குடியேற்ற பணியாளர்கள்

 1. பிகாரிலிருந்து சீட்டூ திவாரி, உத்தர பிரதேசத்திலிருந்து ஷஹ்பாஸ் அன்வர்

  பிபிசி இந்திக்காக

  காஷ்மீர் வன்முறை குடியேறிகள் அச்சம்

  "எந்த இடத்திலும் பலவீனமான நபர் ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளியாகத் தான் இருக்க முடியும். ஒரு உள்ளூர்வாசி கொல்லப்பட்டால் அச்செய்து உள்ளூர்ச் செய்தியாக நின்று விடும். ஆனால் வேற்று மாநிலத்தவர் கொல்லப்பட்டால், அச்செய்தி தொலை தூரம் செல்லும்," என்கிறார் பிகாரின் டாடா சமூக அறிவியல் நிறுவன இயக்குநர் புஷ்பேந்திரா.

  மேலும் படிக்க
  next
 2. கன்டைனருக்குள் தவித்துக்கொண்டிருந்த 126 குடியேறிகள் மீட்பு

  சரக்குகளை கொண்டு செல்லும் கன்டைனருக்குள் தவித்துக்கொண்டிருந்த 126 குடியேறிகளை குவாட்டமாலா நாட்டு காவல்துறையினர் சாலையோரம் இருந்து மீட்டுள்ளனர்.

  நூவே கான்செப்சியான் மற்றும் கோக்கேல்ஸ் ஆகிய இரண்டு நகரங்களுக்கும் இடையே இருந்த ஓரிடத்தில் சாலையோரம் இருந்த இந்த கன்டைனருக்குள் இருந்து ஆட்கள் கத்தும் சத்தத்தை இன்று அதிகாலை கேட்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

  இவர்களை மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் அழைத்துச் செல்லப் பணம் வாங்கிய நபர்கள் அவர்களைப் பாதியிலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டதாக காவல்துறையினர் கருதுகிறார்கள்.

  இவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஹெய்ட்டி நாட்டைச் சேர்ந்தவர்கள், குவாட்டமாலாவில் இருந்து தொலைதூரத்தில் இருக்கும் ஆப்ரிக்க நாடான கானா, ஆசிய நாடான நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் மீட்கப்பட்டவர்களில் அடக்கம்.

  Guatemala police free 126 migrants from abandoned container
  Image caption: Guatemala police free 126 migrants from abandoned container
 3. நிக் மார்ஷ்

  சிங்கப்பூர்

  சிங்கப்பூரில் வாழும் புலம்பெயர் தொழிலாளர்கள் - கோப்புப் படம்

  "சமூகத்தில் உள்ள அனைவரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் சமூக இடைவெளி விதிகளைப் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் எங்களால் இதை செய்ய முடியாது என்று அவர்கள் நினைக்கிறார்கள்,"

  மேலும் படிக்க
  next
 4. குடியேறிகளை வெளியேற்றும் அமெரிக்கா

  கரீபிய நாடான ஹைட்டியில் இருந்து அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி குடியேறியவர்கள், ஹைத்திக்கு மீண்டும் கொண்டு வந்துவிடப்பட்டனர்.

  போர்ட்டா ப்ரின்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் அவர்களை அழைத்து வந்த ஜெட் விமானம் மீண்டும் கிளம்பியபோது, சிலர் மீண்டும் விமானத்தில் என்ற முயற்சித்தனர். சிலர் அந்த விமானம் மீது தங்கள் காலணிகளை வீசினர்.

  டெக்ஸாஸின் எல்லையோர நகரம் ஒன்றில் இருந்து அமெரிக்காவுக்குள் புலம்பெயர்ந்தவர்களை விமானம் மூலம் திருப்பி அனுப்பும் நடவடிக்கையை அமெரிக்கா கடந்த வாரம் தொடங்கியது.

  அமெரிக்காவினுள் நுழைய அமெரிக்க - மெக்சிகோ எல்லைப்பகுதி ஒன்றில் சுமார் 13,000 குடியேறிகள் காத்திருக்கின்றனர்.

  கொலம்பியா - பனாமா எல்லையிலும் அமெரிக்காவில் குடியேற விரும்பும் பல்லாயிரம் பேர் சிக்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  ஹைட்டி
 5. ச. ஆனந்தப்பிரியா

  பிபிசி தமிழுக்காக

  வசந்தபாலன்

  உலகில் எங்கெல்லாம் தொழிலாளர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்கள் மீது அன்பும் கருணையும் காட்ட வேண்டும். இதை வெறுமனே ஜவுளிக்கடைகளிலும், வணிக வளாகங்களிலும் நடக்கும் விஷயமாக படத்தில் காட்டியிருப்பதாக யாரும் நினைத்து விடக்கூடாது என்கிறார் இயக்குநர் வசந்தபாலன்.

  மேலும் படிக்க
  next
 6. இந்தோனீசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 6 தமிழர்கள் - மீட்கக் கோரி உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை

  கொரோனா

  இந்தோனேசீயாவில் தடுத்து வைக்கபட்டுள்ள 6 தமிழர்களை மீட்டு உடனடியாக தாயகம் அழைத்து வர வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த அக்ரமேசி கிராமத்தை சேர்ந்தவர் கவின் (32). இவருக்கு ரேவதி என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும், நான்கு மாத பெண் குழந்தையும் உள்ளது.

