ஆஸ்திரேலியா

 1. சுறா மீன்கள் இனம் முழுமையாக அழிந்து விடுமா ?

  உலகின் மிக பெரிய பவள பாறை வளங்களை கொண்ட ஆஸ்திரேலியாவில் சுறா மீன்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளன என்பதும் இந்த ஆய்வின் மூலம் தெரியவருகிறது.

  மேலும் படிக்க
  next
 2. சாய்ராம் ஜெயராமன்

  பிபிசி தமிழ்

  பப்புவா நியூ கினியின் மத்திய அமைச்சரான தமிழர்

  பட்டாசுக்கு பெயர்போன சிவகாசியில் பிறந்து, தமிழ்வழியில் பள்ளியும், கல்லூரியில் விவசாயமும் படித்த சசீந்தரன், பப்புவா நியூ கினியாவின் மத்திய அமைச்சரானது எப்படி?

  மேலும் படிக்க
  next
 3. போதை மருந்து கடத்தியதாக ஆஸ்திரேலியருக்கு தூக்கு தண்டனை விதித்த சீனா

  "மரண தண்டனை விதிப்பதற்கு எதிரான நிலைபாட்டை கொண்டது ஆஸ்திரேலியா. உலகம் முழுவதும் இவ்வாறு மரண தண்டனை விதிப்பது நீக்கப்பட வேண்டும் என்றே நினைக்கிறோம்" என அந்நாட்டு வெளியுறவுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 4. கோப்புப்படம்

  நீண்ட இடைவெளிக்கு பிறகு நடக்கும் இந்த கூட்டத்தில், டி20 உலகக் கோப்பை போட்டி தொடர், எதிர்காலத்தில் கிரிக்கெட் போட்டிகளை எப்படி நடத்துவது என்பது குறித்த செயல்திட்டம் உள்ளிட்ட பல அம்சங்கள் விவாதிக்கப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 5. ஆஸ்திரேலியா: கொரோனாவால் பாதிக்கப்பட்ட 92% பேர் குணமடைந்தனர்

  ஆஸ்திரேலியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 92% பேர் குணமடைந்துள்ளனர்

  ஆஸ்திரேயாவில் தற்போதைய நிலவரப்படி, கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை வெறும் 21. மேலும் 7,200 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்ததுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் கூறுகிறது.

  ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளதால், இன்று முதல் குறிப்பிடத்தக்க அளவில் அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

  சிட்னியில் இன்று முதல் நீச்சல் குளங்கள், முடித்திருத்தகங்கள், அருங்காட்சியகங்கள் என அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. மதுபானக் கூடங்கள் மற்றும் உணவு விடுதிகளிலும் 50 பேர் வரை கூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 6. ஆஸ்திரேலிய தொல்குடிகள் வசித்த 46 ஆயிரம் ஆண்டு பழமையான குகைகள் தகர்ப்பு: மன்னிப்பு கேட்ட சுரங்க நிறுவனம்

  "ஆஸ்திரேலியாவில் உள்ள விரல்விட்டு எண்ணக்கூடிய வெகுசில பழைய அபாரிஜினல் தொல்குடி தலங்களில் இதுவும் ஒன்று. இதன் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடமுடியாது" என்று அவர் கூறியதாக ராய்டர்ஸ் செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 7. ரூபர்ட் முர்டோச்

  இந்திய செய்தித்தாள்களுக்கு நேர்ந்த்தைப் போலவே, ஆஸ்திரேலியாவிலும் கொரோனா வைரஸ் முடக்க நிலை காரணமாக செய்தித் தாள்களின் விளம்பர வருமானம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் ஊடகத் துறை பெரும் சரிவை சந்திக்கிறது.

  மேலும் படிக்க
  next
 8. நியூசிலாந்தில் ஆறாவது நாளாக புதிய தொற்று எதுவும் இல்லை

  கோப்புப்படம்

  தொடர்ந்து ஆறாவது நாளாக நியூசிலாந்தில் புதிதாக கொரோனா தொற்று எதுவும் கண்டறியப்படவில்லை.

  அதேவேளையில் அந்நாட்டில் உள்ள ஆக்லாந்து நகரில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 98 வயதான மூதாட்டி ஒருவர் இறந்த நிலையில், நியூசிலாந்தில் கோவிட்-19 நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22-ஆக அதிகரித்துள்ளது.

  சமூக பரவல் தொடர்பான அறிகுறிகளும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தான் என்றும், அதற்கு பிறகு அம்மாதிரியான அறிகுறிகள் எதுவும் இல்லை என நியூசிலாந்தின் சுகாதாரத்துறையின் இயக்குநரான ஆஷ்லே ப்ளூம்பீல்ட் தெரிவித்துள்ளார்.

  இதனிடையே நாளை முதல் நியூசிலாந்தில் கூட்டங்கள் மற்றும் சந்திப்புகளில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலையான பத்தில் இருந்து 100-ஆக அதிகரிக்க உள்ளது.

  மேலும் ஆஸ்திரேலியவுடனான தனது எல்லையை, வரும் ஜுலை முதல் திறக்கக்கூடும் என்றும் நியூசிலாந்து அரசு குறிப்பிட்டுள்ளது.

 9. சீனாவிடம் இருந்து மற்றொரு அடியை எதிர்கொண்ட ஆஸ்திரேலியா

  ஆஸ்திரேலியா

  ஆஸ்திரேலியா தனது மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியான சீனாவிடமிருந்து மற்றொரு பெரும் அடியை இன்று எதிர்கொண்டது.

  தங்கள் நாட்டுக்கு ஆஸ்திரேலியா ஏற்றுமதி செய்யும் பார்லிக்கு 80% வரியை சீனா விதித்துள்ளது.

  சீனாவின் விருப்பத்திற்கு எதிராக, கொரோனா வைரஸின் தோற்றம் மற்றும் பரவல் குறித்து உலகளாவிய விசாரணைக்கு ஆஸ்திரேலியா அழுத்தம் கொடுத்து வருகிறது.

  ஆஸ்திரேலியாவை சேர்ந்த 4 மிகப்பெரிய மாட்டிறைச்சி நிறுவனத்தின் இறக்குமதிக்கு கடந்த வாரம் சீனா தடை விதித்திருந்தது.

  ஆஸ்திரேலியாவின் விசாரணை கோரிக்கைக்கும், தாங்கள் எடுத்தும் வர்த்தக நடவடிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என சீனா கூறியுள்ளது.

 10. ஆஸ்திரேலியா: 100ஐ எட்டியது கொரோனா மரணம்

  கொரோனா

  ஆஸ்திரேலியாவில் இதுவரை கொரோனாவுக்கு 100 பேர் மரணமடைந்துள்ளனர்.

  முதியோர் முகாமில் வசித்து வந்த 93 வயதான பெண், 100வது மரணமாக பதிவாகியுள்ளார். சிட்னில் உள்ள இந்த முதியோர் முகாமில் மட்டும் 19 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.

  ஆஸ்திரேலியாவில் தொற்று எண்ணிக்கையும், இறப்பு விகிதமும் மேற்குலக நாடுகளை விட குறைவாக உள்ளாது. இங்கு இதுவரை 7000 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது

பக்கம் 1 இல் 8