தண்ணீர்

 1. கேரள மழை வெள்ளம் - பல அணைகளில் நீர் நிரம்பியதால் அபாய எச்சரிக்கை

  கேரள மழை

  கேரளாவில் பொழிந்த தீவிர மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டதையடுத்து, அங்குள்ள பல அணிகளின் நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது.

  அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 26ஐ எட்டியிருக்கிறது. ஆசியாவின் உயரமான அணையாக கருதப்படும் இடுக்கி அணையில் தற்போதைய நிலவரப்படி நீர் மட்டும் 2,403 அடியை எட்டியிருக்கிறது.

  இதனால், அந்த அணையைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  அணையின் கொள்ளளவை விட நீர்மட்டம் அதிகமாகி வருவதால் எந்நேரமும் அணையின் மதகுகள் திறக்கப்படும் என்று கேரள மாநில அரசு கூறியுள்ளது. இதனால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன.

  ஷலோயாறு அணையின் மதகுகள் இன்று காலை 10 மணியளவில் திறக்கப்பட்டுள்ளன. சாலக்குடி நதிக்கரையோர குடியிருப்புவாசிகள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

  கேரள அணை
 2. Video content

  Video caption: தந்தை சொல் கேட்டு அரை நூற்றாண்டாக தாகம் தணிக்கும் சேவை

  தம் தந்தை சொல் கேட்டு அரை நூற்றாண்டாக வழிப் போக்கர்களுக்கு தாகம் தணிக்கும் சேவை செய்யும் முதியவர்.

 3. இந்த கோபுரங்களை உருவாக்க குழாய்களைப் பயன்படுத்துகின்றனர்

  பருவநிலை மாற்றப் பிரச்சனையால், இங்கு இருக்கும் இயற்கை பனிமலைகள் காணாமல் போகத் தொடங்கிவிட்டன. தண்ணீர் பிரச்சனை தீவிரமடைந்துவிட்டது.

  மேலும் படிக்க
  next
 4. பிரமிளா கிருஷ்ணன்/ நடராஜன் சுந்தர்

  பிபிசி தமிழ்

  வியர்வை சிந்தி நதியை உயிர்பெறவைத்த வேலூர் பெண்கள்

  ஒவ்வொரு சொட்டு நீரையும் மதித்து, மாசுபாட்டிற்கு எதிராகப் போராட வேண்டும் என்று அழைப்பு விடுத்த நரேந்திர மோதி, ஆறுகளைப் போற்றும் வகையில் ஆண்டுக்குக் குறைந்தபட்சம் ஒரு முறை நதி திருவிழாவை கொண்டாட வேண்டும் என்றும் யோசனை தெரிவித்திருக்கிறார்.

  மேலும் படிக்க
  next
 5. காவேரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் நியமனம்

  மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் சௌமித்ர குமார் ஹல்தாரை காவேரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் பதவிக்கு மத்திய அரசு நியமித்திருக்கிறது.

  இது தொடர்பான ஆணையை நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு தெரிவித்துள்ளது. இவர் இப்பதவியில் ஐந்து ஆண்டுகள் இருப்பார்.

 6. Video content

  Video caption: கொரோனாவில் இருந்து மீண்ட சீனர்களுக்கு உள்ளூரில் கைகொடுக்கும் நீர் சறுக்கல் விளையாட்டு

  கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகளால் சீனாவில் பயண தடை உள்ளது. இந்நிலையில் பொழுதுபோக்கு விளையாட்டாக இருந்த நீர் சறுக்கல் விளையாட்டு ஹைனான் தீவில் சுற்றுலா தொழிலாகியிருக்கிறது.

 7. அழிவின் விளிம்பில் 30% காட்டு மரங்கள் - உலகத்துக்கு புதிய எச்சரிக்கை

  காடுகள்

  உலகின் 30 சதவிகித காட்டு மர இனங்கள் அழிவை எதிர்கொண்டிருப்பதாக புதிய ஆய்வு மதிப்பீடு ஒன்றின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

  மக்களால் நன்கு அறியப்பட்ட ஓக் மரங்கள் முதல் வெப்பமண்டல மரங்கள் வரை அழிந்து போகும் இனங்கள் பட்டியலில் உள்ளன.

  ஒட்டுமொத்தக் கணக்கீட்டின்படி 17,500 மர இனங்கள் ஆபத்தில் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள். அழிவின் விளிம்பில் உள்ள பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன ஆகியவற்றைக் காட்டிலும் இது இரண்டு மடங்கு எண்ணிக்கையாகும்.

  காடழிப்பு, மரம் வெட்டுதல், பருவநிலை மாற்றம் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் விரைந்து எடுக்க வேண்டும் என சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்

 8. Video content

  Video caption: ஐரோப்பிய பேய்மழைக்கு என்ன காரணம்? - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

  கடந்த ஜூலை மாதத்தில் ஐரோப்பாவில் ஏற்பட்ட பெருமழை அதைத் தொடர்ந்த வெள்ளத்துக்கு பருவநிலை மாற்றமே காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 9. சென்னை

  20ம் நூற்றாண்டில் உலகளாவிய தண்ணீர் பயன்பாடு மக்கள்தொகை உயர்வைக் காட்டிலும் இரு மடங்கு அதிகரித்திருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 10. பருவநிலை மாற்றம்

  உலகின் வெப்பநிலையைக் குறைக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என ஐபிசிசி ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்தால், தாழ்வான நிலப்பகுதிகள் பல கடலுக்குள் மூழ்கும். தமிழ்நாட்டிற்கு இது எந்த அளவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும்?

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 12