இராக்

 1. அலெக்சாண்டர்

  அநேகமாக வரலாற்றுப் புத்தகத்தில் அலெக்சாண்டரின் கடைசி கால நாட்கள் திருத்தி எழுதப்பட இந்த ஆய்வு வரலாற்றாய்வாளர்களைத் தூண்ட வேண்டும் என்கிறார் கேத்ரைன் ஹால்.

  மேலும் படிக்க
  next
 2. சென்னை

  20ம் நூற்றாண்டில் உலகளாவிய தண்ணீர் பயன்பாடு மக்கள்தொகை உயர்வைக் காட்டிலும் இரு மடங்கு அதிகரித்திருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 3. கில்கிமேஷ் காவியம்

  உலகின் பழம்பெரும் இலக்கியங்களில் ஒன்றான கில்கிமேஷ் காவியத்தின் ஒரு பகுதியான இந்த அரிய கைப்பொருள் சுமார் 3500 ஆண்டுகள் பழமையானது. தற்போதைய இராக்கை சேர்ந்தது.

  மேலும் படிக்க
  next
 4. பசவராஜ் பொம்மை - எடியூரப்பா

  தமிழ்நாடு, இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளை இந்தப் பக்கத்தில் தொடர்ந்து நேரலையாக வழங்குகிறோம்.

  Follow
  next
 5. மொபீன் அசார்

  பிபிசி 3, ரியல் லைஃப்

  அயுதமேந்திய குழுவினர்

  தங்களின் அங்கமாக சேருவோரின் வெளி தொடர்புகளை துண்டிப்பது தீவிரவாத குழுக்களின் பாணி. பழைய நண்பர்களுடன் பேசினாலோ, குடும்பத்தினருடன் பேசி உணர்ச்சிவசப்பட்டாலோ, கொண்ட எண்ணம் மாறலாம் என்பது அவர்களின் நம்பிக்கை.

  மேலும் படிக்க
  next
 6. பாக்தாத் குண்டுவெடிப்பு

  பக்ரீத் நெருங்கும் நேரத்தில்

  இராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ஒரு பரபரப்பான கடைத்தெருவில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

  இஸ்லாமியப் பண்டிகையான ஈகைத் திருநாளுக்கு மக்கள் தயாராகி வந்த நிலையில், வடக்கு சத்ர் பகுதியில் உள்ள ஒரு சந்தையில் குண்டு வெடித்துள்ளது. கடந்த 6 மாதங்களில் பாக்தாத்தில் நடந்த மிக மோசமான குண்டுவெடிப்பு இதுவாகும்.

  திங்களன்று நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் இருப்பதாகப் பாதுகாப்புப் படையினர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். சில கடைகளுக்கு தீ வைக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

  குண்டுவெடிப்பு நடந்த சந்தை பகுதியில், பாதுகாப்புப் பொறுப்பில் உள்ள மத்திய காவல்துறை படைப்பிரிவின் தளபதியைக் கைது செய்யப் பிரதமர் முஸ்தபா அல் காதிமி உத்தரவிட்டுள்ளார் எனக்கூறியுள்ள இராக் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர், இந்த சம்பவம் குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

  இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தங்கள் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் வெடிகுண்டு இருந்த அங்கியை வெடிக்கச் செய்தார் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

  2017ஆம் ஆண்டின் இறுதியில், சுன்னி முஸ்லிம் ஜிகாதி குழுவுக்கு எதிரான சண்டையில், தாங்கள் வெற்றி அடைந்ததாக இராக் அறிவித்தது.

  ஆனால், அந்த ஜிகாதி குழுவை சேர்ந்த ஸ்லீப்பர் செல்கள் இன்னும் நாட்டில் உள்ளனர். பெரும்பாலும் ஷியா முஸ்லிம்கள் வாழும், சத்ர் நகரத்தில் உள்ள ஒரு சந்தையில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கார் குண்டு வெடிப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

  இந்த தாக்குதலுக்கும் ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றது. கடந்த ஜனவரி மாதம் தயரன் சதுக்கத்தில் நடந்த இரட்டை தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலையும் தாங்கள்தான் நடத்தியதாக ஐ.எஸ் கூறியது.

