பிகார்

 1. லோக் ஜனசக்தி கட்சியில் இருந்து சிராக் பாஸ்வான் நீக்கம்

  chirag

  லோக் ஜன சக்தி கட்சித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

  பிகாரில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த லோக் ஜன சக்தி கட்சி, தனித்துப் போட்டியிட்டது. அங்கு பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.

  இந்த தேர்தலுக்குப் பிறகு மத்தியில் ஆளும் பாஜக தலைமையுடன் சுமூக உறவைப் பேணி வரும் சிராக் பாஸ்வானின் தலைமைக்கு எதிராக அக்கட்சியின் எம்.பி.க்கள், சிராக்கின் சித்தப்பாவும் எம்.பி.யுமான பசுபதி குமார் பராஸ் தலைமையில் குரல் கொடுத்தனர்.

  மேலும், பசுபதி குமார் பராஸை கட்சியின் புதிய தலைவராக நியமிக்க வலியுறுத்தி சபாநாயகரிடமும் அவர்கள் கடிதம் கொடுத்தனர். இந்த நிலையில் கட்சியின் தேசிய தலைவர் பதவியில் இருந்து சிராக் பாஸ்வான் நீக்கப்பட்டுள்ளார்.

 2. சுஷாந்தி சிங்

  பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்து ஓராண்டு ஆகிவிட்டது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? இந்த கேள்விக்கான பதில் இன்னும் மர்மமாகவே இருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 3. தேர்வு

  குஜராத், மத்திய பிரதேசம், உத்தரகண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகள் மாநில கல்வி வாரியத்தின் கீழான பிளஸ் 2 பொதுத் தோ்வை ரத்து செய்ய முடிவு

  மேலும் படிக்க
  next
 4. கொரோனாவால் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்துக்கு 60 வயதுவரை முழு சம்பளம்: டாடா ஸ்டீல்

  India

  கொரோனாவால் உயிரிழந்த தமது வீரர்களின் குடும்பத்துக்கு அந்த ஊழியரின் 60 வயது வரை முழு சம்பளம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது டாடா ஸ்டீல் நிறுவனம்.

  இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கொரோனாவால் உயிரிழந்த ஊழியரின் 60 வயது வரை முழு சம்பளம், அவரது வீட்டு வசதி, மருத்துவ பலன்கள், பிள்ளைகள் பட்டப்படிப்பு படிக்கும்வரை அவர்களின் கல்விச்செலவை ஏற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 5. 'கங்கையில் பிணங்கள் மிதந்ததற்கு மத்திய அரசே காரணம்' - ராகுல் காந்தி

  "வேறு வழி இல்லாமல் கங்கை நதியோரம் தங்களது குடும்ப உறுப்பினர்களின் உடல்களை விட்டுச் சென்றவர்களின் வலியை புரிந்து கொள்ளவேண்டும். இது அவர்களின் தவறல்ல."

  மேலும் படிக்க
  next
 6. சின்கி சின்ஹா

  பிபிசி செய்தியாளர்

  Bhaskar via Miraj Khan

  பிரின்ஸின் கிராமத்தில் ஆயுர்வேத மருத்துவர்களே உள்ளனர். அந்த கிராமத்தினரை பொருத்தவரை, ஒருவர் கொரோனாவால் இறந்தாலும் அவர் சாதாரண மரணத்தை தழுவியவராகவே கருதப்படுகிறார். இங்குள்ள பலரிடம் மருத்துவமனைக்கு சென்றால் உயிரிழப்போம் என்ற அச்சம் குடிகொண்டிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 7. சீது திவாரி

  பிகாரில் இருந்து பிபிசி இந்திக்காக

  நீர்

  நதிகளில் உடல்கள் மிதந்துகொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில், பல கேள்விகள் எழுந்துள்ளன. இந்த கேள்விகளுக்கான பதில்களை கண்டுபிடிக்க பிபிசி முயன்றது.

  மேலும் படிக்க
  next
 8. சீது திவாரி

  பிபிசி ஹிந்திக்காக,

  கொரோனா

  "கங்கையில் இப்போது வெள்ளப்பெருக்கு இல்லை. கீழைக் காற்று வீசுகிறது, இது மேலைக்காற்று வீசும் காலமல்ல. அப்படியிருக்க, சடலங்கள் எப்படி மிதந்து வர முடியும்? இங்கு விறகுக் கட்டைகளுக்கான வசதி இல்லை. படகுப் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே மக்கள் கங்கையில் சடலங்களை மிதக்க விடுகிறார்கள்," என்கிறார் உள்ளூர் பத்திரிகையாளர்.

  மேலும் படிக்க
  next
 9. மாவோயிஸ்டு

  மாவோயிஸ்டு தலைவர்கள் உள்ளிட்ட 150க்கும் அதிகமான கிராமவாசிகள் கொல்லப்பட்ட பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் படையினருக்கு எதிராக தாங்கள் நடத்தி வரும் தாக்குதலின் தொடர்ச்சியாக சமீபத்திய தாக்குதல் நடந்ததாக மாவோயிஸ்டுகள் தெரிவித்துள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 10. லாலு பிரசாத் யாதவை விசாரணையில் இருந்து விடுவிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

  ராஞ்சி ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த லாலு பிரசாத் யாதவை பார்க்க அவரது மகன் தேஜஸ்வி யாதவ் சனிக்கிழமை வந்தார். அவரது உடல் நிலை மோசமடைந்து வருவதாக அவர் கூறியதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை கூறுகிறது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 9