பங்குச் சந்தை

 1. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  பங்குச் சந்தை

  மத்திய தர வர்க்கத்தினரைப் பொறுத்தவரை பங்குச் சந்தைகளில் நேரடியாக முதலீடு செய்வதைவிட, மியூச்சுவல் ஃபண்ட் எனப்படும் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்வதையே பாதுகாப்பானதாக கருதுகின்றன. ஒருவர், சரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைத் தேர்வுசெய்வது எப்படி?

  மேலும் படிக்க
  next
 2. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  Anand Srinivasan

  மிகக் குறைந்த அளவில் சேமிப்பவர்கள், பங்குச் சந்தையில் தங்களால் முதலீடு செய்ய முடியாது என நினைக்கிறார்கள். அப்படியல்ல. மிகக் குறைந்த விலையிலான பங்குகள் கிடைக்கின்றன.

  மேலும் படிக்க
  next
 3. அலோக் ஜோஷி

  மூத்த பொருளாதாரச் செய்தியாளர்

  நிர்மலா சீதாராமன்

  மற்ற பல துறைகளிலும் உயர்வு பதிவாகியிருந்தாலும், அவை அவ்வளவு குறிப்பிடத்தக்கதாக இல்லை. மாறாக, கடந்த ஆண்டு வீழ்ச்சியின் போது இருந்த வேகம் இப்போது இல்லை என்ற கவலையையே அவை ஏற்படுத்துகின்றன என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 4. ஜோ டைடி

  சைபர் பிரிவு

  மனிதர்

  சில நேரம் நுகர்வோருக்குப் பாதிப்பணம் மட்டுமே திரும்பக் கிடைக்கிறது. இது "taking a hair cut" என்று அழைக்கப்படுகிறது. "அப்படி எதுவும் நடக்காது" என்று லிக்விட் க்ளோபலின் இயக்குநர் செத் மெலாமெட் தனது ட்விட்டர் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 5. வந்துகொண்டிருக்கும் செய்திபுதுச்சேரி பட்ஜெட்: விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்கள் ரத்து - முக்கிய அம்சங்கள் என்ன?

  நடராஜன் சுந்தர், புதுச்சேரி

  புதுச்சேரி
  Image caption: என். ரங்கசாமி, புதுச்சேரி முதல்வர்

  புதுச்சேரியில் ரூ. 9,924 கோடி மதிப்பிலான 2021-22 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை முதல்வர் என்.ரங்கசாமி தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்களை பார்க்கலாம்:

  • புதுச்சேரி தாக்கல் செய்யப்பட்ட 9,924 கோடி பட்ஜெட்டில் மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ.6,190 கோடியாக உள்ளது. குறிப்பாக இந்த நிதிநிலை அறிக்கையில், ரூ.2140 கோடி சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கும், ரூ.1715 கோடி கடன் மற்றும் வட்டிக்கும், ரூ.1591 கோடி மின்சாரம் வாங்கவும், ரூ.1290 கோடி முதியோர் ஓய்வூதியத்திற்கும், ரூ.1243 கோடி பொதுத்துறை நிறுவனங்களுக்கு மானியம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
  • விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் ஏக்கருக்கு ரூ.5,000 மானியம் வழங்கப்படும்.
  • விவசாயத்தில் ஈடுபடும் மகளிர் மற்றும் சுயஉதவிக்குழுவினருக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
  • புதிய உழவர் சந்தைகள் அமைக்க நடவடிக்கை.
  • நிலத்தடி நீர்மட்டத்தை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உயர்த்த பிரதான் மந்திர் திட்டத்தின் கீழ் தடுப்பணைகள் கட்டப்பபடும்.
  • விவசாயிகள் பயன்பெறும் வகையில் கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்படும்.
  • காரைக்கால் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.60 லட்சம் செலவில் 6 புதிய கிணறுகள் அமைக்க உள்ளன.
  • புதுச்சேரியில் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன, விவசாயிகளுக்கு 10 ஆயிரம் தேக்கு, சந்தன மரக்கன்றுகள் வழங்கப்படும்.
  • பசுமை புதுச்சேரி திட்டத்தின் கீழ் செங்குத்து தோட்டம் உருவாக்கப்படும்.
  • ஆரோக்கியமான கன்றுகள் வளர்ப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
  • கரவை மாடுகள் பாராமரிக்கவும்,கூட்டுறவு சங்கங்களில் அல்லாதவர்களுக்கு 75 விழுக்காடு மானியத்தில் தீவனம் நடப்பாண்டு வழங்கப்படும்.
  • கால்நடை இனப்பெருக்கம் செய்ய தாது ஊப்பு கலவை வழங்கப்படும்.
  • தேசிய மயக்கப்பட்ட வங்கிகள் மூலம் ஆடுகள் வாங்க கடன் வழங்கப்படும்.
  • கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்க ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கப்படும்.
  • அரிசி, பருப்பு, எண்ணெய், தானியங்கள் உள்ளிட்டவை நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும்.
  • புதுச்சேரியில் மூட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடைகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
  • இலவச அரிசி வழங்க ரூ.197.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சர்க்கரை ஆலையைத் தொடர்ந்து இயக்குவதற்கான சத்திய கூறுகள் ஆராயப்படும்.
  • 100 விழுக்காடு கல்வி அறிவு பெற்ற மாநிலமாக மாற்ற அரசு பாடுபடும்.
  • மாணவர்கள் படிப்பில் இருந்து இடை நிற்றலை தவிர்க்கவும் கல்வி கற்கவும் தேவையான உதவிகளை அரசு வழங்கும். இதற்காக கல்வித்துறைக்கு ரூ.742 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • உயர்கல்விக்கு ரூ. 296.62 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • புதுச்சேரி மாநிலத்தில் மின் பற்றாக்குறை இல்லை. 24 மணி நேரமும் மின் இணைப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும்.
  • புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து தெரு மின் விளக்குகளை எல்.ஈ.டி விளக்குகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
  • 10 தொழிற்சாலைகளுக்கு உயர் மின் இணைப்பும், 50 தொழிற்சாலைகளுக்கு குறைந்த மின் இணைப்பு வழங்கப்படும்.
  • அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் நவீன கணினி வயர்லெஸ் வாங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
  • மீன்பிடி தடைக்கால நிவாரணம் உயர்த்தி வழங்க நடவடிக்கை. கடலில் மீன்பிடிக்கும் போது உயிரிழந்தால் அவரது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும்.
  • மீனவர்களுக்கான டீசல் மானியம் உயர்த்தி வழங்கப்படும். மீன் பிடி தடைக்கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும். தடைக்காலத்தில் விசைப்படகு பராமரிப்பு உதவித்தொகை ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்படும்.
  • வைத்திகுப்பம் மீனவ பகுதியில் தூண்டில் வளைவு அழைக்கப்படும்.
  • கோரிமேடு பகுதியில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை அமைக்கப்படும்.
  • கொரோனாவை எதிர்கொள்ள கூடுதலாக ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஆயுஷ் மருத்துவமனை கட்ட ரூ.795.88 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  புதிய அறிவிப்புகள்

  • ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பாட்கோவில் மாணவர்கள் பெறப்பட்ட கடன்கள் ரத்து செய்யப்படும்.
  • கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்.
  • திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலை சுற்றி தேரோடும் நான்கு வீதிகளையும் செப்பனிட ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • பட்டா மாற்றுதலில் ஏற்படும் காலதாமதத்தைப் போக்கும் வகையில் ஆன்லைன் மூலம் பட்டா மாற்றும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
  • புதுச்சேரியில் வாரம் முழுவதும் சுற்றுலாவாசிகளை கவரும் வகையில் தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்பட்ட நீர் விளையாட்டுகள் நடத்தவும் பாய்மரப் படகுத்தளமும் அமைக்கப்படும்.
  • நலிவடைந்த நிலையில் உள்ள புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் அரசு செயல்படும். பழங்குடியின மாணவர்களுக்கு தங்கும் விடுதி புதியதாக அமைக்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இலவச படிப்பு திறம்பட செயல்படுத்தப்படும்.

  புதிய அரசின் முதல் பட்ஜெட்:

  புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், தேர்தலில் வெற்றி பெற்று ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முதல்முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது.

  இந்த பட்ஜெட் நிதியாக ரூ.10 ஆயிரத்து 100 கோடியாக உயர்த்தப்பட்டது.

  புதுச்சேரி அரசு கோரியபடி, இந்த தொகைக்கு சில திருத்தங்களுடன் மத்திய அரசின் அனுமதியும் கிடைத்தது. இதன்படி அரசு கேட்டுள்ள கடன் தொகையில் ரூ.200 கோடியை குறைத்து, ரூ.9924 கோடி பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.

  துணைநிலை ஆற்றிய தமிழ் உரை:

  புதுச்சேரி 15வது சட்டப்பேரவையின் இன்றை கூட்டத்தொடரில் சம்பிரதாயத்தின்படி துணைநிலை ஆளுநர் உரையாற்றினார். இதற்கு முன்பு இங்கு பதவியில் இருந்த துணைநிலை ஆளுநர்கள் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், தற்போது இங்கு துணைநிலை ஆளுநர் பதவியை கூடுதல் பொறுப்பாக கவனித்து வரும் தமிழிசை செளந்தர்ராஜன், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இதனால் தமது உரையை அவர் தமிழிலேயே வாசித்தார். அப்போது மத்திய அரசின் திட்டங்கள், மாநிலத்தின் பணிகளை பட்டியலிட்டுப் பேசினார்.

  இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் செப்டம்பர் 3ஆம் தேதிவரை நடைபெறும்.

  View more on twitter
  புதுச்சேரி
  Image caption: புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் உரையை வாசிக்கும் முதல்வர் என். ரங்கசாமி.
  புதுச்சேரி
  Image caption: புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக அதன் ஆவணங்கள் இடம்பெற்ற பெட்டியுடன் புறப்பட்ட முதல்வர் ரங்கசாமி.
 6. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  நிர்மலா சீதாராமன்

  இந்திய அரசுக்கும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் சொந்தமான சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை குத்தகைக்கு விடுவதன் மூலம் பணமாக்கப்போவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. உண்மையில் என்ன நடக்கப்போகிறது?

  மேலும் படிக்க
  next
 7. நிகில் இமாம்தார்

  பிபிசி

  ரங்கராஜன்

  சீர்திருத்தங்களை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால், அதனால் ஏற்படும் வளர்ச்சி பெரும்பாலானோருக்கு நன்மை செய்வதாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் சீர்திருத்தத்திற்கு அர்த்தமே இருக்காது.

  மேலும் படிக்க
  next
 8. சொமாட்டோ

  இந்தியாவின் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவது இதுவே முதல் முறை.

  மேலும் படிக்க
  next
 9. எலான் மஸ்க்

  பிட்காயின்கள் உருவாக்கத்தில் அதிக மின்சாரம் தேவை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அப்போது எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.

  மேலும் படிக்க
  next
 10. நிர்மலா சீதாராமன்

  கொரோனா வைரஸ் பரவலால் பாதிப்படைந்த இந்திய பொருளாதாரத்தை சீரமைக்க உதவும் வகையில் பல அறிவுப்புகளை இன்று வெளியிட்டுள்ளார் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 5