மும்பை

 1. மயங்க் பகவத்

  பிபிசி மராத்தி

  'முத்தமிடுவது தடை செய்யப்பட்ட பகுதி' - மும்பையில் வைக்கப்பட்ட அறிவிப்பு

  மும்பையில் கோவிட்-19 கட்டுப்பாடுகள் இருப்பதால், மரைன் ட்ரைவ், வோர்லி சீ ஃபேஸ் ஆகிய இடங்களில் அமர்வது தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரைகளும் மூடப்பட்டிருப்பதால் ஜோடிகளுக்கு சந்திப்பதற்கான இடம் கிடைப்பதில்லை.

  மேலும் படிக்க
  next
 2. ராஜ் குந்த்ரா

  நடுத்தர குடும்பத்தில் பிறந்து ஆடம்பர வாழ்க்கை வாழ பல தொழில்களை செய்து வந்த ராஜ் குந்த்ராவின் தொழில் வளர்ச்சிக்கு உதவிய தொடர்புகள் மற்றும் அவற்றின் பின்புலம் எப்போதும் மர்மமானதாகவே இருந்தது. அதுபோலவே இப்போதும் அவர் சிக்கியிருக்கும் ஆபாச பட தயாரிப்பு விவகாரத்திலும் அவருக்கு நேரடி பங்களிப்பு உள்ளதா என்பதை சட்டத்தின் முன் நிரூபிப்பது மும்பை காவல்துறையினருக்கு சவாலானதாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 3. மழை

  நூற்றுக்கணக்கான கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பல வீடுகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. பல வீடுகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

  மேலும் படிக்க
  next
 4. ஷில்பா ஷெட்டி கணவர்

  வெப் சீரியஸ் மற்றும் குறும்படங்களில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாகக் கூறி அழைத்து, ஆபாசப் படத்தில் நடிக்கும்படி கட்டாயப்படுத்தியதாக ஒரு பெண் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக புகார் அளித்தார்

  மேலும் படிக்க
  next
 5. மும்பை கனமழைக்கு 15 பேர் பலி

  மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

  இன்று அதிகாலை 1 மணியளவில் செம்பூர் பகுதியில் உள்ள இரண்டு அடுக்கு வீடு ஒன்று சரிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர்.

  விக்ரோலி பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் பெய்த கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்தனர்.

  நிகழ்விடங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

  அடுத்த ஐந்து நாட்களுக்கு மும்பையில் கனமழை தொடரும் என்கிறது இந்திய வானிலை ஆய்வுத்துறை.

  இந்த நிகழ்வுகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரண்டு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும் என்று இந்திய அறிவித்துள்ளது.

  View more on twitter
 6. முதுபெரும் இந்தி நடிகர் திலீப்குமார் மறைவு

  பிரதமர் மோதி இரங்கல்

  முதுபெரும் இந்தி நடிகர் திலீப்குமார் தமது 98வது வயதில் காலமானார்.

  அவர் சிகிச்சை பெற்றுவந்த மும்பை இந்துஜா மருத்துவமனை பிபிசி இந்தி சேவையிடம் அவரது மரணத்தை உறுதிப்படுத்தியது.

  புதன்கிழமை காலை 7.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக இந்துஜா மருத்துவமனை மருத்துவர் ஜலில் பால்கர் தெரிவித்தார்.

  அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோதி டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

  அவர் திரைத்துறை நாயகனாக எப்போதும் நினைவுகூரப்படுவார். அவரிடம் ஒப்பற்ற திறமை இருந்தது. அதனால்தான் பல தலைமுறையைச் சேர்ந்த ரசிகர்களை அவர் மகிழ்வித்தார் என்று தமது பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

  View more on twitter
  திலீப்குமார்
 7. ஸ்டேன் சுவாமி

  பழங்குடியின மக்களின் உரிமைக்காக பணியாற்றி வரும் ஆர்வலர் சுவாமியின் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் இந்தியக் குற்றவியல் சட்டத்தின் கடுமையான சில பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 8. Video content

  Video caption: கொரோனா ஊரடங்கில் மலர்ந்த மனிதம்: மும்பையில் பலரின் பசியைப் போக்கும் தாய் மகன் இணை

  கொரோனா வைரஸ் ஊரங்கில் மக்களின் பசியை போக்க மும்பையில் பணியாற்றி வரும் தாய் மகன் இணை.

 9. திலிப் லண்டே

  கவுன்சிலர் தன் வேலையை முறையாகச் செய்யவில்லை. கழிவு நீர் வடிகாலை முறையாக சுத்தம் செய்யவில்லை எனவே தற்போது சாலையில் நீர் தேங்கிக் கொண்டிருக்கிறது என குற்றம் சாட்டினார்.

  மேலும் படிக்க
  next
 10. மும்பையில் கட்டடம் இடிந்து 11 பேர் பலி

  மும்பை கட்டடம் இடிந்து 11 பேர் பலி

  மும்பையின் நெருக்கமான குடியிருப்புப் பகுதியில் நேற்றிரவு வீடு இடிந்து 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். கட்டடம் இடிந்ததைத் தொடர்ந்து அருகில் வலுவற்றுக் காணப்படும் பிற கட்டடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருவதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கட்டடம் இடிந்தபோது குழந்தைகள் உள்பட ஏராளமானோர் உள்ளே இருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. புதன்கிழமை கன மழை பெய்ததால், ஏற்கெனவே பலவீனமாக இருந்த கட்டடம் இடிந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பக்கம் 1 இல் 10