ஜோ பைடன்

 1. ஜோ பைடனுக்கு உதவி செய்த ஆப்கானியர் ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்பு

  தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பொழுது அவரது ஆப்கானிஸ்தான் பயணத்தில் உயிராபத்து ஏற்படாமல் தவிர்க்க உதவிய மொழிபெயர்ப்பாளர் ஒருவர் ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.

  2008ஆம் ஆண்டு பைடன் மற்றும் பிற அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆப்கானிஸ்தான் சென்றிருந்த பொழுது பனிப்புயல் ஒன்றின் காரணமாக ஒரு பனிப் பள்ளத்தாக்கில் அவர்களது ராணுவ ஹெலிகாப்டர் தரை இறங்க வேண்டிய கட்டாயம் உண்டானது.

  அந்தப் பள்ளத்தாக்கில் அப்பொழுது அவர்கள் தாக்குலுக்கு உள்ளாவதற்கு வாய்ப்புகள் இருந்தன. அப்போது பைடன் உள்ளிட்ட அமெரிக்கக் குழுவினரை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்று ஆப்கானிஸ்தான் அரசு ஊழியர்களின் மொழிபெயர்ப்பாளர் அமான் கலிலியும் அடக்கம்.

  ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதற்கு, தமது விசா பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டுமென்று ஆகஸ்ட் மாதம் முதல் அவர் வேண்டுகோள் விடுத்து வந்தார்.

  ஆகஸ்ட் மாத மத்தியில் தாலிபன்கள் ஆப்கானிஸ்தான் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

  தற்பொழுது ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ள பல்லாயிரம் ஆப்கானியர்களில் ஒருவராக கலிலி இருக்கிறார்.

  அமான் கலிலி மற்றும் அவரது குடும்பத்தினர் தற்போது பாகிஸ்தான் அழைத்து செல்லப்படுகிறார்கள் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அங்கிருந்து அவர்கள் அமெரிக்கா அழைத்துச் செல்லப்படுவார்கள்.

  அமான் கலிலி (வலது பக்கம் இருந்து மூன்றாம் நபர்) மற்றும் அவரது குடும்பத்தினர்
  Image caption: அமான் கலிலி (வலது பக்கம் இருந்து மூன்றாம் நபர்) மற்றும் அவரது குடும்பத்தினர்
 2. செயல்கள் மூலமே தாலிபன்கள் மதிப்பிடப்படுவார்கள்: அமெரிக்கா

  பைடன்

  ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபன்கள் தங்களது செயல்கள் மூலமாகவே மதிப்பிடப்படுவார்களே அன்றி, அவர்களது சொற்கள் மூலமாக அல்ல என்று அமெரிக்கா கூறியுள்ளது.

  ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாறிய பிறகு கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த முதல் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்தக் கருத்தை அமெரிக்கா தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

  இது தொடர்பாக வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் வெளியிட்ட அறிக்கையில், “பாதுகாப்பு, பயங்கரவாதம் தொடர்பான கவலைகள் மற்றும் அமெரிக்க குடிமக்கள் பத்திரமாக வெளியேறுவது ஆகியவற்றை மையப்படுத்தியே பேச்சுவார்த்தை இருந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

  ஆப்கான்ஸ்தான் மக்களுக்கு நேரடியாக மனிதநேய உதவிகளைச் செய்வது குறித்து இருதரப்பும் விவாதித்ததாகவும் பிரைஸ் கூறியுள்ளார்.

  தாலிபன்களுடனான பேச்சுவார்த்தை நேர்மையாகவும் அலுவல்ரீதியாகவும் இருந்ததாக பிரைஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

  தங்கள் வசமுள்ள அமெரிக்க பத்திரிகையாளரை விடுவிக்க வேண்டும் என பைடன் நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக கோரிக்கை விடுத்திருந்தது.

 3. ஜோ பைடன்

  கூட்டுத் தளபதிகளின் தலைவர் ஜெனரல் மார்க் மில்லி அதிபருக்கு உச்சபட்ச ராணுவ ஆலோசகர். இந்தப் பொறுப்பில் இருப்பவர்தான் அமெரிக்க பாதுகாப்புத் துறை மற்றும் வெள்ளை மாளிகைக்கு பாலமாக இருப்பவர்.ஆப்கானிஸ்தான் வெளியேற்றம்: ராணுவ தளபதிகளின் ஆலோசனையை பைடன் மதிக்கவில்லையா?

  மேலும் படிக்க
  next
 4. சல்மான் ரிஸ்வி

  பிபிசி இந்திக்காக

  நரேந்திர மோதி

  அமெரிக்கச் செய்தித்தாள்களில் மோதியின் அமெரிக்க வருகை பற்றி எந்தச் சிறப்பு குறிப்பும் இல்லை. சில செய்தித்தாள்களில், ஜனநாயக மதிப்புகள் குறித்து மோதிக்கு வழங்கப்பட்ட அறிவுரைகள் என்று தலைப்பிடப்பட்டு செய்திகள் வெளியாகியிருந்தன.

