சுற்றுலா

 1. ஹோமுஸ் மலை

  இயற்கையே செய்த புவியியல் ஒப்பனை காரணமாக பழுப்பு படிந்த நீரோடைகள், கருஞ்சிவப்பு நிற கடற்கரைகள், உப்பு குகைகள் உருவாகியுள்ளன. இந்த வண்ண மயமான கலவையால்ஹோமுஸ் தீவு பெரும்பாலும் "ரெயின்போ தீவு" என்று அழைக்கப்படுகிறது. உலகின் ஒரே உண்ணத் தகுந்த மலை என்று கருதப்படும் இடமும் இது தான்.

  மேலும் படிக்க
  next
 2. பாதுகாப்பு சுற்றுலா

  சிங்கப்பூருக்கு செல்வதாக இருந்தால், பயணிகள் நாட்டிற்குள் வருவதற்கு முன்பு TraceTogether டோக்கனை நிறுவ வேண்டும் அல்லது அது நிறுவப்பட்ட ஒரு கைபேசியை வாடகைக்கு எடுக்க வேண்டும். மற்ற நாடுகளில் என்னென்ன வசதிகள் உள்ளன?

  மேலும் படிக்க
  next
 3. Video content

  Video caption: இந்திய ரயில்வே எச்சில் துப்புவதால் வரும் கறைகளை நீக்கி, தூய்மையாக்க புதிய திட்டம்

  கொரோனா பெருந்தொற்று காலத்தில் காலத்தில் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் பொது இடங்களில் எச்சில் துப்புவது இன்னும் ஒரு பெரிய பிரச்னையாக இருக்கிறது.

 4. எக்ஸ்போ 2020 துபாயில் தொடங்கியது

  190க்கும் மேற்பட்ட உலக நாடுகள் தங்கள் கண்டுபிடிப்புகள், கலாசார நடவடிக்கைகள் போன்றவற்றைக் காட்டும் வகையில் திட்டமிடப்பட்ட துபாய் எக்ஸ்போ 2020 தற்போது தொடங்கியுள்ளது.

  கடந்த ஆண்டில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றால் இந்நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டது. கட்டடக் கலை, கலை, கலாச்சாரம், வணிகம், தொழில்முனைவு, கண்காட்சி, உணவு, தொழில்நுட்பம், கலை நிகழ்ச்சிகள், ஆட்டோமொபைல் என பல துறை சார்ந்த விஷயங்கள் இந்த எக்ஸ்போவில் உள்ளதாக துபாய் எக்ஸ்போ 2020 வலைத்தளம் குறிப்பிடுகிறது.

  இந்த நிகழ்வு நேற்று (செப்டம்பர் 30, வியாழக்கிழமை) இரவு தொடங்கியது. மார்ச் 2022 வரை இந்த கண்காட்சி நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக துபாய் அரசு சுமார் 7 பில்லியன் அமெரிக்க டாலர் செலவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

  இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையும் நன்றாக இருப்பதாக ஒருங்கிணைப்பாளர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். அடுத்த ஆறு மாத காலத்துக்குள் 2.5 கோடி பார்வையாளர்களை இந்த கண்காட்சி ஈர்க்கும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நம்புகிறார்கள்.

  ஆனால் பகுப்பாய்வாளர்களோ, உலகம் முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் இருப்பதால், இந்த இலக்கை அடைய போராட வேண்டி இருக்கும் என கூறுகின்றனர்.

 5. அமிர்தசரஸ் சாகிப், பஞ்சாப்

  நாட்டிலுள்ள சுமார் 10கோடி மக்கள் இந்த குறைந்தபட்ச 15 இடங்களுக்கான பயணத்தை மேற்கொண்டாலும், அது 150கோடி பயணங்களாகும்!

  மேலும் படிக்க
  next
 6. Video content

  Video caption: ஆப்கானிஸ்தான் சந்தைகளில் பொருட்களை வாங்க குவியும் மக்கள் - என்ன காரணம்?

  வெளிநாட்டுப் படைகள் முற்றிலுமாக வெளியேறிவிட்ட பிறகு ஆப்கானிஸ்தானில் எஞ்சியிருக்கும் மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது?

 7. டெல்லியில் பாரத தரிசனப் பூங்கா

  டெல்லியில் உருவாக்கப்பட்ட பாரத தரிசனப் பூங்கா அக்டோபர் மாதம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த பூங்காவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 21 வரலாற்றுச் சின்னங்களின் மாதிரிகள் இடம் பெற்றிருக்கும். இந்தப் பூங்காவுக்கு ரூ.100 நுழைவுக் கட்டணம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று அலுவலர்கள் தெரிவிப்பதாக பிடிஐ செய்தி முகமை கூறியுள்ளது.

  View more on twitter
 8. செளதி செல்ல புதிய பயண விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

  செளதி அரேபியா
  Image caption: செளதி அரசு அறிவித்துள்ள புதிய பயண விதிகள் செட்பம்பர் 23ஆம் தேதி அமலுக்கு வருகிறது.

