மம்தா பானர்ஜி

 1. பராதர்

  தோகாவில் அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் தாலிபன்கள் சார்பில் பங்கேற்றவரும், படை வெளியேற்ற உடன்பாட்டில் கையெழுத்திட்டவரும் அவர்தான். தாலிபன்களின் அரசியல் முகமாக அவர் பார்க்கப்படுகிறார்.

  மேலும் படிக்க
  next
 2. தமிழிசை

  டோக்யோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய வீரர் மணீஷ் நர்வால் துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்றார்.

  மேலும் படிக்க
  next
 3. மயூரேஷ் கொன்னூர்

  பிபிசி மராட்டி செய்தியாளர்

  AITMC Chief and Bengal CM Mamata Banerjee and NCP chief Sharad Pawar

  எதிர்வரும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலும் குடியரசுத் தலைவர் தேர்தலும் ஒரு பரிசோதனைக் களமாக இருக்கும். சரத் பவாரும் மமதாவும் இந்த இரு தேர்தல்களில் ஆற்றவிருக்கும் பங்களிப்பு எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

  மேலும் படிக்க
  next
 4. நாடாளுமன்றத்தில் அமளி: மாநிலங்களவையில் திரிணமூல் காங்கிரஸின் 6 உறுப்பினர்கள் இடைநீக்கம்

  மாநிலங்களவை

  பெகாசஸ் வேவு பார்க்கும் மென்பொருள் பயன்பாடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி எதிர்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வரும் வேளையில், மாநிலங்களவையில் விதிகளை மீறி அவையின் மையப்பகுதிக்கு வந்து ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறி 6 உறுப்பினர்களை இன்று நாள் முழுவதுமாக இடைநீக்கம் செய்திருக்கிறார் மாநிலங்களவை தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு.

  டோலா சென், நடிமுல் ஹக், அபிர் ரஞ்சன் பிஸ்வாஸ், ஷாந்தா சேத்ரி, அர்பிதா கோஷ், மெளசம் நூர் ஆகிய இந்த ஆறு உறுப்பினர்களும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

  மாநிலங்களவை
  Image caption: மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்களின் பெயர் இடம்பெற்ற நாடாளுமன்ற செய்தி அறிக்கை
 5. அவசரகதி மசோதா: பாப்டி சாட் செய்கிறதா அரசு? டெரெக் ஓ பிரெய்ன் எம்.பி கண்டனம்

  TMC
  Image caption: டெரெக் ஓ ப்ரெயின், எம்.பி

  நாடாளுமன்றத்தில் அவரசகதியில் நிறைவேற்றப்படும் மசோதா தொடர்பாக கடுமையாக விமர்சித்துள்ளார் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி டெரெக் ஓ பிரெய்ன்.

  இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் "நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் 10 நாட்களில் மோதி-அமித் ஷா அணி அவசர கதியில் 12 மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது. இது சராசரியாக ஏழு நிமடங்களுக்குள் ஒரு மசோதா என்ற வகையில் உள்ளது. இந்த அரசு சட்ட மசோதாக்களை நிறைவேற்றுகிறதா இல்லை பாப்டி சாட் செய்கிறதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

  தமது ட்விட்டர் பக்கத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாக்கள் தொடர்பான வரைகலை படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

  அந்த படத்தின்படி ஒவ்வொரு மசோதாவும் அறிமுகப்படுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே நிறைவேற்றப்பட்டுள்ளது. மிக வேகமாக நிறைவேற்றப்பட்ட மசோதாவாக தேங்காய் வளர்ச்சி வாரிய மசோதா, ஒரு நிமிடத்துக்குள்ளாக நிறைவேற்றப்பட்டதாகவும், மிகவும் தாமதமாக அதாவது பதினான்கு நிமிடங்களில் இந்திய விமான நிலையங்கள் ஆணைய பொருளாதார ஒழுங்குமுறை மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

  டெரெக் ஓ பிரெய்னின் விமர்சனத்துக்கு அரசு தரப்பு இன்னும் பதிலளிக்கவில்லை.

  View more on twitter
 6. மமதா பானர்ஜியுடன் கனிமொழி சந்திப்பு

  திமுக கனிமொழி
  Image caption: மேற்து வங்க முதல்வர் மமபா பானர்ஜியை சந்தித்த மக்களவை திமுக எம்.பி கனிமொழி

  மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜியை டெல்லியில் அவர் தங்கியுள்ள பங்களா பவனில் மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி இன்று மாலையில் சந்தித்துப் பேசினார்.

  சுமார் 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது. பெகாசஸ் விவகாரம், 2024ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல், எதிர்கட்சிகள் ஓரணியில் நாடாளுமன்றத்தில் செயல்படுவது உள்ளிட்டவை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

  இதுகுறித்து கனிமொழி எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில், "மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜியை சந்தித்ததில் மகிழ்ச்சி. மேற்கு வங்க தேர்தலில் அவரது கட்சி அடைந்த மகத்தான வெற்றிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்தேன்.மத்திய அரசின் ஜனநாயக விரோத போக்கு மற்றும் பாசிச சக்திகளுக்கு எதிரான போரில் மொத்த நாடும் ஒன்றுபட வேண்டியதன் அவசியம் குறித்து நாங்கள் பேசினோம் என்று கூறியுள்ளார்.

 7. மோதியை சந்தித்த மம்தா: மாநிலத்தின் பெயரை மாற்றக் கோரிக்கை

  மம்தா பானர்ஜி - நரேந்திர மோதி சந்திப்பு.
  Image caption: மம்தா பானர்ஜி - நரேந்திர மோதி சந்திப்பு.

  டெல்லி வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தார். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும், இந்த சந்திப்பின்போது மாநிலத்துக்கு அதிக அளவில் கோவிட் தடுப்பூசி, மருந்துகள், வழங்கவேண்டும் என்றும், மாநிலத்தின் பெயரை மாற்றவேண்டும் என்ற பழைய கோரிக்கையை நிறைவேற்றவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்ததாக கூறினார்.

  இந்த கோரிக்கைக்கு, "பார்க்கலாம்" என்று பிரதமர் நரேந்திர மோதி பதில் அளித்ததாக மம்தா கூறினார்.

  பிறகு செய்தியாளர்களிடம் பெகாசஸ் உளவு சர்ச்சை குறித்துப் பேசிய மம்தா பானர்ஜி இந்த விஷயத்தில் பிரதமர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

 8. பசவராஜ் பொம்மை - எடியூரப்பா

  தமிழ்நாடு, இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளை இந்தப் பக்கத்தில் தொடர்ந்து நேரலையாக வழங்குகிறோம்.

  Follow
  next
 9. சரோஜ் சிங்

  பிபிசி செய்தியாளர்

  மமதா பானர்ஜி

  தலைவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றும் ஒரு தொண்டர் மட்டுமே தாம் என மமதா பானர்ஜி பேசியுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 10. Video content

  Video caption: சோசலிசத்துக்கும் மம்தா பானர்ஜிக்கும் திருமணம்: தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த

  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சேலம் மாவட்ட செயலாலர் மோகன் தன் மகன்கள் மூவருக்கும் கம்யூனிஸ சித்தாந்த பெயர்களைச் சூட்டி இருக்கிறார்.

பக்கம் 1 இல் 5