வணிகம்

 1. அன்பரசன் எத்திராஜன்

  பிபிசி செய்திகள்

  Gemologist Gamini Zoysa analyses the star sapphire cluster

  இலங்கையின் ரத்தினபுரா பகுதியில் ஒரு ரத்தின வணிகர் வீட்டின் பின்புறம் கிணறு தோண்டும்போது தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது இந்த நீலக்கல்.

  மேலும் படிக்க
  next
 2. Video content

  Video caption: அமேசான் தலைமை செயலதிகாரி ஜெஃப் பெசோஸ் பதவி விலகல் - இனி என்ன செய்வார்?

  அமேசான் தலைமை செயலதிகாரி ஜெஃப் பெசோஸ் பதவி விலகல் - இனி என்ன செய்வார்?

 3. அமேசான் ஜெஃப் பெசோஸ்

  அமேசான் நிறுவனம் 27 ஆண்டுகளுக்கு முன்பு 1994ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதே தினத்தில் தமது பதவியில் இருந்து விலகுவேன் என்று கடந்த மே மாதம் அறிவித்திருந்தார் ஜெஃப் பெசோஸ். அதன்படியே அவர் செய்தும் காட்டியிருக்கிறார்.

  மேலும் படிக்க
  next
 4. இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி

  தரவுகளை வெளியிட்ட அரசு

  நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியா 95 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 7,10,000 கோடி ரூபாய்) அளவுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக வெள்ளியன்று இந்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

  2021-22ஆம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் இந்தியா செய்துள்ள ஏற்றுமதி,2020 -2021ஆம் நிதி ஆண்டின் இதே காலாண்டில் செய்த ஏற்றுமதி அளவை விட 85 சதவிகிதம் அதிகம்.

  சென்ற ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 51.44 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்துள்ளது.இந்த ஆண்டு இது 95.36 பில்லியன் டாலராக உள்ளது.

  ஜூன் மாதத்தில் இந்திய அரசின் வர்த்தக பற்றாக்குறை 9.4 பில்லியன் (சுமார் 70,000 கோடி இந்திய ரூபாய்) அமெரிக்க டாலராக இருந்தது என்று அந்தத் தரவுகள் காட்டுகின்றன.

  இதேபோல இந்தியாவின் இறக்குமதி இரண்டு மடங்குக்கு மேல் அதிகமாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் 60.65 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த ஒட்டு மொத்த இறக்குமதியின், மதிப்பு இந்த ஆண்டு 126. 14 பில்லியன் அமெரிக்க டாலராக (சுமார் 9,41,000 இந்திய ரூபாய்) உள்ளது.

 5. ஜூபைர் அகமத்

  பிபிசி செய்தியாளர்

  மோதி

  ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில் சீனாவைச் சார்ந்திருப்பது எவ்வளவு குறைந்துள்ளது என்பது இப்போதைய கேள்வி. உண்மை என்னவென்றால், எல்லா நாடுகளிலிருந்தும் இறக்குமதி கணிசமாகக் குறைந்துவிட்டது, ஆனால்...

  மேலும் படிக்க
  next
 6. ஆ.விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  செயற்கை விலை உயர்வு ஏன்?

  தமிழ்நாட்டில் கட்டுமானப் பொருள்களின் செயற்கை விலையேற்றத்தால் சொந்த வீடு கனவில் உள்ளவர்களும் ஒப்பந்ததாரர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். `உற்பத்தி பொருள்களுக்கு எந்தவிதத் தடையும் இல்லாத சூழலில் இப்படியொரு விலையேற்றம் ஏன்?' என்ற கேள்வியும் எழுந்துள்ளது. என்ன நடக்கிறது?

  மேலும் படிக்க
  next
 7. ஊரடங்கு

  தமிழ்நாட்டில் தற்போது கொரோனா நோய்த் தொற்று பரவலாக பல மாவட்டங்களில் கட்டுக்குள் வந்துள்ளபோதிலும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மட்டும் நோய்த் தொற்றுப் பரவல் தொடர்ந்து அதிகமாகவே இருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 8. Video content

  Video caption: ஸ்பேர்ம் திமிங்கலத்தின் வாந்திக்கு தங்கத்தை விட மதிப்பு அதிகம் ஏன்?

  ஸ்பேர்ம் திமிங்கலத்தின் வாந்திக்கு இத்தனை மதிப்பா? இந்த அம்பர்கிரிஸ் என்கிற வாந்தியை வைத்து என்ன செய்வார்கள்?

 9. சச்சின் கோகோய்

  தெற்காசிய மூத்த ஆசிரியர்

  இந்தியா சீனா

  சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், ஏப்ரல் மாதத்தில் சீனா 26,000 க்கும் மேற்பட்ட வென்டிலேட்டர்கள் மற்றும் ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள், 15,000 க்கும் மேற்பட்ட மானிட்டர்கள் மற்றும் கிட்டத்தட்ட 3,800 டன் மருத்துவப் பொருட்கள் மற்றும் மருந்துகளை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ததாகத் தெரிவித்திருந்தார்.

  மேலும் படிக்க
  next
 10. அலோக் ஜோஷி

  பிபிசி க்காக

  மோதி

  நாம் மூச்சைப்பிடித்துக்காத்துக்கொண்டிருந்த அந்த செய்தி வந்து விட்டது. கடந்த ஆண்டு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சரிவு எதிர்பார்த்ததை விட குறைவாகவும், நான்காவது காலாண்டில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை விட சற்று மேம்பட்டும் தரவுகள் இருக்கின்றன. ஆனால் இது கடந்த நாற்பதாண்டுகளுக்கும் அதிகமான காலகட்டத்தில் பதிவாகியுள்ள மிகமோசமான அளவாகும்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 13