இமாச்சல பிரதேசம்

 1. வந்துகொண்டிருக்கும் செய்திஹிமாச்சல பிரதேச மலைப்பகுதியில் நிலச்சரிவு - இருவர் சாவு, மீட்ப்புபணிகள் தீவிரம்

  View more on twitter

  ஹிமாச்சல பிரதேசத்தின் கின்னார் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் அந்த வழியாக சென்ற பேருந்தும் டிரக்கும் சிக்கியிருப்பதாக தெரிய வந்துள்ளது. அவற்றில் இருந்தவர்கள் நிலை என்ன எனத் தெரியவில்லை. தற்போதுவரை இருவர் இறந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

  கிட்டத்தட்ட 40 பேர் வரை இந்த சரிவில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அங்குள்ள ரீகோங் பியோ - சிம்லா நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

  சம்பவ பகுதியில் மீட்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக ஹிமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகுர் தெரிவித்துள்ளார்.

  நிலச்சரிவு ஏற்பட்ட மலைப்பகுதி என்பதால், அங்கு மீட்பு நடவடிக்கையில் பயிற்சி பெற்ற இந்திய திபெத்திய எல்லை காவல் படையின் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சம்பவ பகுதிக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையினரும் விரைந்துள்ளனர்.

  இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் மாநில முதல்வர் ஜெய் ராம் தாகுரை தொலைபேசியில் தொடர்பு கொணன்டு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசி நிலைமையை கேட்டறிந்தார்.

  இந்த நிலச்சரிவுக்கு என்ன காரணம் என்பதும் தெரியவில்லை. ஹிமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவுகள் வழக்கமாக நடப்பவை என்றாலும், மலைப்பகுதி நெடுஞ்சாலையில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இது இரண்டாவது முறை.

  கடந்த மாதம் நிலச்சரிவு ஏற்பட்டபோது, மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகனம் மீது பாறைகள் விழுந்தன. அதில் 9 பேர் பலியானார்கள்.

  View more on twitter
 2. ஹிமாச்சல பிரதேசத்தில் திடீர் நிலச்சரிவால் சிதறிய மலைப்பாறைகள் - 9 பேர் பலி

  ஹிமாச்சல பிரதேசம்
  Image caption: ஹிமாச்சல பிரதேசம் கினாரில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாறைகள் உடைந்து விழுந்த இணைப்புப்பாலம்.

  ஹிமாச்சல பிரதேசத்தின் கினார் மாவட்டத்தில் பட்சேரி-சங்க்லா சாலை பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில், மலையில் இருந்த பாறைகள் வெடித்துச்சிதறின.

  இதில் அந்த வழியாக சுற்றுலா பயணிகளுடன் வந்த டெம்போ மீது பாறைகள் விழுந்ததில் அதில் இருந்த 9 பயணிகள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் மூன்று பேர் காயம் அடைந்தனர்.

  இந்த நிலச்சரிவை சிலர் காணொளியாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததையடுத்து இந்த காட்சி வைரலாகி வருகிறது.

  அதில், மலைப்பகுதியின் மேலிருந்து திடீரென மிகப்பாறைகள் வெடிப்பது போலவும் அதைத்தொடர்ந்து அவை மிக மேகமாக சாலை நோக்கி விழுந்து ஓடுவது போலவும் காட்சிகள் இருந்தன. அந்த மலை பாதையை இணைக்கும் பாலம் மீது பாறைகள் விழுந்ததில் அது ஒரு நொடியில் அப்படியே தரைமட்டமான காட்சியும் பதிவாகியிருந்தது.

  இந்த சம்பவத்தையடுத்து காயம் அடைந்தவர்களை உடனடியாக காவல்துறையினரும் தீயணைப்பு வீரர்களும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஹிமாச்சல பிரதேச அரசு பிரதமரின் நிவாரண நிதிதியில் இருந்து ரூ. 2 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்குவதாக அறிவித்துள்ளது.

  View more on youtube
 3. இந்தியாவில் 4 மாநில ஆளுநர்கள் இடமாற்றம், 4 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்

  INDIA PRESIDENT
  Image caption: ராம்நாத் கோவிந்த், இந்திய குடியரசு தலைவர்

  இந்தியாவில் நான்கு மாநிலங்களின் ஆளுநர்கள் திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பிறப்பித்துள்ளார்.

  இதன்படி மிசோரம் மாநில ஆளுநர், கோவா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  ஹரியாணா மாநில ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யா, திரிபுரா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  திரிபுரா ஆளுநர் ரமேஷ் பய்ஸ் ஜார்கண்ட் மாநில ஆளுநராகவும், ஹிமாச்சல பிரதேச ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா ஹரியாணா மாநில ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  புதிய ஆளுநர்கள்: கர்நாடகா மாநில ஆளுநராக தாவர்சந்த் கெலாட், மிசோரம் ஆளுநராக ஹரிபாபு கம்பம்பட்டி, மத்திய பிரதேச ஆளுநராக மங்குபாய் சகன்பாய் படேல், ஹிமாச்சல பிரதேச மாநில ஆளுநராக ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  இதில் கர்நாடகா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் தாவர்சந்த் கெலாட், பிரதமர் மோதியின் மத்திய அமைச்சரவையில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் அமைச்சராக இருந்து வருகிறார்.

  பிரதமர் மோதி தலைமையிலான அமைச்சரவை ஒரு சில நாட்களில் விரிவுபடுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு டெல்லி அரசியல் வட்டாரத்தில் மேலோங்கி வரும் வேளையில், இந்த ஆளுநர்களின் மாற்றங்களும் புதிய நியமனங்களும் வந்துள்ளதால், இந்த அரசியல் நிகழ்வு, உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

 4. ஷதாப் நஷ்மி

  பிபிசி விஸ்ஜோ அணி

  கொரோனா பரிசோதனை

  முதல் அலையின்போது கிட்டதட்ட எந்த பாதிப்பும் ஏற்படாத வடகிழக்கு மாநிலங்களில் தற்போது தொற்றும் இறப்பும் அதிகரித்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் இந்த மாநிலங்களில் தொற்று குறைவதற்கான சூழல் தற்போதைக்கு இல்லை.

  மேலும் படிக்க
  next
 5. Video content

  Video caption: வெடிமருந்தால் சிதைந்த சினைப் பசுவின் வாய் - நடந்தது என்ன? |

  வெடிமருந்தால் சிதைந்த சினைப் பசுவின் வாய் - நடந்தது என்ன? |

 6. வாக்களித்த பெண்கள்

  மகாராஷ்டிரா, ஹரியாணா மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 51 சட்டப்பேரவை தொகுதிகளிலும், 2 மக்களைவை தொகுதிகளிலும் இன்று (திங்கள்கிழமை) நடக்கும் இடைத்தேர்த நிலவரம்

  மேலும் படிக்க
  next