தடகளம்

 1. Video content

  Video caption: பாராலிம்பிக் போட்டிகளில் இரண்டு பதக்கங்களை பெறும் தமிழகத்தின் முதல் வீரர் மாரியப்பன்

  டோக்யோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

 2. மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி ஊக்கத்தொகை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

  டோக்யோ பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

  டோக்யோ பாராலிம்பிக் போட்டியில் 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார் மாரியப்பன். 2016இல் நடந்த ரியோ பாராலிம்பிக் போட்டியில் மாரியப்பன் தங்கம் வென்றிருந்தார். மற்றொரு வீரர் சரத் குமார் தமது முதல் முயற்சியில் 1.83 மீட்டர் உயரம் தாண்டிய நிலையில், மூன்று முறை தோல்விக்குப் பிறகு 1.86 மீட்டர் உயரத்தை தாண்டியிருந்தார்.

  View more on twitter
 3. வந்துகொண்டிருக்கும் செய்திதேவேந்திர ஜஜாரியா வெள்ளி வென்றார்

  டோக்யோவில் நடக்கும் பாராலிம்பிக் போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் தேவேந்திர ஜஜாரியா வெள்ளி வென்றார்.

  இது அவருக்கு பாராலிம்பிக் போட்டிகளில் மூன்றாவது பதக்கம் ஆகும்.

  இன்று அவர் வீசிய 64.35 மீட்டர் தூரமே அவரது அதிகபட்ச தூரமாகும்.

  இப்போது அவருக்கு 40 வயதாகிறது. ஏதென்ஸ் பாரலிம்பிக் போட்டியில் முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்றபோது அவருக்கு வயது 23. அதன் பிறகு 12 ஆண்டுகள் கழித்து 2016 ரியோ ஒலிம்பிக்கில் மீண்டும் தங்கப் பதக்கம் வென்றார்.

  View more on twitter
 4. வந்துகொண்டிருக்கும் செய்திஇன்று இந்தியாவுக்கு 3வது பாராலிம்பிக் பதக்கம்

  பாராலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான F46 ஈட்டி எறிதல் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார் இந்தியாவின் சுந்தர் சிங்.

  இன்று நடந்த இறுதிப்போட்டியில் 64.01 மீட்டர் வீசி அவர் வெண்கலப் பதக்கம் வென்றார்.

  View more on twitter
 5. வந்துகொண்டிருக்கும் செய்திஇந்தியாவுக்கு இன்று 2வது பாராலிம்பிக் பதக்கம்

  டோக்யோவில் நடக்கும் பாராலிம்பிக் போட்டியில் இந்தியா இன்று மேலும் ஒரு பதக்கம் வென்றுள்ளது. ஆண்களுக்கான F56 வட்டு எறிதலில் இந்திய வீரர் யோகேஷ் கதூனியா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

  இன்று நடந்த இறுதிப்போட்டியில் 24 வயதாகும் யோகேஷ் 44.38 மீட்டர் எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

  View more on twitter
 6. ஜஜாரியா

  பாராலிம்பிக் போட்டியில் முதல் தங்கப் பதக்கம் வென்றவர் என்ற பெருமையுடன் உலக சாதனையை தக்க வைத்துக் கொண்டிருக்கும் தேவேந்திர ஜஜாரியா டோக்யோவில் மூன்றாவது தங்கத்தைக் குறி வைத்திருக்கிறார்

  மேலும் படிக்க
  next
 7. மாரத்தான்

  டோக்யோ ஒலிம்பிக் மாரத்தானில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் 1980-க்குப் பிறகு அடுத்தடுத்த இரு ஒலிம்பிக் மாரத்தானில் தங்கம் வென்ற வீரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் கிப்சோகி.

  மேலும் படிக்க
  next
 8. Tokyo Olympics : நீரஜ் சோப்ரா

  முதல் மூன்று முயற்சிகளில் நீரஜ் சோப்ராவின் தொலைவை வேறு எந்த வீரராலும் எட்ட முடியவில்லை. போட்டியாகக் கருதப்பட்ட வெட்டல் வெளியேறிய நிலையில், ஜெர்மனியின் மற்றொரு வீரரான ஜூலியன் வெபர் மற்றும் செக் குடியரசின் விட்டேஸ்லேவ் வெஸ்லி ஆகியோர் மட்டுமே 85 மீட்டர் தொலைவுக்கு அதிகமாக வீசியிருந்தனர்.

  மேலும் படிக்க
  next
 9. நீரஜ் சோப்ராவுக்கு 6 கோடி ரூபாய் சன்மானம்

  View more on twitter

  ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியாவுக்காக முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்த ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு அவரது சொந்த மாநிலமான ஹரியானாவில் மாநில அரசு சன்மானம் அறிவித்துள்ளது.

  நீரஜ் சோப்ரா சாதனையைப் பாராட்டி 6 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அந்த மாநிலத்தின் முதல்வர் மனோகர்லால் கத்தார் அறிவித்துள்ளார்.

 10. வந்தனா

  பிபிசி இந்திய மொழிகள் டிவி ஆசிரியர்

  நீரஜ் சோப்ரா

  அஞ்சு பாபி ஜார்ஜுக்குப் பிறகு உலகின் பெரிய தடகள சாம்பியன்ஷிப் ஒன்றில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய தடகள வீரர் நீரஜ் மட்டுமே.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 4