  கவின் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் DEE4BRICH என்ற கப்பலில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 8-ஆம் தேதி சொந்த ஊர் திரும்புவதற்காக கப்பலில் இருந்து தமிழ்நாட்டை சேர்ந்த கவின் உட்பட 6 பேர் இந்தோனேசீயாவில் இறங்கியுள்ளனர்.பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்கு வருவதற்காக இந்தோனேசீயா விமான நிலையம் சென்ற போது 6 பேரும் கடவுச்சீட்டு சரிபார்க்கும் மையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

  பின்னர் இந்தோனேசீயாவில் உள்ள பாட்டாம் என்ற இடத்தில் உள்ள சிறப்பு முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

  இந்த நிலையில், இந்தோனேசீயா அரசால் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 6 தமிழர்களையும் உடனடியாக தாயகம் அழைத்து வர தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

  இது குறித்து கவின் உறவினர் நாகராஜன் பிபிசி தமிழிடம் பேசுகையில், கடந்த 8ம் தேதி பணிகளை முடித்துக் கொண்டு இந்தோனேசியாவில் இருந்து புறப்பட இருப்பதாக கவின் தனது மனைவி ரேவதியிடம்; கூறியுள்ளார். இந்தோனேசியாவில் இருந்து புறப்பட்ட தனது கணவர் சொந்த ஊருக்கு வந்து சேரவில்லை என கவின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது தொடர்ந்து செல்போன் இணைப்பு துண்டிக்கபட்டிருந்துள்ளது.

  உடனடியாக கவின் வேலை செய்த நிறுவனத்தை ரேவதிதொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அதற்கு நிர்வாகம் தரப்பில் கொரோனா காரணமாக கவின்; தனிமைப்படுத்தப்பட்டு இந்தோனேசீயாவில் வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் கவின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்றும் தெரிவித்துள்ளனர்.

  இந்நிலையில் நேற்று மாலை கவின் செல்போனில் இருந்து வீடியோ கால் மூலமாக மனைவி ரேவதியை தொடர்பு கொண்டு 'என்னை காப்பாற்றுங்கள், முகாமில் உணவு அளிக்காமல் சித்ரவதை செய்கிறார்கள்' என பேசிக் கொண்டிருந்த போது சிறை அதிகாரி ஒருவர் கவினிடம் இருந்த செல்போனை பறித்துள்ளதாக கூறப்படுகிறது.

  இதனால் அச்சம் அடைந்த கவினின் உறவினர்கள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலாவிடம் கவினை மீட்டுத் தரும்படி மனு அளித்துள்ளனர். மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை ஆகியோருக்கு ட்விட்டர் மூலமாக தகவல் தெரிவித்துள்ளனர். இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என்கிறார் கவினின் உறவினர் நாகராஜன்.

 7. சதீஷ் பார்த்திபன்

  பிபிசி தமிழுக்காக

  மலேசியா லட்சுமி ராமகிருஷ்ணன்

  எனக்கு மாதந்தோறும் முறையாக சம்பளமும் வழங்கவில்லை. பலமுறை கேட்ட பிறகு குறைந்த தொகை ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிந்து கொண்டேன். ஏதாவது கேட்டால் அடி, உதைதான் கிடைக்கும். எனது கடவுச்சீட்டை வாங்கி வைத்துக் கொண்டனர். ஓர் அடிமையைப் போல் நடத்துவர் என்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேலாயுதம்.

  மேலும் படிக்க
  next
 8. மு. ஹரிஹரன்

  பிபிசி தமிழுக்காக

  கொரோனா

  கடந்த ஆண்டு கொரோனா தாக்கத்தின்போது முக கவசம் மற்றும் பாதுகாப்பு உடை தயாரிப்பு பெருமளவு கை கொடுத்தது. இம்முறை அதுவும் இல்லாததால் சிறிய அளவில் இயங்கி வந்த பின்னலாடை நிறுவனங்கள் முற்றிலுமாக மூடப்படும் நிலையில் உள்ளன

  மேலும் படிக்க
  next
 9. நார்வே

  "நார்வேயில் குழந்தை காணாமல் போனது தொடர்பான புகார்கள் ஏதுமில்லை. அந்த குழந்தை அணிந்திருந்த நீல நிற உடை நார்வே ஆடை தயாரிப்பு நிறுவனங்களுடையது இல்லை என்பதால் அதை வைத்தே அந்த குழந்தை நார்வே நாட்டைச் சேர்ந்ததாக இருக்காது என முடிவுக்கு வந்தோம்," என்று நார்வே காவல்துறை புலனாய்வுப்பிரிவு தலைமை அதிகாரி கமில்லா ட்ஜெல்லி வாகே பிபிசியிடம் தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 10. சின்கி சின்ஹா

  பிபிசி செய்தியாளர்

  Bhaskar via Miraj Khan

  பிரின்ஸின் கிராமத்தில் ஆயுர்வேத மருத்துவர்களே உள்ளனர். அந்த கிராமத்தினரை பொருத்தவரை, ஒருவர் கொரோனாவால் இறந்தாலும் அவர் சாதாரண மரணத்தை தழுவியவராகவே கருதப்படுகிறார். இங்குள்ள பலரிடம் மருத்துவமனைக்கு சென்றால் உயிரிழப்போம் என்ற அச்சம் குடிகொண்டிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 11