டி.டி.வி. தினகரன்

 1. ஒரு லட்சம் கோடி ரூபாயை முந்தைய ஆட்சியாளர்களிடம் இருந்து மீட்க வேண்டும் - தினகரன்

  ttv dhinakaran

  தமிழக அரசின் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையில் சொத்து வரி, வாகன வரி, மின் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியே ஆகவேண்டும் என்ற தொனியிலான அம்சங்கள் இடம்பெற்றிருப்பது பெரும் கவலை அளிக்கிறது, என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.

  அப்படி ஒரு முடிவினை தி.மு.க அரசு மேற்கொள்ள திட்டமிட்டிருந்தால், அது கடும் கண்டனத்திற்குரியது. கொரோனா பாதிப்பு உள்ளிட்ட சூழல்களால் மிகப்பெரிய பொருளாதாரப் பின்னடைவை சந்தித்திருக்கும் மக்கள், அதிலிருந்து இன்னும் மீண்டு வராத நிலையில் வரி உயர்வு, கட்டண உயர்வு என்பதெல்லாம் 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல' அமைந்துவிடும் என்று அவர் தெரிவித்துளார்.

  அதற்குப் பதிலாக முந்தைய ஆட்சியாளர்கள் முறைகேடாகவும் தவறாகவும் செலவழித்ததாக வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ரூ. ஒரு லட்சம் கோடியை அதற்கு காரணமானவர்களிடமிருந்து மீட்டெடுக்கும் வேலையை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும். அப்படி செய்யாமல் வெறுமனே அறிக்கை கொடுத்ததோடு மட்டும் நின்றுவிட்டால், பழைய 60:40 பங்கீட்டு பாசத்தில் தி.மு.க அரசு இப்படி நடந்து கொள்கிறதோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியாது.

  எனவே, யாரோ சிலர் செய்த தவறுகளுக்காக ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் தலையிலும் நிதிச்சுமையை ஏற்ற தமிழக அரசு முயற்சிக்கக்கூடாது. மக்களுக்கு பாதிப்பில்லாமல் நிதி நிலையைச் சீரமைப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 2. ஆ விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  சசிகலா

  எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கான மோதல் முடிவுக்கு வந்துவிட்டாலும், முன்னாள் முதலமைச்சர் என்ற பெயரில் ஓ.பி.எஸ் வெளியிடும் தனி அறிக்கைகள், அ.தி.மு.கவில் அடுத்தகட்ட பூகம்பத்துக்கு வழியமைத்துள்ளதாகவே அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

  மேலும் படிக்க
  next
 3. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  எடப்பாடி

  அ.தி.மு.கவுக்கு கிடைத்த வெற்றியும் அதன் வாக்கு சதவிகிதங்களும் அ.ம.மு.க வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. அ.தி.மு.க அணியில் 40 சதவிகித வாக்குகளை எடப்பாடி பழனிசாமி பெற்று விட்ட பிறகு, இனி சசிகலாவை அவர் ஏற்றுக் கொள்வதற்கு வாய்ப்பில்லை. இரட்டை இலைக்கான உரிமையை இ.பி.எஸ், ஓ.பி.எஸ் எந்த காலத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். சசிகலாவின் தேவையும் அ.தி.மு.கவுக்கு அவசியமில்லை என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 4. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  TTV Dhinakaran

  "தேர்தல் பிரசாரத்தில் தங்களின் சொந்தப் பணத்தையே அ.ம.மு.க வேட்பாளர்கள் செலவிட்டனர். கட்சித் தலைமையில் இருந்து எந்த வேட்பாளருக்கும் பணம் சென்று சேரவில்லை."

  மேலும் படிக்க
  next
 5. தலைக் கவசம் அணியாத கர்ப்பிணியை 3 கி.மீ நடக்க வைத்த பெண் காவல் அதிகாரி

  பிக்ரமை காவல் துறை வாகனத்தில் அவர்கள் அழைத்துச் சென்றனர். சாலையில் தனியே விடப்பட்ட பின்னர், மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்தே காவல் நிலையம் சென்றுள்ளார் குருபாரி.

  மேலும் படிக்க
  next
 6. kamal hassan, seeman, ttv dhinakaran

  2019-20ஆம் நிதியாண்டில் தமக்கு வந்த ஆண்டு வருமானம் ரூ.1000 மட்டுமே என சீமான் தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 7. தினகரன்

  டி.டி.வி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முதலாவது வேட்பாளர் பட்டியல் சில நாட்களுக்கு முன்பாக வெளியிடப்பட்டது. அதில் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இடம்பெற்றிருந்தனர். தற்போது 50 தொகுதிகளுக்கான வேட்பாளர்களைக் கொண்ட இரண்டாவது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 8. முரளிதரன் காசி விஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  சசிகலா

  சசிகலாவின் அறிக்கை வெளியான உடனேயே பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் எல். முருகன் அதனை வரவேற்று அறிக்கை வெளியிட்டதையும் சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள். "தினகரனை பா.ஜ.க. தனியாகப் பார்ப்பதற்குக் காரணமே, அவர் துவக்கத்திலிருந்தே தன் சொந்தங்களை அரசியலில் இருந்து ஒதுக்கிவைத்ததுதான்" என்கிறார்கள் அவர்கள்.

  மேலும் படிக்க
  next
 9. தினகரன்

  டி.டி.வி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. நேரிலும் 10 இடங்களில் இருந்து காணொளிக் காட்சிகள் வாயிலாகவும் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

  மேலும் படிக்க
  next
 10. தினகரன்

  ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து வெளியில் வந்த பிறகு, அ.தி.மு.கவின் கொடியைத் தனது காரில் பயன்படுத்தியதற்கு அ.தி.மு.க. கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. இது தொடர்பாக காவல்துறையிலும் அ.தி.மு.கவின் சார்பில், அமைச்சர்கள் சென்று புகார் அளித்தனர்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2