பொதுப் போக்குவரத்து

 1. ஹுமைரா கன்வல்

  பிபிசி உருது செய்தியாளர், இஸ்லாமாபாத்தில் இருந்து

  பனியில் மூடப்பட்டிருக்கும் கார்

  பனிப்பொழிவு காரணமாக சாலைகளில் மரங்கள், மின்கம்பங்கள் விழுந்து கிடக்கின்றன. வாகனங்களின் கண்ணாடிகளைத் தட்டி மக்களின் நிலையை அறிய முயல்கின்றனர். பதில் கிடைக்கவில்லையென்றால், வாகனத்தை உடைத்துத் திறந்து உள்ளே இருப்பவர்களுக்கு உதவும் முயற்சி நடந்துவருகிறது.

  மேலும் படிக்க
  next
 2. பெட்ரோலுக்கு ரூ. 25 சலுகை - ஜார்கண்ட் முதலமைச்சர் அறிவிப்பு

  ஜார்கண்ட் மாநிலத்தில் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் ஓட்டுவோருக்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2022 ஜனவரி 26ம் தேதி முதல் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ. 25 சலுகை அளிக்கப்படும் என்று ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.

  View more on twitter
 3. ரெஹான் ஃபசல்

  பிபிசி செய்தியாளர், டெல்லி

  இந்திய கடற்படை

  இந்திய விமானப்படை விமானிகள் கராச்சி மீது குண்டுவீசச் சென்றபோது, "இது ஆசியாவின் மிகப்பெரிய பான் ஃபயர் (கொண்டாட்ட நெருப்பு)" என்று தெரிவித்தனர். கராச்சியில் சூழ்ந்த புகையால் மூன்று நாட்களுக்கு சூரிய ஒளியை காண முடியவில்லை.

  மேலும் படிக்க
  next
 4. Video content

  Video caption: ரயிலில் சிக்காமல் பெண்ணின் உயிரைக் காத்த பெண் காவலர்

  ஓடும் ரயிலில் ஏற முயன்று கீழே விழுந்த 50 வயது பெண் ஒருவரைத் துரிதமாகச் செயல்பட்டு காப்பாற்றியுள்ளார் இந்திய ரயில்வே பாதுகாப்பு படையின் பெண் காவலர் ஒருவர்.

 5. ஜேக் காட்மென் மற்றும் மிகா லுக்சன்

  பிபிசி உண்மை சரிபார்க்கும் குழு

  அமெரிக்க துறைமுகங்களில் காத்திருக்கும் சரக்கு கப்பல்கள்

  தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை நேரில் வேலை செய்ய ஊக்குவிப்பதால், கணினிகள், பிரின்டர்கள், சர்வர்கள் போன்ற அலுவலக சாதனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது, அவற்றில் பல பொருட்கள் தற்போது ஆசியாவிலிருந்து அமெரிக்கா வரும் பல்வேறு கொள்கலன்களில் உள்ளன.

  மேலும் படிக்க
  next
 6. டேவிட் பிரௌன்

  பிபிசி நியூஸ்

  சீனா

  "சீனா கார்பன் அளவை குறைக்காவிட்டால் நம்மால் பருவநிலை மாற்றத்தை வெல்ல முடியாது," என்கிறார் லேன்செஸ்டர் சுற்றுச்சூழல் மையத்தை சேர்ந்த பேராசிரியர் டேவிட் டைஃபீல்டு.

  மேலும் படிக்க
  next
 7. நேபாளில் பேருந்து கவிழ்ந்து குறைந்தது 25 பேர் பலி

  நேபாள நாட்டின் முகு எனும் மாவட்டத்தில் நடந்த பேருந்து விபத்தில் குறைந்தது இருபத்தி ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு காவல்துறை தெரிவிக்கிறது.

  விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. ஆனால் இந்த விபத்து தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள படங்கள் சேதமடைந்து பேருந்து ஒன்று கவிழ்ந்து நிலையில் மலையடிவாரத்தில் இருப்பதைக் காட்டுகின்றன.

  நிகழ்விடத்திற்கு மீட்பு பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் நேபாள நாட்டு காவல்துறை தெரிவிக்கிறது.

  இமயமலை நாடான நேபாளத்தில் சாலை விபத்துகள் நடப்பது வழக்கமானது. மோசமான சாலைகள் மற்றும் போதிய பராமரிப்பு இல்லாத வாகனங்கள் ஆகியவையே பெரும்பாலும் விபத்துக்கு காரணமாக அமைகின்றன.

  Nepal bus crash kills at least 25 in Mugu district
 8. Indian Railways bbc news

  எச்சில் துப்புவதற்காக சட்டைப் பைக்குள் வைத்துக் கொள்ளும் அளவு சிறிய, மக்கக்கூடிய பை ஒன்றை இந்திய ரயில்வே பயணிகளின் பயன்பாட்டுக்கு வழங்க உள்ளது.

  மேலும் படிக்க
  next
 9. வண்டி ஹாரன்களில் இந்திய இசைக்கருவிகளின் இசை மட்டுமே கேட்க புதிய சட்டம் - நிதின் கட்கரி

  நிதின் கட்கரி.
  Image caption: நிதின் கட்கரி.

  வண்டிகளில் ஒலிக்கும் ஹாரன்கள் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் அதிக சத்தம் போடுகின்றனவா?

  ஹாரன்கள் அடிக்க தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஹாரன் அடிக்கிறார்களா?

  என்பதைத்தான் இதுவரை போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வந்தனர்.

  இனி ஹாரன்களில் ஒலிப்பது இந்திய இசைக் கருவிகளின் ஓசைதானா என்பதையும் அதிகாரிகள் கவனிக்கவேண்டியிருக்கும் போலத் தெரிகிறது.

  ஆம்.

  இந்தியாவில் ஹாரன்களில் இந்திய இசைக் கருவிகளின் இசை மட்டுமே ஒலிக்கவேண்டும் என கட்டுப்பாடு விதிக்கும் வகையில் ஒரு புதிய சட்டம் இயற்றப்படும் என்று இந்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார் என்கிறது பி.டி.ஐ. செய்தி நிறுவனம்.

  View more on twitter
 10. பயணிகள் கப்பல் - சித்தரிப்புப் படம்.

  ராமேஸ்வரம் மீனவர்கள் குறுகிய கடல் எல்லைக்குள் மீன் பிடிப்பதால் எல்லை தாண்ட நேரிடுகிறது, இதனால் இரு நாட்டு கடற்படையினரும் நடவடிக்கை எடுக்கிறார்கள். எனவே இரு நாட்டு கடற்படையினர் பேசி சுமூக தீர்வு ஏற்பட இலங்கை அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 9