  செளதி அரேபியா நாட்டுக்குச் செல்ல வேண்டுமானால், சில பயண விதிகளையும் நிபந்தனைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அந்நாட்டின் விமான போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

  இது தொடர்பாக செளதி ஊடக முகமை (எஸ்பிஏ) வெளியிட்டுள்ள செய்தியின்படி செளதி அரேபியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கான புதிய பயண விதிகள் செப்டம்பர் 23ஆம் தேதி அமலுக்கு வருகிறது.

  இதன்படி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் அல்லது உலக சுகாதார அமைப்பு அல்லது செளதி அரேபிய அரசால் அங்கீகரிக்கப்படாத தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பயணத்துக்கு 72 மணி நேரத்துக்குள்ளாக மேற்கொண்ட கொரோனா பரிசோதனை முடிவில் நெகட்டிவ் என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

  செளதிக்கு வந்தவர்கள் கட்டாயமாக ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். ஐந்தாவது நாளில் அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்படும்.

  முடிவு நெகட்டிவ் என வந்தால் மட்டுமே அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர். அதுவரை அவர்கள் சுய தனிமையிலேயே இருக்க வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  View more on twitter
 9. வந்துகொண்டிருக்கும் செய்திஹிமாச்சல பிரதேச மலைப்பகுதியில் நிலச்சரிவு - இருவர் சாவு, மீட்ப்புபணிகள் தீவிரம்

  View more on twitter

  ஹிமாச்சல பிரதேசத்தின் கின்னார் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் அந்த வழியாக சென்ற பேருந்தும் டிரக்கும் சிக்கியிருப்பதாக தெரிய வந்துள்ளது. அவற்றில் இருந்தவர்கள் நிலை என்ன எனத் தெரியவில்லை. தற்போதுவரை இருவர் இறந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

  கிட்டத்தட்ட 40 பேர் வரை இந்த சரிவில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அங்குள்ள ரீகோங் பியோ - சிம்லா நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

  சம்பவ பகுதியில் மீட்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக ஹிமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகுர் தெரிவித்துள்ளார்.

  நிலச்சரிவு ஏற்பட்ட மலைப்பகுதி என்பதால், அங்கு மீட்பு நடவடிக்கையில் பயிற்சி பெற்ற இந்திய திபெத்திய எல்லை காவல் படையின் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சம்பவ பகுதிக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையினரும் விரைந்துள்ளனர்.

  இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் மாநில முதல்வர் ஜெய் ராம் தாகுரை தொலைபேசியில் தொடர்பு கொணன்டு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசி நிலைமையை கேட்டறிந்தார்.

  இந்த நிலச்சரிவுக்கு என்ன காரணம் என்பதும் தெரியவில்லை. ஹிமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவுகள் வழக்கமாக நடப்பவை என்றாலும், மலைப்பகுதி நெடுஞ்சாலையில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இது இரண்டாவது முறை.

  கடந்த மாதம் நிலச்சரிவு ஏற்பட்டபோது, மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகனம் மீது பாறைகள் விழுந்தன. அதில் 9 பேர் பலியானார்கள்.

  View more on twitter
 10. ஹிமாச்சல பிரதேசத்தில் திடீர் நிலச்சரிவால் சிதறிய மலைப்பாறைகள் - 9 பேர் பலி

  ஹிமாச்சல பிரதேசம்
  Image caption: ஹிமாச்சல பிரதேசம் கினாரில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாறைகள் உடைந்து விழுந்த இணைப்புப்பாலம்.

  ஹிமாச்சல பிரதேசத்தின் கினார் மாவட்டத்தில் பட்சேரி-சங்க்லா சாலை பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில், மலையில் இருந்த பாறைகள் வெடித்துச்சிதறின.

  இதில் அந்த வழியாக சுற்றுலா பயணிகளுடன் வந்த டெம்போ மீது பாறைகள் விழுந்ததில் அதில் இருந்த 9 பயணிகள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் மூன்று பேர் காயம் அடைந்தனர்.

  இந்த நிலச்சரிவை சிலர் காணொளியாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததையடுத்து இந்த காட்சி வைரலாகி வருகிறது.

  அதில், மலைப்பகுதியின் மேலிருந்து திடீரென மிகப்பாறைகள் வெடிப்பது போலவும் அதைத்தொடர்ந்து அவை மிக மேகமாக சாலை நோக்கி விழுந்து ஓடுவது போலவும் காட்சிகள் இருந்தன. அந்த மலை பாதையை இணைக்கும் பாலம் மீது பாறைகள் விழுந்ததில் அது ஒரு நொடியில் அப்படியே தரைமட்டமான காட்சியும் பதிவாகியிருந்தது.

  இந்த சம்பவத்தையடுத்து காயம் அடைந்தவர்களை உடனடியாக காவல்துறையினரும் தீயணைப்பு வீரர்களும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஹிமாச்சல பிரதேச அரசு பிரதமரின் நிவாரண நிதிதியில் இருந்து ரூ. 2 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்குவதாக அறிவித்துள்ளது.

  View more on youtube
பக்கம் 1 இல் 8