இஸ்லாம்

 1. யூ.எல். மப்றூக்

  பிபிசி தமிழுக்காக

  முஸ்லிம்

  இலங்கையின் அரச பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதெற்கென, கல்வி அமைச்சினால் அச்சிடப்பட்ட இஸ்லாம் பாடத்துக்குரிய 06 வகையான புத்தகங்களை, மாணவர்களுக்கு விநியோகிப்பதை நிறுத்துமாறு கல்வி வெளியீட்டுத் திணைக்கம் உத்தரவிட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 2. திவ்யா ஆர்யா, வினீத் கரே

  பிபிசி இந்தி

  பிபிசி கள ஆய்வு

  "பெண்கள் வீட்டில் இருக்க வேண்டும், குழந்தைகளைப் பெற வேண்டும், முக்காடு அணிய வேண்டும், அதிகம் படிக்கக் கூடாது, காதல் திருமணங்களைச் செய்யக்கூடாது என்ற தாலிபன்களின் கருத்துகளைப் போலவே அவர்களது கருத்தும் உள்ளது."

  மேலும் படிக்க
  next
 3. லாகூர் சந்தையில் குண்டுவெடிப்பு - குழந்தை உள்பட இருவர் பலி

  பாகிஸ்தான்

  பாகிஸ்தானின் லாகூர் நகரில் இடம்பெற்ற வெடிகுண்டு சம்பவத்தில் குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளனர். 16 பேர் காயமடைந்துள்ளனர்.

  லாகூரில் உள்ள லஹோரி கேட் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

  பலியான இருவரில் ஒரு குழந்தை அடங்கும். மேலும் காயமடைந்த 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  குண்டுவெடிப்பின் தாக்கத்தால் சாலையில் அரை மீட்டர் பள்ளம் ஏற்பட்டு அருகே உள்ள கட்டடங்களின் ஜன்னல்கள் உடைந்து சிதறின.

  லாகூர் காவல்துறை செய்தித் தொடர்பாளர் ராணா ஆரிப், மோட்டார் பைக்கில் பொருத்தப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட குண்டு வெடித்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

  லாகூர் துணை ஆணையர் உமர் ஷேர் சாத்தா செய்தியாளர்களிடம் கூறுகையில், அனார்கலி பஜாரில் மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

  சம்பவத்திற்கு காரணமானவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் அவர் கூறினார்.

 4. ஷுமைலா ஜாஃப்ரி மற்றும் ரஞ்சன் அருண் பிரசாத்

  இஸ்லாமாபாத் மற்றும் கொழும்பு

  நிலுஷி

  குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கி, அவர்களை சமூகமயப்படுத்தினால், இன்னும் பல பெண்களுக்கு கணவரை இழக்க வேண்டிய நிலை வரும் என்கிறார் கணவரை பறிகொடுத்த நிலுஷி.

  மேலும் படிக்க
  next
 5. சாமியார் யதி நரசிங்கானந்துக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

  View more on twitter

  உத்தராகண்ட் மாநிலத்தில், கடந்த மாதம் நடந்த இந்து சாமியார்களின் 'தர்ம சன்சத்' (மத நாடாளுமன்றம்) கூட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதாக, அதன் முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவரான சாமியார் யதி நரசிங்கானந்த் சனிக்கிழமை இரவு உத்தராகண்ட் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

  அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக பிடிஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

 6. Video content

  Video caption: மனிதருக்கு பன்றி இதயம்: அறிவியல் சாதனையும் மத கவலைகளும் - பீட்டா போன்றவை சொல்வதென்ன?

  அமெரிக்காவில் ஒருவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த அறிவியல் சாதனையைச் சூழ்ந்துள்ள மத ரீதியிலான கவலைகள் என்ன? பீட்டா போன்ற அமைப்புகள் சொல்வதென்ன?

 7. அன்பரசன் எத்திராஜன்

  பிபிசி செய்தியாளர், கொழும்பு

  மாரம் கலீஃபா

  சிறுபான்மை இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஹிஸ்புல்லா, ஏப்ரல் 2021-இல் குற்றம் சாட்டப்படுவதற்கும் முன்பே ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்தார். இன்னமும் சிறையில் தான் இருக்கிறார்.

  மேலும் படிக்க
  next
 8. வினீத் காரே

  பிபிசி செய்தியாளர்

  யதி நரசிம்மானந்தா

  யதி நரசிங்கானந்த் சரஸ்வதி இந்துத்துவா தலைவர்களின் நீண்ட வரிசையில் அதிகம் பேசப்படும் முக்கியமான பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்களுக்கு எதிரான அவரது ஆத்திரமூட்டும் பேச்சுகள் கடந்த பல ஆண்டுகளாக மக்களிடையே பரவி வருகின்றன.

  மேலும் படிக்க
  next
 9. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழ்

  தர்ம சன்சத்

  மக்களாட்சியில் எங்கெல்லாம் தவறுகின்றதோ, அங்கெல்லாம் அதை சுட்டிக்காட்ட ஆட்கள் தேவை. இல்லாவிட்டால் தவறு செய்கிறவர்கள் எவ்வித அச்சமுமின்றி தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பார்கள் என்கிறார் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான பாலச்சந்திரன்.

  மேலும் படிக்க
  next
 10. மயங்க் பகாவத்

  பிபிசி மராத்தி

  புல்லி பாய் செயலி

  மும்பையில் பெண்களை இழிவுபடுத்தும் செயலியுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை புகார் பதிவான 24 மணி நேரத்தில் துப்பு துலக்கி காவல்துறை கைது செய்துள்ளது. ஆனால், அதே போன்ற வழக்கு ஒன்றில் புகார் பதிவாகி ஆறு மாதங்களி ஆன பிறகும் போதிய நடவடிக்கையை எடுக்கவில்லை என்ற சர்ச்சையில் டெல்லி காவல்துறை சிக்கியுள்ளது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 29