மாவோயிசம்

 1. என்கவுன்டரில் மிலிந்த் டெல்டும்டே உட்பட பல மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்

  மாவோயிஸ்ட் தேடுதல். கோப்புப் படம்.
  Image caption: மாவோயிஸ்ட் தேடுதல். கோப்புப் படம்.

  மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் தனோரா பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும், மகாராஷ்டிர போலீசின் சி-60 சிறப்புப் படைக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் முக்கிய மாவோயிஸ்ட் தலைவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அங்கித் கோயல் தெரிவித்துள்ளார்.

  கொல்லப்பட்டவர்களில் முக்கிய மாவோயிஸ்ட் கமாண்டரான மிலிந்த் டெல்டும்டேவும் அடக்கம் என்று போலீசார் உறுதிப்படுத்தினர். கொல்லப்பட்ட 26 மாவோயிஸ்டுகளின் பெயர்களையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

  அதில் போலீசாரால் தலைக்கு ரூ.50 லட்சம் விலை அறிவிக்கப்பட்ட மிலிந்த் டெல்டும்டே பெயரும் இருந்தது. இது தவிர, ஆறு பெண் மாவோயிஸ்ட்டுகள் பெயரும் கொல்லப்பட்டவர்கள் பட்டியலில் இருந்தது. இந்த சண்டையில், சிறப்பு போலீஸ் படையை சேர்ந்த போலீசார் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

  இதை முழுமையாகப் படிக்க இங்கே சொடுக்கவும்

 2. சல்மான் ரவி

  பிபிசி செய்தியாளர்

  மாவோயிஸ்ட்

  காட்டில் நீண்ட தூரத்துக்கு ரத்த தடயங்கள் இருந்தன. எனவே, ஒன்று இறந்த அல்லது, காயமடைந்த தங்கள் போராளிகளை மாவோயிஸ்டுகள் இழுத்துச் சென்றிருக்கலாம் என்று யூகிக்க முடிகிறது என்றார் போலீஸ் அதிகாரி.

  மேலும் படிக்க
  next
 3. Video content

  Video caption: சீனாவின் மாவோ ஆட்சியில் புனிதமாகக் கருதப்பட்ட மாம்பழங்கள்

  மாவோ கொடுத்த மாம்பழங்களை பிரித்துச் சாப்பிடுவதா, இல்லை பாதுகாப்பதா என்ற நீண்ட விவாதத்துக்குப் பிறகு சில தொழிலாளர்கள் மாம்பழங்களை ஃபார்மால்டிஹைடு மூலம் பாதுகாக்க முடிவு செய்தனர்.

 4. மாவோவின் படத்தை சீன வீராங்கனைகள் வைத்திருந்தது ஏன்? ஒலிம்பிக் கமிட்டி விசாரணை

  வீராங்கனைகள்

  டோக்யோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற இரு சீன வீராங்கனைகள் தங்கள் ஆடையில் மாவோ சே துங்கின் படத்தை பொருத்தியிருந்தது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

  இது தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி விசாரணை நடத்தி வருகிறது. சீன ஒலிம்பிக் கமிட்டியிடம் இது தொடர்பாக விளக்கம் கோரியிருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

  பாவோ சான்ஜு, ஷோங் தியான்ஷி இணை திங்கள்கிழமை நடந்த சைக்கிள் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது.

  ஒலிம்பிக் விதிகளின்படி போட்டி நடக்கும் இடங்களில், பதக்க மேடையில் அரசியல் ரீதியிலான கருத்துகளை வெளிப்படுத்துவது, போராட்டம் நடத்துவது, முழக்கங்களை எழுப்புவது உள்ளிட்டவை தடை செய்யப்பட்டிருக்கின்றன.

  "எந்தவிதமான போராட்டம், அரசியல், மத, இன பரப்புரைகளுக்கு அனுமதியில்லை" என்று ஒலிம்பிக் சாசனத்தின் 50-ஆவது பிரிவு கூறுகிறது.

  எனினும் கடந்த மாதம் இதில் சிறிய தளர்வு அளிக்கப்பட்டது. அதன் படி இனப் பாகுபாட்டைக் குறிக்கும் வகையில் ஒருகால் முட்டிபோட்டு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

  போட்டிக்கு முன்னும் பின்னும் வீரர்கள் இதைச் செய்யலாம். ஆனால் வேறு எந்தக் குறியீட்டுக்கும், அறிக்கைக்கும் அனுமதி கிடையாது.