  இந்த குண்டு வெடிப்பில் 32 பேர் கொல்லப்பட்டனர். மூன்று ஆண்டுகளில் தலைநகர் பாக்தாத்தில் நடந்த மிக மோசமான குண்டுவெடிப்பு அதுதான்.

  iraq bomb blast
 7. இராக் மருத்துவமனையில் தீ விபத்து: தலைமை அதிகாரியை கைது செய்ய பிரதமர் உத்தரவு

  இராக் தீ விபத்து
  Image caption: இராக்கில் தீ விபத்துக்குள்ளான மருத்துவமனை வளாகம்

  இராக்கில் உள்ள மருத்துவமனையில் 60க்கும் அதிகமானாோர் பலியான தீ விபத்து சம்பவத்தில், அந்த மருத்துவமனையின் தலைமை அதிகாரியை கைது செய்ய பிரதமர் முஸ்தஃபா அல்-கதீமி உத்தரவிட்டுள்ளார்.

  இராக்கின் நசிரியா நகரில் உள்ள அல்-ஹுசேன் எனும் மருத்துவமனையின் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் வார்டில் ஏற்பட்ட தீவிபத்தில் 64 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவிக்கிறது. சுமார் 70 பேர் காயமடைந்துள்ளனர்.

  ஆக்சிஜன் டேங்க் ஒன்று வெடித்த பின் இந்தத் தீவிபத்து உண்டானது.

  பல்லாண்டு கால சண்டைக்கு பிறகு இராக்கின் மருத்துவ கட்டமைப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தீவிபத்து நடந்த மருத்துவமனைக்கு வெளியே இறந்தவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  இராக்
 8. ஜார்ஜ் ரைட்

  பிபிசி செய்திகள்

  இராக் கொடியேந்தி வந்த ரயீத்

  கால்பந்தில் பெனால்டியை தவறவிட்டால் மின்சார கேபிள்கள் மூலம் சித்திரவதை செய்வார்கள்; கழிவுநீரில் குளிக்க கட்டாயப்படுத்துவார்கள்; மரணதண்டனைகூட விதிப்பார்கள்

  மேலும் படிக்க
  next
 9. இராக், சிரியாவில் அமெரிக்கா வான் தாக்குதல்: இரான் ஆதரவு தீவிரவாத குழுக்களுக்கு இலக்கு

  அமெரிக்கா

  இராக், சிரியாவில் இரான் ஆதரவு தீவிரவாத குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா வான் தாக்குதல் நடத்தி வருவதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.

  அமெரிக்க படையினர் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, அந்த நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்காக பயன்படுத்தப்படும் வளாகங்கள், ஆயுத கிடங்குகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்படுவதாக பென்டன் கூறியுள்ளது. அமெரிக்க படையினரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் அதிபர் ஜோ பைடன் தெளிவாக உள்ளார் என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது.

  சமீபத்திய மாதங்களில் இராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்க படையினரின் தளங்களை இலக்கு வைத்து பல்வேறு டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

  ஆனால், அதில் தமது பங்களிப்பு ஏதுமில்லை என்று இரான் தொடர்ந்து மறுத்து வருகிறது. இராக்கில் ஜிஹாதிகள் இஸ்லாமியவாத நாடு என தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் குழுவுக்கு எதிராக போரிடும் சர்வதேச கூட்டுப்படையின் அங்கமாக 2,500 அமெரிக்க துருப்புகள் முகாமிட்டுள்ளன.

  இந்த நிலையில், பென்டகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, பாதுகாப்பு காரணங்களுக்காக நடத்தப்பட்ட துல்லியமான வான் தாக்குதல்களின் மூலம் சிரியாவில் இரண்டு இலக்குகளும் இராக்கில் ஒரு இலக்கும் குறி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கதாய்ப் ஹெஸல்போலா, கதாய்ப் சய்யீத் அல் ஷுஹாதா ஆகிய இரானிய ராணுவ ஆதரவு பெற்ற தீவிரவாத குழுக்கள், இலக்கு வைக்கப்பட்ட இடங்களில் ஆயுதங்களை குவித்து வைத்திருந்ததாக பென்டகன் தெரிவித்துள்ளது.

  2009ஆம் ஆண்டு முதல், கதாய்ப் ஹெஸ்போலா குழுவை தீவிரவாத இயக்கமாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இராக்கில் அமைதிக்கு அச்சுறுத்தலையும் ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்த அந்த குழு முயல்வதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

  அமெரிக்கா
 10. கொரோனா

  இந்த நட்புறவு ஒப்பந்தத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்வதாக ஷி ஜின்பிங்கும் புதினும் தெரிவித்தனர். வெளியுறவு கொள்கை விவகாரங்களில் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்து செயல்படுவதால்தான் தங்களின் சர்வதேச ஒத்துழைப்பு நிலைத்து இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் குறிப்பிட்டார்.

  Follow
  next
பக்கம் 1 இல் 6