தஞ்சம் கோரிகள்

 1. குடியேறிகளை வெளியேற்றும் அமெரிக்கா

  கரீபிய நாடான ஹைட்டியில் இருந்து அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி குடியேறியவர்கள், ஹைத்திக்கு மீண்டும் கொண்டு வந்துவிடப்பட்டனர்.

  போர்ட்டா ப்ரின்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் அவர்களை அழைத்து வந்த ஜெட் விமானம் மீண்டும் கிளம்பியபோது, சிலர் மீண்டும் விமானத்தில் என்ற முயற்சித்தனர். சிலர் அந்த விமானம் மீது தங்கள் காலணிகளை வீசினர்.

  டெக்ஸாஸின் எல்லையோர நகரம் ஒன்றில் இருந்து அமெரிக்காவுக்குள் புலம்பெயர்ந்தவர்களை விமானம் மூலம் திருப்பி அனுப்பும் நடவடிக்கையை அமெரிக்கா கடந்த வாரம் தொடங்கியது.

  அமெரிக்காவினுள் நுழைய அமெரிக்க - மெக்சிகோ எல்லைப்பகுதி ஒன்றில் சுமார் 13,000 குடியேறிகள் காத்திருக்கின்றனர்.

  கொலம்பியா - பனாமா எல்லையிலும் அமெரிக்காவில் குடியேற விரும்பும் பல்லாயிரம் பேர் சிக்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  ஹைட்டி
 2. அமெரிக்க குடியேறிகள்

  டெக்சாஸ் - மெக்சிகோவை இணைக்கும் பாலத்தின் அருகே ஆயிரக்கணக்கான குடியேறிகள் முகாம்களை அமைத்து மிக மோசமான சூழலில் வசித்து வருகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 3. Video content

  Video caption: கனவுகளை தாயகத்தில் புதைத்து விட்டு வெளிநாடு தப்பிச் சென்ற ஆப்கன் பெண் நடனக்கலைஞர்

  ஆப்கானிஸ்தானின் ஒரே சுழலும் நடனக் கலைஞரான ஃபாஹிமா தமது குடும்ப உறவுகளை தாயகத்தில் விட்டு விட்டு பிரான்ஸில் தஞ்சம் அடைந்துள்ளார்.

 4. சுவாமிநாதன் நடராஜன்

  பிபிசி நியூஸ்

  மாயா கசல்

  மாயா கசலுக்கு 16 வயது இருக்கும்போது தனது உடன் பிறந்தவர்கள் மற்றும் தாயுடன் சிரியாவிலிருந்து தப்பி பிரிட்டனிலிருக்கும் தனது தந்தையுடன் சேர வந்தார்.

  மேலும் படிக்க
  next
 5. தனுஷ்கோடியில் இருந்து சட்டவிரோதமாக படகில் தப்ப முயன்ற இலங்கை பெண் கைது

  பிரபுராவ்ஆனந்தன்:

  இலங்கை
  Image caption: கஸ்தூரி

  தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு சட்ட விரோதமாக தப்ப முயன்ற இலங்கையை சேர்ந்த இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

  வெளிநாடு தப்பிச் செல்ல அவர் தமிழகம் வந்தாரா என மத்திய உளவுத்துறை தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.

  இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த சிவனேசன் இவருடைய மகள் கஸ்தூரி (19). இறுதி கட்ட போரின் போது இலங்கையில் இருந்து தப்பி தமிழகம் வந்து இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கி இருந்த நபருடன் ஏற்பட்ட காதலால் கஸ்தூரி 2018ஆம் ஆண்டு விமான மூலம் சென்னை வந்துள்ளார்.

  விசா முடிந்த பின்னும் இலங்கைக்கு திரும்பி செல்லாமல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில்; சட்ட விரோதாக தங்கி வாழ்ந்து வந்துள்ளார்.

  இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவலை கிராமத்தில் வசித்து வரும் கஸ்தூரியின் தந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் இலங்கைக்கு திரும்பிச் செல்ல இன்று அதிகாலையில் அவர் தனுஷ்கோடி வந்தார். அங்குள்ள நாட்டுப்படகு மூலம் கஸ்தூரி சட்டவிரோதமாக முல்லைத்தீவுக்கு புறப்பட்டுள்ளார்.

  அப்போது தனுஷ்கோடியை அடுத்த இரண்டாம் மணல் திட்டு பகுதியில் இந்திய கடலோர காவல் படை ரோந்து படகு வந்ததையறிந்த படகோட்டி கஸ்தூரியை முதல் மணல் திட்டு பகுதியில் இறங்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

  இதையடுத்து அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தமிழக கடலோரா பாதுகாப்பு குழும ராமேஸ்வரம் ஆய்வாளர் கனகராஜ் தலைமையிலான போலீசார் படகில் சென்று கஸ்தூரியை கைது செய்து தனுஷ்கோடிக்கு அழைத்து வந்தனர்.

