தாய்லாந்து

 1. கொரோனா தடுப்பூசி: பாதிப்பு அதிகரிப்பை தடுக்க இரு வேறு மருந்து பயன்படுத்தும் தாய்லாந்து

  CORONA
  Image caption: கோப்புப்படம்

  தாய்லாந்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதையடுத்து, அங்கு புழக்கத்தில் உள்ள சீனாவின் சினோவாக் மருந்துடன் அஸ்ட்ராசெனிகா மருந்தை கலந்து எதிர்ப்பாற்றலை பெருக்கும் வகையில் தமது தடுப்பூசி கொள்கையை தாய்லாந்து அரசு மாற்றியுள்ளது.

  தாய்லாந்தில் சினோவாக் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை முழுமையாக போட்டுக் கொண்ட நூற்றுக்கணக்கான சுகாதார ஊழியர்களுக்கு மீண்டும் வைரஸ் கண்டறியப்பட்டதால், இந்த முடிவை தாய்லாந்து அரசு எடுத்துள்ளது.

  புதிய கொள்கைப்படி சினாவாக் இரண்டு டோஸ்களை போடுவதற்கு பதிலாக இனி முதல் டோஸ் ஆக சினாவாக் தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்கள், இரண்டாவது டோஸ் ஆக அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி மருந்தை போட்டுக் கொள்வார்கள்.

  ஏற்கெனவே இரண்டு டோஸ் சினோவாக் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

  அவர்கள் மூன்றாவது டோஸ் ஆக அஸ்ட்ராசெனிகா மருந்தையோ எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளான ஃபைசர் அல்லது பயோஎன்டெக்கையோ போட்டுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

  முதல் இரண்டு டோஸ்களை போட்டுக் கொண்ட மூன்று முதல் நான்கு வார காலத்தில் மூன்றாவது எதிர்ப்புத்திறன் கூட்டும் பூஸ்டர் மருந்து போடப்படும் என்று தாய்லாந்து நோய்த்தொற்று தடுப்புக் கமிட்டி அறிவித்துள்ளது.

  தாய்லாந்தில் தற்போது கையிருப்பில் கிடைக்கும் ஒரே தடுப்பூசி மருந்தாக அஸ்ட்ராசெனிகா உள்ளது. அந்நாட்டுக்கு ஃபைசர், பயோஎன்டெக் தடுப்பூசி மருந்துகளை தருவதாக அமெரிக்கா கூறியுள்ளது. அந்த தடுப்பு முரந்து விரைவில் தாய்லாந்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இந்த நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம், முதல் தவணையாக சுகாதார ஊழியர்களுக்கு சீனாவின் சினாவாக் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தங்களுடைய நாட்டில் ஆறு லட்சத்து 77 ஆயிரம் மருத்துவ ஊழியர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்தது.

  இதில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் 618 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரு செவிலியர் இறந்து விட்டார். ஒரு மருத்துவ ஊழியர் கவலைக்கிடமாக உள்ளார்.

  நியூ இங்கிலாந்து மருத்துவ சஞ்சிகையின் ஆய்வறிக்கையில், சிலியில் கண்டறியப்பட்ட தரவுகள் அடிப்படையில் சினோவாக் தடுப்பூசி மருந்துக்கு கொரோனா வைரஸ் எதிர்ப்பாற்றல் திறன் 65.9 சதவீதம் உள்ளது. மருத்துவமனையில் சேரும் நிலையை இது 87.5 சதவீதம் தவிர்க்கிறது. இறப்பு விகிதம் 86.3 சதவீதம் அளவுக்கு குறைகிறது என்று கூறப்பட்டுள்ளது. தாய்லாந்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிதாக 9,418 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அங்கு ஒரே நாளில் 91 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.

 2. Video content

  Video caption: பயணிகள் & வாடிக்கையாளர்களின்றி வெறிச்சோடிய தாய்லாந்து - பயணிகளுக்காக காத்திருக்கும் மக்கள்

  பலரின் கனவு சுற்றுலா தளமான தாய்லாந்து இன்று வெறிச்சோடி காணப்படுகிறது. சுற்றுலா துறையைச் சார்ந்து பிழைப்பு நடத்தி வந்த பலரும் இன்று பொருளாதார ரீதியாக தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 3. தாய்லாந்து கடற்படை வீரர்கள்

  செவ்வாயன்று, ஃபாமான்சின் நாவா 10 என்ற அந்த மீன்பிடி படகில் தீப்பிடித்து எரிந்து மூழ்க தொடங்கியது. தாய்லாந்தின் கோ அடாங் என்ற தீவிலிருந்து 13 கிமீ தூரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. அந்த இடத்தை ஆய்வு செய்ய கடற்படையினர் வந்தபோது, அந்த நான்கு பூனைகள் மரத்துண்டு ஒன்றில் தடுமாறி நின்று கொண்டிருந்ததைக் கண்டனர்.

  மேலும் படிக்க
  next
 4. Anchan

  அரச குடும்பத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தாய்லாந்தில் இதுவரை விதிக்கப்பட்ட தண்டனைகளிலேயே மிகக் கடுமையான தண்டனை இது என்று கூறப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 5. Video content

  Video caption: உயிருக்கு போராடிய குட்டி யானை: முதலுதவி செய்து காப்பாற்றியவர்

  10 நிமிட போராட்டத்துக்கு பின்னர் யானை எழுந்தது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்தவருக்கு அடிபட்டது.

 6. Video content

  Video caption: தாய்லாந்து மீன் சந்தையில் பரவும் கொரோனா
 7. கொரோனா வைரஸ்

  தாய்லாந்து நாடு, இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அங்கு வைரஸ் தொற்றுள்வர்களின் தடமறிதல் நடவடிக்கை மிகவும் சிக்கலாகி வருவதாக அதிகாரிகள் கருதுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 8. ஆண்ட்ரியாஸ் இல்மர்

  பிபிசி

  திமிங்கலம்

  இந்த எலும்புக் கூட்டின் வயதை அறிய, இன்னும் அதன் படிம ஆய்வு செய்யப்படவில்லை, டிசம்பர் மாதத்தில் சோதனைகள் செய்யப்பட்டு முடிவுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

  மேலும் படிக்க
  next
 9. தாய்லாந்து

  டெலிகிராமில் ஃப்ரீ யூத் குரூப் என்ற அரசு எதிர்ப்பாளர்கள் அங்கம் வகிக்கும் டெலிகிராம் குழுவை கட்டுப்படுத்துமாறு தாய்லாந்து காவல்துறை, டிஜிட்டல் பொருளாதார அமைச்சகத்தை கேட்டுக் கொண்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

  மேலும் படிக்க
  next
 10. ராதிகா

  தமிழக அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனனும் இந்த விவகாரத்தில் விஜய் சேதுபதி தமிழ் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் போனால் அது அவரது எதிர்காலத்துக்கு நல்லது அல்ல என்று கூறியிருந்தார். இந்த நிலையில், நடிகை ராதிகாவின் கருத்து வெளி வந்துள்ளது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 4