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் 2006ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் பதவி வகித்தார்.

  பின்னர், கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பிறகு அமைந்த அரசாங்கத்தில் தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட கப்ரால் -நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சராகவும் நியமனம் பெற்றார்.

  இதேவேளை, மத்திய வங்கியின் ஆளுநர் பதவியைப் பொறுப்பேற்பதற்காகவே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வதாக அஜித் நிவாட் கப்ரால் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவி வகித்து வரும் பேராசிரியர் டப்ளியு.டி. லக்ஷ்மன் தனது பதவியிலிருந்து இம்மாதம் 14ஆம் தேதி விலகவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்.

  பேராசிரியர் லக்ஷ்மன் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார்.

  தற்போது 80 வயதாகும் பேராசிரியர் லக்ஷ்மன் ஓய்வுபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

  இது இவ்வாறிருக்க, அஜித் நிவாட் கப்ரால் ராஜிநாமா செய்தமையினை அடுத்து ஏற்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்துக்கு ஜயந்த கெட்டாகொட நியமிக்கப்படவுள்ளார் என பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

  தற்போதைய அரசாங்கத்தில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஜயந்த கெட்டாகொட; மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரான தற்போதைய நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் ஆகுவதற்காக, தனது பதவியை சில மாதங்களுக்கு முன்னர் ராஜிநாமா செய்திருந்தார்.

  இந்த நிலையில், மீண்டும் ஜயந்த கெட்டாகொட நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 5. இலங்கையில் உணவுப் பஞ்சமா? களத்தில் உள்ள நிலவரம் என்ன?

  ரஞ்சன் அருண் பிரசாத், இலங்கை

  இலங்கை

  இலங்கையில் உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தால் அவசரநிலை அறிவிக்கப்பட்டபின், அங்கு உணவுப் பஞ்சம் நிலவி வருவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. செய்கை உரப் பயன்பாட்டிற்கு அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டு, இயற்கை வேளாண்மைக்கு மாறியது, இந்த உணவு பஞ்சத்திற்கான காரணம் எனவும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.

  கோவிட் பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பும், உணவு பஞ்சத்திற்கான ஒரு காரணம் என கூறப்பட்டு வருகின்றது. இந்த விடயங்களின் உண்மைத் தன்மை தொடர்பில் பிபிசி தமிழ் ஆராய்ந்தது.

  அத்தியாவசிய உணவுப் பொருள் விநியோகத்திற்கான அவசரகால சட்ட விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை கடந்த 30ம் தேதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டிருந்த நிலையில், அதற்கான அனுமதியை நாடாளுமன்றம் திங்களன்று வழங்கியிருந்தது.

  இலங்கையில் செய்கை உர பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில், முன்னாள் நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த மே மாதம் 6ம் தேதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டது.

  இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், செய்கை உர இறக்குமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. எனினும், இந்த வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

  இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதை அடுத்து, இலங்கையில் திடீரென உரத்துக்கான தட்டுப்பாடு ஏற்பட்டது.இந்த செய்தியை விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்

 6. ரஞ்சன் அருண்பிரசாத்

  பிபிசி தமிழுக்காக

  இலங்கை

  இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவி வருவதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக சீனி, அரிசி, பால்மா, சமையல் எரிவாயு உள்ளிட்ட பல பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

  மேலும் படிக்க
  next
 7. ரஞ்சன் அருண்பிரசாத்

  பிபிசி தமிழுக்காக

  ரிஷாட் பதியூதீன்

  18 வயதுக்கு குறைவான சிறுமியொருவரை இரவு நேரத்தில் தனியான அறையில் பாதுகாப்பற்ற முறையில் அடைப்பது தண்டனைக்குரிய குற்றம். இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், குற்றம்சாட்டப்படும் நபர்களுக்கு 2 முதல் 10 வருடங்கள் வரை தண்டனை கிடைக்கலாம்.

  மேலும் படிக்க
  next
 8. நேபாள நாடாளுமன்றத்தை ஏழு நாட்களுக்குள் கூட்ட உச்ச நீதிமன்றம் உத்தரவு

  NEPAL
  Image caption: கேபி. ஷர்மா ஓலி

  நேபாள நாடாளுமன்றத்தை ஏழு நாட்களுக்குள் கூட்ட வேண்டும் என்று அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  மேலும், அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவர் ஷெர் பகதூர் தியூபாவை நாட்டின் அடுத்த பிரதமராக நியமிக்கவும் உச்ச நீதிமன்றம் நேபாள குடியரசு தலைவரை கேட்டுக் கொண்டுள்ளது.

