விநாயக சதுர்த்தி

 1. வந்துகொண்டிருக்கும் செய்திடெல்லியில் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை

  டெல்லியில் கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தியை பொது இடங்களில் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

  விநாயகர் சதுர்த்தியை தங்களுடைய இல்லங்களிலேயே பொதுமக்கள் கொண்டாட வேண்டும் என்றும் டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.

 2. வந்துகொண்டிருக்கும் செய்திதமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

  முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  STALIN
  Image caption: மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்

  ஓணம், பக்ரீத் பண்டிகைகளுக்கு அளிக்கப்பட்ட தளர்வுகளால் கேரளாவில் கொரோனா அதிகரித்ததையடுத்தே எல்லா சமய விழாக்களுக்கும் தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.

  தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய பா.ஜ.க. உறுப்பினர் நயினார் நாகேந்திரன், தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி தர வேண்டுமெனக் கோரினார்.

  இதற்குப் பதிலளித்துப் பேசிய முதமலைச்சர் மு.க. ஸ்டாலின், கொரோனாவைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

  மேலும், "கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அதிக அளவில் மக்கள் கூடுவதைத் தடுக்க தேவையான கட்டுப்பாடுகளை செப்டம்பர் 30ஆம் தேதிவரை நடைமுறைப்படுத்த மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு வலியுறுத்தியுள்ளது. நீதிமன்றமும் அது குறித்துச் சுட்டிக்காட்டியுள்ளது

  கேரள மாநிலத்தில் ஓணம், பக்ரீத் பண்டிகைகளுக்கு அதிக அளவில் மக்கள் கூடுவதற்கு அனுமதி அளித்த காரணத்தால்தான் அங்கே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது. தமிழ்நாட்டிலும் இன்றுவரை கொரோனா தொற்றின் பாதிப்பு முழுமையாக தடுக்கப்படவில்லை.

  இப்படி ஒரு சூழ்நிலையில் மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு செப்டம்பர் 15ஆம் தேதிவரை அனைத்து சமய விழாக்களையும் கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது விநாயகர் சதுர்த்திக்கும் பொருந்தும்.

  பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட விழாக்களைக் கொண்டாட கட்டுப்பாடுகள் இருக்கிறதே தவிர, தனி நபர்களைப் பொருத்தவரை கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி தங்கள் இல்லங்களிலே கொண்டாடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாரும் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்" என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

  இது தவிர, தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரம் மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு மழைக் காலங்களில் நிவாரணத் தொகையாக 5,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இவர்களில் 3 ஆயிரம் பேர் சிலை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விழாக்களைக் கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், இந்த மூன்றாயிரம் பேருக்கும் நிவாரணத் தொகையானது, ஐந்தாயிரம் என்பதற்குப் பதிலாக பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தித் தரப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

 3. விநாயகர் சதுர்த்தி

  விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்கவும் ஊர்வலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தடையை மீறுவோம் என இந்து முன்னணி கூறியிருப்பது குறித்து மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 4. NOAH SEELAM

  முதல்வருடனான சந்திப்பு திருப்திகரமாக இருந்ததாக பாஜக மாநில தலைவர் எல். முருகன் கூறினார். அவரிடம் விநாயகர் சிலையை வைக்க அனுமதித்தாலும் ஊர்வலம் செல்லாமல் எப்படி சிலைகளை கரைப்பீர்கள் என கேட்டதற்கு பொதுமக்களின் கருத்தை முதல்வரிடம் பிரதிபலித்ததாக கூறினார்.

  மேலும் படிக்க
  next