தமிழ்நாட்டில் உள்ள மருத்துவத்துறையைச் சார்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் மருத்துவ ஊழியர்கள் ஆகிய முன்களப் பணியாளர்களுக்கு முதலில் இந்த தடுப்பூசி போடப்பட உள்ளது. மருத்துவ சங்கத்தினரும் கோவேக்சின் தடுப்பூசியைப் பயன்படுத்த வேண்டாம் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.
யாரும் எதுவும் சொல்லிவிட முடியாதபடி பிரதமர் மொகிதீனுக்கு முழுமையான அதிகாரத்தைக் கொடுக்கும் நோக்கத்தில் அவசர நிலை பிரகடனம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்கிறார் முன்னாள் பிரதமர் மகாதீர்.
கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பெரிய ஏவுகணையின் அசாத்திய தோற்றம் வட கொரிய விவகாரங்களைத் தொடர்ந்து அலசிக் கொண்டிருக்கும் ஆய்வாளர்களையே ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.
கனடாவில் ஜனவரி மாதம், தமிழ் பாரம்பரிய மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த மாதத்தில் சிறந்த மற்றும் மேலதிக உள்ளடக்கமாக நாட்டை கட்டியெழுப்ப தமிழ் கனடியர்கள் வழங்கும் பங்களிப்பை நாங்கள் அங்கீகரிக்கிறோம் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.
பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் மெல்ல விலக்கப்பட்ட பின், இந்த இரு எரிபொருளின் தேவையும் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பத் தொடங்கியது. ஆனால் கடந்த டிசம்பர் 2020-ல் கூட விமான எரிபொருளின் தேவை, 2019 டிசம்பரில் இருந்ததை விட 35 சதவீதம் குறைந்திருக்கிறது.
போட்டி தொடங்கிய வேகத்தில் ஆஸ்திரேலியா இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அஜிங்க்யா ரஹானே தலைமையில் தமிழ்நாட்டு வீரர்கள் இரண்டு பேர் புதிதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் களம் புகுந்துள்ளார்கள்.
கொரோனா வைரஸ் உலகத் தொற்றின் தாக்கத்தில் இருந்து அமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்க 1.9 லட்சம் கோடி அமெரிக்க டாலர் செலவிடுவதற்கான திட்டத்தை வெளியிட்டுள்ளார் ஜோ பைடன். இவர் ஜனவரி 20-ம் தேதி அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கிறார்.