  கஸ்தூரியிடம் மெரைன் போலீசார் முதல் கட்ட விசாரணை செய்த பிறகு அவரை ராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

  சமீப காலமாக இலங்கை மக்கள் சிலர் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகம் வந்து வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக தப்பி செல்கின்றனர். எனவே பிடிபட்ட கஸ்தூரி வெளிநாடு செல்லவதற்காக தமிழகம் வந்து சட்டவிரோதமாக தங்கி இருந்தாரா என்ற கோணத்தில் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  தனுஷ்கோடியில் இருந்து சட்டவிரோமாக நாட்டுபடகில் அழைத்து செல்ல அவருக்கு உதவிய ஏஜென்டை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

  கஸ்தூரியிடம் இருந்து பாஸ்போர்ட் உள்ளிட்ட இலங்கை குடியுரிமை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

  இந்த நிலையில், ராமேஸ்வரம் மெரைன் போலீசார் கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்தனர். காவல்துறை விசாரணைக்கு பின் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 6. Video content

  Video caption: தாயகத்தில் உறவுகளின் நிலை குறித்து கவலைப்படும் ஆப்கன் அகதிகள்

  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் தாலிபன்களின் முழு கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆனாலும், பலர் தாயகத்தை விட்டு வெளியேற முடியாமல் தொடர்ந்து சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது.

 7. ஆப்கன் எல்லை பாதுகாப்பு குறித்து பாகிஸ்தான் கவலை

  ஆப்கானிஸ்தான் தாலிபன் பாகிஸ்தான்

  ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பிறகு தாலிபன்கள் அங்கு புதிய அரசாங்கத்தை அமைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

  இந்த நிலையில், அந்த நாட்டின் பாதுகாப்பு குறித்து அதன் அண்டை நாடான பாகிஸ்தான் கவலை தெரிவித்துள்ளது.

  குறிப்பாக தாலிபன் போராளிகள் மீதே பாகிஸ்தான் தனது கவலையை வெளியிட்டுள்ளது.

  ஆப்கானிஸ்தானைக் கடந்து வந்து தங்களுடைய எல்லை பகுதியில் யார் கொடிய தாக்குதல்களை நடத்துவார்கள் என்ற அச்சம் அந்த நாட்டை குடிகொண்டிருக்கிறது.

  கடந்த இரண்டு தசாப்தங்களாக ஜிஹாதிகளின் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் குடிமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

  காபூல் விமான நிலையம் அருகே சமீபத்தில் நடத்தப்பட்ட இரட்டை தாக்குதலுக்குப் பிறகு அந்த கவலைகள் மேலும் அதிகரித்துள்ளன.

  100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட அந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொள்ளும் குழு பொறுப்பேற்றுள்ளது. இதில் சுமார் 13 அமெரிக்க வீரர்களும் அடங்குவர்.

  இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய எல்லைத் தாக்குதலில் தங்களின் இரண்டு பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

  எனவே, அடுத்த இரண்டு-மூன்று மாதங்கள் மிகவும் முக்கியமானவை. ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரிக்கலாம் என்று பாகிஸ்தான் அஞ்சுகிறது என்றும் பாகிஸ்தான் மூத்தஅதிகாரியை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

 8. பிரிட்டிஷ் அரசுக்கு உதவிய ஆப்கானியர்களுக்கு நிரந்தர வசிப்பிட உரிமை: பிரிட்டன் உள்துறை

  பிரிட்டன் அரசு

  ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் ராணுவத்துக்கும் உதவியவர்கள், பிரிட்டனுக்கு தப்பி வந்திருந்தால், அவர்கள் நிரந்தரமாக அங்கேயே தங்கியிருக்க வசிப்பிட உரிமை வழங்கப்படும் என்று பிரிட்டன் உள்துறை தெரிவித்துள்ளது.

  ஆப்கானிஸ்தானியர்கள் மறுவாழ்வு மற்றும் ஆதரவுக் கொள்கை திட்டத்தின்படி கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் இதுநாள்வரை அந்த நாட்டில் இருந்து எட்டாயிரத்துக்கும் அதிகமானோரை பிரிட்டன் அரசு மீட்டுள்ளது.

  அங்கு மேலும் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தொழிலாளர் கட்சி தெரிவித்துள்ளது.

  ஆப்கானிஸ்தானில் இருந்து பிரிட்டன் துருப்புகள் கடந்த வாரம் முழுமையாக வெளியேறின. அத்துடன் அந்த நாட்டில் இருந்த 20 ஆண்டுகளாக முகாமிட்டிருந்த பிரிட்டன் படையின் இருப்பும் முடிவுக்கு வந்தது.

  இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து பிரிட்டனில் தஞ்சம் அடைந்தவர்கள், தங்களுடைய அரசுக்கும் ராணுவத்துக்கும் உதவியிருந்தால் அவர்கள் தொடர்ந்து பிரிட்டனிலேயே வசிக்கலாம்என்று பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர் டோமினிக் ராப் தெரிவித்துள்ளார்.

  அத்தகைய நபர்கள் எத்தனை பேர் எந்ற விவரம் தற்போதைக்கு தன்னிடம் இல்லை என்றும் அவர் கூறினார்.

  ஆபரேஷன் 'வார்ம் வெல்கம்' என்ற பெயரில் இந்த புனர்வாழ்வுத் திட்டத்துக்கு பிரிட்டன் அரசு பெயரிட்டிருக்கிறது. பிரிட்டனில் தஞ்சம் அடைந்த ஆப்கானியர்களுக்கு புதிய வாழ்வு அமைவதை உறுதிப்படுத்தப்படுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

  View more on twitter
 9. இலங்கை அகதிகள்

  தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித் தருவது உள்பட பல்வேறு திட்டங்களையும் சலுகைகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெளியிட்டார்.

  மேலும் படிக்க
  next
 10. சீனா ரஷ்ய அதிபர்

  சீனா, ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிப்பதாக ஷி ஜின்பிங் தெரிவித்ததாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

  Follow
  next
பக்கம் 1 இல் 4