  ஏற்கெனவே அமெரிக்காவின் குண்டு எறிதல் வீராங்கனை ரேவன் சாண்டர்ஸ் எக்ஸ் வடிவத்தில் கைகளை உயர்த்திக் காட்டியது தொடர்பாக ஒலிம்பிக் கமிட்டி விசாரித்து வருகிறது.

  இப்போது சீன வீராங்கனைகள் மாவோவின் படத்தை சட்டையில் பொருத்தியது சர்ச்சையாகி இருக்கிறது.

  1949 முதல் 1976 வரை சீனாவை ஆட்சி செய்த மாவோ, அந்த நாட்டின் முக்கியமான அடையாளம். 1960-களில் அவரது படம் பொறிக்கப்பட்ட பேட்ஜ்கள் கோடிக்கணக்கில் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டன. தற்போதைய அதிபர் ஸீ ஜின்பிங்கும் மாவோவின் பெயரை முன்னிலைப்படுத்தி வருகிறார்.

 5. ரெஹான் ஃபசல்

  பிபிசி செய்தியாளர்

  கம்யூனிஸ்ட்

  1964 ஆம் ஆண்டில் கட்சியில் பிளவு ஏற்பட்டபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. மேற்கு வங்கம் மற்றும் கேரளாவின் பெரும்பாலான தலைவர்கள் அதில் இணைந்தனர். ஆந்திராவில் சுமார் பாதி பேர் சிபிஎம் உடன் சேர்ந்தனர்.

  மேலும் படிக்க
  next
 6. ஜோ பாயில்

  பிபிசி செய்திகள்

  மாவோ சேதுங்

  சீனாவின் காலஞ்சென்ற தலைவர் மாவோ சேதுங் பிறந்து 127 ஆண்டுகள் கடந்துவிட்டன. தனது மூன்று தசாப்த கால ஆட்சியில் மாவோ, அரசியல் முழக்கங்களை கலை வடிவத்திற்கு உயர்த்தினார்.

  மேலும் படிக்க
  next
 7. தீ வைப்பு சம்பவம்

  அண்மைக்காலமாக இந்தப் பிராந்தியத்தில் மாவோயிஸ்ட் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. அண்மையில் நடந்த ஒரு மாவோயிஸ்ட் தாக்குதலில் 22 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.

  மேலும் படிக்க
  next
 8. மாவோயிஸ்டுகள்

  உடலைச் சுற்றி கயிறு கட்டப்பட்ட நிலையில் இருந்த ராகேஷ்வர் சிங் என்ற சிஆர்பிஎஃப் வீரரை, முகத்தை துணியால் மறைத்துக் கொண்டு ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் ஊர் மக்கள் முன்னிலையில், அரசு நியமித்த மத்தியஸ்த குழுவினரிடம் ஒப்படைத்தனர். இந்த காட்சியை நூற்றுக்கணக்கான கிராமவாசிகள் சுற்றி அமர்ந்தவாறு பார்வையிட்ட காணொளியை உள்ளூர் பத்திரிகையாளர் பதிவு செய்திருந்தார்.

  மேலும் படிக்க
  next
 9. மாவோயிஸ்டு

  மாவோயிஸ்டு தலைவர்கள் உள்ளிட்ட 150க்கும் அதிகமான கிராமவாசிகள் கொல்லப்பட்ட பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் படையினருக்கு எதிராக தாங்கள் நடத்தி வரும் தாக்குதலின் தொடர்ச்சியாக சமீபத்திய தாக்குதல் நடந்ததாக மாவோயிஸ்டுகள் தெரிவித்துள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 10. அலோக் பிரகாஷ் புடுல்

  பிபிசி ஹிந்திக்காக, ராய்ப்பூரில் இருந்து

  Naxalite problem in Chhattisgarh

  சம்பவ இடத்தில் துணை ராணுவப்படையினர் சுற்றி வளைக்கப்பட்ட இரு தரப்பிலும் துப்பாக்கி சூடு நடந்ததா? காட்டைச் சுற்றி கண்காணிப்பில் படையினர் 2,000 பேர் இருக்க அவர்களால், சில நூறு மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதில் ஏன் வெற்றி பெற முடியவில்லை?

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2