உலகம்

 1. Video content

  Video caption: ஒரே பாடலில் இந்தியா முழுவதும் பிரபலமான இலங்கை பாடகி யோஹானி

  ஒரே பாடலில் இந்தியா முழுவதும் பிரபலமாகியிருக்கிறார் இலங்கை பாடகி யோஹானி. இவரது பாடல் 10 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இந்தியப் பிரபலங்கள் பலரும் இவரைப் புகழ்ந்துள்ளனர்.

 2. விகாஸ் பாண்டே

  பிபிசி நியூஸ், டெல்லி

  மோதி

  அண்மையில் அறிவிக்கப்பட்ட ஆக்கஸ் என்று அழைக்கப்படும் சர்ச்சைக்குரிய உடன்பாடு தொடர்பான தீவிரமான விவாதம் ஏற்பட்டிருக்கும் நிலையில், குவாட் குழு மீண்டும் ஒரு சந்திப்பை வாஷிங்டனில் நடத்துகிறது.

  மேலும் படிக்க
  next
 3. எந்த முஸ்லீமும் ஐ.எஸ். கருத்தை கொண்டிருக்கலாம் என இலங்கை அமைச்சர் கூறியதற்கு கண்டனம்

  சரத் வீரசேகர
  Image caption: சரத் வீரசேகர

  எந்தவொரு முஸ்லிமும் ஐ.எஸ் சித்தாந்தத்தைக் கொண்டிருக்கலாம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூட அவ்வாறு இருக்கலாம் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்தமை தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது இனரீதியான கூற்று எனவும். முஸ்லிம்கள் மீது பாகுபாடு காட்டுவதற்கும், தன்னிச்சையான கைதுகள்/தடுப்பு மற்றும் பிற மனித உரிமை மீறல்களுக்கும் வழிவகுக்கும் எனவும் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். ”நாடாளுமன்றில் மதவெறியை நாங்கள் காண்கிறோம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 4. அரவிந்த் சாப்ரா

  பிபிசி செய்தியாளர்

  அமரீந்தர்

  "என்னை கட்சியிலிருந்து வெளியேற்றுங்கள், நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை. நான் அவரை (நவஜோத் சித்து) (முதல்வர்) ஆக விடமாட்டேன்" என்று கூறியிருக்கிறார் பஞ்சாபின் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்.

  மேலும் படிக்க
  next
 5. நவின் சிங் கட்கா

  சுற்றுச்சூழல் செய்தியாளர், பிபிசி உலக சேவை

  பல்லி இனம்

  2019ஆம் ஆண்டு கொரோனா பரவலுக்கு பிறகு பாரம்பரியமாக வன உயிர்களை உண்டவர்கள் அதில் தயக்கம் காட்டினர் ஆனால் தற்போது சட்டரீதியாகவும் சட்ட விரோதமாகவும் அதை வாங்குபவர்கள் தங்களின் தயக்கத்தை உதறியுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 6. கிம்

  தென்கொரியாவுடன் பேச்சு நடத்தி, போரை அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டுவர சம்மதம் என வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரி கிம் யோ-ஜோங் கூறியுள்ளார்.

  Follow
  next
 7. ரஞ்சன் அருண்பிரசாத்

  பிபிசி தமிழுக்காக

  கோட்டாபய ராஜபக்ஷ

  இலங்கையின் உள்ளக பிரச்னைகள், நாட்டுக்குள்ளேயே உள்ளகப் பொறிமுறையினூடாக தீர்க்கப்பட வேண்டும் எனவும், அதற்காக புலம்பெயர் தமிழர்களுடனான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி, ஐநா பொதுச் செயலாளரிடம் கூறியிருந்தார் கோட்டாபய ராஜபக்ஷ.

  மேலும் படிக்க
  next
 8. 3 தீவிரவாதிகளைக் கொன்ற இந்திய ராணுவம்

  இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் 3 தீவிரவாதிகளை இந்திய ராணுவம் கொன்றதாக அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது ஏ.என்.ஐ. செய்தி முகமை.

  கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டில் உள்ள யூரி அருகே உள்ள ராம்பூர் செக்டாரில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தங்கள் டிவிட்டர் பதவில் கூறியுள்ளது ஏ.என்.ஐ.

  இந்த மூவரும் பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் இருந்து அண்மையில் இந்தியப் பக்கத்துக்கு ஊடுருவி வந்தவர்கள் என்றும், கொல்லப்பட்டவர்களிடம் இருந்து மூலம் ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் ஐந்து, பிஸ்டல்கள் எட்டு, கையெறி குண்டுகள் எழுபது ஆகியவை கைப்பற்றப்பட்டதாகவும் அரசுத் தரப்பு தெரிவித்ததாக கூறியுள்ளது ஏ.என்.ஐ.

 9. ஸ்டீபெய்ன் ஹெகார்டி

  மக்கள் தொகை செய்தியாளர்

  செவிலியர்

  கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய ஜி-7 நாடுகள், அடுத்த ஆண்டுக்குள் ஏழை நாடுகளுக்கு ஒரு பில்லியன் தடுப்பூசிகளை இலவசமாக வழங்குவதாக ஜூன் மாதம் அறிவித்தன.

  மேலும் படிக்க
  next
 10. குடியேறிகளை வெளியேற்றும் அமெரிக்கா

  கரீபிய நாடான ஹைட்டியில் இருந்து அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி குடியேறியவர்கள், ஹைத்திக்கு மீண்டும் கொண்டு வந்துவிடப்பட்டனர்.

  போர்ட்டா ப்ரின்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் அவர்களை அழைத்து வந்த ஜெட் விமானம் மீண்டும் கிளம்பியபோது, சிலர் மீண்டும் விமானத்தில் என்ற முயற்சித்தனர். சிலர் அந்த விமானம் மீது தங்கள் காலணிகளை வீசினர்.

  டெக்ஸாஸின் எல்லையோர நகரம் ஒன்றில் இருந்து அமெரிக்காவுக்குள் புலம்பெயர்ந்தவர்களை விமானம் மூலம் திருப்பி அனுப்பும் நடவடிக்கையை அமெரிக்கா கடந்த வாரம் தொடங்கியது.

  அமெரிக்காவினுள் நுழைய அமெரிக்க - மெக்சிகோ எல்லைப்பகுதி ஒன்றில் சுமார் 13,000 குடியேறிகள் காத்திருக்கின்றனர்.

  கொலம்பியா - பனாமா எல்லையிலும் அமெரிக்காவில் குடியேற விரும்பும் பல்லாயிரம் பேர் சிக்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  ஹைட்டி
பக்கம் 1 இல் 100