பங்களாதேஷ்

 1. திரிபுராவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையால் பதற்றம்

  திரிபுரா

  இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான மசூதிகள் மற்றும் சொத்துக்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

  பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, மக்கள் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

  இந்துக் குழுக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து வன்முறை ஏற்பட்டது.

  அண்டை நாடான வங்கதேசத்தில் இந்துக்கள் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள்களைக் கண்டித்து பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து இந்த குழுக்கள் போராட்டம் நடத்தின.

  இம்மாத தொடக்கத்தில் வங்கதேசத்தில் ஆண்டுதோறும் நடக்கும் துர்கா பூஜைக்காக அமைக்கப்பட்ட சிறப்புப் பந்தலில் குரான் அவமதிக்கப்பட்டதாக வதந்தி பரவியதை அடுத்து குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர். கோயில்கள் சேதப்படுத்தப்பட்டன, நூற்றுக்கணக்கான இந்துக்களின் வீடுகள் மற்றும் கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன.

  திரிபுரா மூன்று பக்கங்களிலும் வங்கதேசத்தால் சூழப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான அஸ்ஸாமுடன் ஒரு குறுகியை சாலையால் இணைக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகால கம்யூனிஸ்ட் ஆட்சிக்குப் பிறகு 2018 முதல் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி திரிபுராவில் நடைபெற்று வருகிறது.

  வடக்கு திரிபுரா மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களில் 10க்கும் மேற்பட்ட மத அடிப்படையிலான வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

  எல்லையோர நகரமான பனிசாகரில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்த வன்முறையில் ஒரு மசூதியும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல கடைகளும் சேதப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அதிகாரிகள் பெரிய கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தனர்.

  தொடர்ந்து படிக்க இங்கு கிளிக் செய்யவும்

 2. சேதம்

  இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான மசூதிகள் மற்றும் சொத்துக்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

  மேலும் படிக்க
  next
 3. டி20 உலகக் கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தியது இங்கிலாந்து

  இங்கிலாந்து

  டி20 உலகக் கோப்பை முதல் பிரிவு ஆட்டத்தில் வங்கதேச அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோற்கடித்தது.

  முதலில் ஆடிய வங்கதேச அணி 9 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக முஷ்ஃபிகுர் ரஹீம் 29 ரன்களை எடுத்தார்.

  இங்கிலாந்து அணியின் கிறிஸ் வோக்ஸ் 4 ஓவர்களை வீசி 12 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். மில்ஸ் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

  அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 14.1 ஓவரில் 126 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. ஜேசன் ராய் 38 பந்துகளில் 61 ரன்களைக் குவித்து ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

 4. அசலங்கா

  டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 ஆட்டத்தில் வீரர்கள் அசலங்கா மற்றும் பானுகா ராஜபக்ச ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் வங்கதேசத்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி.

  மேலும் படிக்க
  next
 5. இலங்கை vs வங்கதேசம் - டி20 உலகக்கோப்பை

  இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய க்ரூப் லெவல் ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்துள்ளது.

  இலங்கை அணிக்கு தசுன் ஷானகாவும் வங்கதேச அணிக்கு முகமதுல்லாவும் கேப்டனாக உள்ளனர்.

  View more on twitter
 6. சுபீர் பெளமிக்

  மூத்த பத்திரிகையாளர், பிபிசி இந்திக்காக

  बांग्लादेश

  1972 ஆம் ஆண்டின் சமயசார்பற்ற அரசியலமைப்பை மீண்டும் கொண்டுவருவதற்காக முன்மொழியப்பட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டால் அதிக வன்முறை ஏற்படும் என்று இஸ்லாமிய அடிப்படைவாதிகள், அவாமி லீக் அரசை எச்சரித்துள்ளனர். 1988 ல், ராணுவ ஆட்சியாளர் எச்எம் எர்ஷாத் இஸ்லாத்தை அதிகாரபூர்வ மதமாக அறிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 7. சுபஜோதி கோஷ்

  பிபிசி பங்களா செய்தியாளர்

  மோதி ஷேக் ஹசீனா

  வங்கதேசத்தில் பல இந்து கோவில்கள் தாக்குதலுக்கு இலக்காயின. சேதப்படுத்தல் மற்றும் வன்முறையில் 7 பேர் உயிரிழந்தனர். வங்கதேசத்தை உலகம் முழுவதுமே இப்போது கவனித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியாவின் அணுகுமுறை சற்று ஆச்சரியத்தை அளித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 8. ஷாஹனாஸ் பர்வீன்

  பிபிசி பங்களா, டாக்கா

  பூஜை

  முன்பு இந்து சமூக மக்களின் வீடுகள் மற்றும் கோவில்கள் மீது நிகழ்ந்த தாக்குதல்கள் அனைத்தும், ஒரு கிராமம் அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே ஏற்பட்டன. ஆனால் இந்த முறை துர்கா பூஜையின் போது, நாட்டின் பல்வேறு மாவட்டங்களின் பூஜை அரங்குகள் மற்றும் கோவில்கள் மீது தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நிகழ்ந்த பெரிய அளவிலான தாக்குதல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களை, கடந்த காலங்களில் நாடு பார்த்ததில்லை.

  மேலும் படிக்க
  next
 9. வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவங்களுக்கு அமெரிக்கா கண்டனம்

  வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்களை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

  இது தொடர்பாக அமெரிக்க உள்துறை செய்தித்தொடர்பாளர் நெட்ரைஸ் கூறுகையில், "இந்து சமூகத்தினருக்கு எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். ஒட்டுமொத்த விவகாரமும் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என வங்கதேச நிர்வாகத்தை வலியுறுத்துகிறோம்," என்று கூறியுள்ளார்.

  இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள தமது ட்விட்டர் இடுகையிலும், "மத சுதந்திரம் அல்லது நம்பிக்கை என்பது அடிப்படை உரிமை," என்று குறிப்பிட்டுள்ளார்.

  View more on twitter
 10. ஷகீல் அன்வர்

  பிபிசி வங்கதேச சேவை

  வங்கதேசம்

  இந்தியாவின் அரசியல் நிலைமைகள், வங்கதேசத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதை தாம் மறுக்கவில்லை என்கிறார் வங்கதேச வெளியுறவுத்துறை முன்னாள் செயலாளர் தெளஹித் ஹுசைன். இருப்பினும், தெற்காசியாவில் மதம், சாதி, பிராந்தியம் மற்றும் இனம் சார்ந்த அரசியல் புதியதல்ல என்றும் அவர் கூறுகிறார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 7