  இது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு விசாரித்து பிறப்பித்த உத்தரவில், நேபாளத்தில் நீடித்து வரும் அரசியல் ஸ்திரமின்மையை முடிவுக்கு கொண்டு வர அந்நாட்டின் மக்களவையை இரண்டாவது முறையாக பிரதமர் ஒலி யோசனைப்படி கலைத்த குடியரசு தலைவரின் நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மக்களவையை கலைக்கும் பிரதமரின் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறிய உச்ச நீதிமன்றம், ஏழு நாட்களுக்குள் நாடாளஉமன்றம் கூட்டப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

  இந்த தீர்ப்பை நேபாள எதிர்கட்சிகள் வரவேற்றுள்ளன. அதே சமயம், பிரதமர் ஓலியின் கட்சி பிபிசியிடம் பேசும்போது, "ஆட்சி முறைக்கும் நீதித்துறைக்கும் இடையிலான அரசி.யலமைப்பின் மாண்பு உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மீறப்பட்டுள்ளது," என்று தெரிவித்தது.

  நேபாள நாடாளுமன்றத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் ஓலி கலைத்து நடவடிக்கை எடுத்தார்.

  நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி, தனது கட்சிக்குள்ளேயே எதிர்ப்பை சந்தித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. மேலும் கட்சியையும், ஆட்சியையும் ஒருதலைபட்சமாக நடத்துவதாகவும் பிரதமர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

  2018ஆம் ஆண்டு நேபாளத்தின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி இரண்டையும் இணைத்த பிறகு பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கேபி. ஷர்மா ஒலி.

  இந்த ஒருங்கிணைந்த கட்சியின் துணைத் தலைவரானார், மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான பிரசாண்டா என்று அறியப்படும் புஷ்ப கமல் தஹால். இருப்பினும் கட்சிக்குள் அதிகார சண்டை மூண்டது.

  ந்த சூழ்நிலையில், இந்தியாவுடனான எல்லை பிரச்னையின்போது கட்சியின் மூத்த தலைவர்களான புஷ்ப் கமல் தஹல் மற்றும் ஜலநாத் கானல் ஆகியோர் பிரதமர் கேபி ஷர்மா ஒலியின் முடிவுகள் குறித்து கேள்வி எழுப்பினர்.

  அதே சமயம், பிரதமர் கேபி. ஷர்மா ஒலி குடியரசுத் தலைவரிடம் அவசரச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்று கோரினார்.

  குடியரசுத் தலைவர் அவசர சட்டத்திற்கு அனுமதி வழங்கிய பின் கட்சியில் சர்ச்சை வெடித்தது. கட்சியின் மூத்த தலைவர்கள் அந்த அவசரச் சட்டத்தை திரும்ப பெற குடியரசுத் தலைவரிடம் கோரினர்.

  உறுப்பினர்கள் சிறப்பு கூட்டத் தொடரை கூட்ட குடியரசுத் தலைவரை கோரினர். மேலும் கேபி. ஒலி பிரதமர் பதவியிலிருந்தும், கட்சி தலைமை பொறுப்பிலிருந்தும் விலக வேண்டும் என்றும் கோரப்பட்டது.

  இதற்குப் பின் பிரதமர் மீது அழுத்தம் கூடியது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறப்பு கூட்டத்தை கூட்டுவதற்கான அனுமதி கோரிக்கையை திரும்ப பெறுவது என்றும் அதற்கு பதிலாக பிரதமர் அவசரச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் ஒப்பந்தம் ஏற்பட்டது.

  இருப்பினும் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வராமல், நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர் முன்வைத்த யோசனையை ஏற்று நாடாளுமன்றம் கடந்த ஆண்டு கலைக்கப்பட்டது.

 9. எம்.ஏ. பரணிதரன்

  பிபிசி தமிழ்

  சித்தரிக்கப்பட்ட படம்

  தீவிரவாத செயல்பாடுகள் மீது எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமோ அதேபோன்ற நடவடிக்கைகளை அனைத்து புலனாய்வுத்துறைகளும் பின்பற்றின. இந்திய உளவுத்துறை மூலம் இலங்கையில் உள்ள கடற்படைக்கும் இது பற்றிய தகவல் பகிரப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 10. Video content

  Video caption: இலங்கைக்கு எதிரான தீர்மானம்: வாக்கெடுப்பை தவிர்த்த இந்தியா, தமிழர்களுக்கு பயன் தருமா
பக்கம் 1 இல் 7