  மேலும் படிக்க
  next
 5. அமெரிக்க சுற்றுப் பயணத்தை நிறைவு செய்து இந்திய பிரதமர் மோதி நாடு திரும்பினார்

  View more on twitter

  இந்திய பிரதமர் நரேந்திர மோதி, தன் மூன்று நாள் அமெரிக்க சுற்றுப் பயணத்தை நிறைவு செய்துவிட்டு, நாடு திரும்பிவிட்டதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது. அவருக்கு கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் பாலம் தொழில்நுட்ப விமான தளத்தில் உற்சாக வரவேற்பளித்தனர்.

  இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இடையிலான நட்பு புதிதல்ல, அவர்கள் இருவருக்கு மத்தியில் பழைய உறவு இருக்கிறது. அதை அமெரிக்க அதிபரும் ஆமோதித்துள்ளார் என பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே பி நட்டா கூட்டத்தில் பேசியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 6. நரேந்திர மோதி

  இந்தியாவைச் சேர்ந்த துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் நரேந்திர மோடியுடன் மனித உரிமைகள் குறித்து கவலை தெரிவித்ததாக லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் எழுதியுள்ளது. இது டிரம்ப் நிர்வாகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாடு என்று செய்தித்தாள் கூறுகிறது.

  மேலும் படிக்க
  next
 7. Video content

  Video caption: வர்த்தகம் பற்றி பேசிய நரேந்திர மோதி; ஜனநாயகம் பற்றிப் பேசிய ஜோ பைடன் - என்ன நடந்தது?

  நரேந்திர மோதி - ஜோ பைடன் இருவருக்கும் இடையிலான முதல் சந்திப்பில் என்ன நடந்தது? என்ன நகைச்சுவையைப் பகிர்ந்தார்கள்? யார் எதை வலியுறுத்தினார்கள்?

 8. ஜோ பைடன்

  "உங்களிடம் சில விஷயங்கள் உள்ளன, எங்களிடம் சில விஷயங்கள் இருக்கின்றன. நாம் உண்மையில் ஒருவர் மற்றவரை முழுமை அடையச்செய்கிறோம். இந்த தசாப்தத்தில் நமது வணிகம் மிக முக்கியமானதாக இருக்கும் என நான் பார்க்கிறேன்."என்றார் மோதி.

  மேலும் படிக்க
  next
 9. விகாஸ் பாண்டே

  பிபிசி நியூஸ், டெல்லி

  மோதி

  அண்மையில் அறிவிக்கப்பட்ட ஆக்கஸ் என்று அழைக்கப்படும் சர்ச்சைக்குரிய உடன்பாடு தொடர்பான தீவிரமான விவாதம் ஏற்பட்டிருக்கும் நிலையில், குவாட் குழு மீண்டும் ஒரு சந்திப்பை வாஷிங்டனில் நடத்துகிறது.

  மேலும் படிக்க
  next
 10. வளரும் நாடுகளுக்கு கூடுதலாக 500 மில்லியன் டோஸ் ஃபைசர் தடுப்பூசி மருந்து: ஜோ பைடன்

  கொரோனா தடுப்பூசி

  வளரும் நாடுகளுக்கு அமெரிக்க நிறுவனமான ஃபைசரின் கொரோனா தடுப்பூசி மருந்து வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

  உலக மக்கள்தொகையில் குறைந்தபட்சம் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட 11 பில்லியன் டோஸ்கள் தேவைப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

  இந்த நிலையில், இந்த எண்ணிக்கையில் 40 சதவீத அளவை எட்டுவதை குறைந்தபட்ச இலக்காக உலக சுகாதார அமைப்பு கொண்டுள்ளது.

  ஆனால், அப்போதும் இந்த இலக்கு நிறைவேறுமா என்பது சாத்தியமற்று உள்ளது. உலகின் செல்வந்த நாடுகள் பலவும் அவற்றின் மக்கள்தொகையில் பாதி பேருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை போட்டு முடித்துள்ளன. குறைந்த வருவாய் கொண்ட நாடுகள் அவற்றின் மக்கள்தொகையில் வெறும் இரண்டு சதவீத அளவில்தான் முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுள்ளதாக ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக தரவு கூறுகிறது.

  வளரும் நாடுகளுக்கு ஏற்கெனவே 580 மில்லியன் டோஸ் தடுப்பூசி மருந்துகளை வழங்குவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது. அதில் 140 மில்லியன் டோஸ்கள் மட்டுமே தற்போது வழங்கப்பட்டுள்ளன என்கிறார் மக்கள்தொகை விவகாரங்களை கவனிக்கும் பிபிசி செய்தியாளர்

பக்கம் 1 இல் 34