மொழி

 1. நரேந்திர மோதி இந்தி தின வாழ்த்து

  இன்று இந்தி தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோதி உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பல அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்தை பகிர்ந்துள்ளனர்.

  பிரதமர் நரேந்திர மோதி தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்தி தின வாழ்த்துச் செய்தியில், "இந்தியை செழிப்பாக்குவதற்காக பல தரப்பு மக்களும் பங்காற்றினர். அது இந்தியை தொடர்ந்து வலிமையாக நிலைநாட்டுவதுடன், சர்வதேச அரங்கில் வலிமையான அடையாளத்தையும் தருகிறது, உங்கள் அனைவருக்கும் இந்த தின வாழ்த்துகள்," என்று நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

  இந்திய உள் துறை அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான அமித் ஷா தமது இந்தி தின வாழ்த்தில், “இந்தி தினமான இன்று, நாட்டு மக்கள் அனைவரும் அடிப்படை வேலைகளில் தங்கள் தாய் மொழியுடன் அலுவல் மொழிகளில் ஒன்றான இந்தியையும் படிப்படியாகப் பயன்படுத்துவதற்கான உறுதிமொழியை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவின் முன்னேற்றம் தாய்மொழி மற்றும் அலுவல் மொழியின் ஒருங்கிணைப்பில் அடங்கியுள்ளது,” என்று கூறியுள்ளார்.

  View more on twitter
 2. பிரமிளா கிருஷ்ணன்

  பிபிசி தமிழ்

  சென்னைக்கு வயசு எத்தனை?

  சென்னை நகரத்தின் பழமையை கொண்டாடும் நேரத்தில், அதன் உண்மையான வரலாற்றை அறிய மேலும் முயற்சிகள் செய்யப்பட வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 3. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  மினித உருவம்

  சிந்து சமவெளி நாகரீகம் சுமார் பத்து லட்சம் சதுர கிலோ மீட்டரில் பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், இந்தியாவின் வடமேற்குப் பகுதி ஆகியவற்றில் பரவியிருந்த ஒரு நாகரீகம். தாமிரகால நாகரீகத்திலேயே மிகப் பெரிய, பரந்த அளவில் இருந்த நாகரீகம் இது.

  மேலும் படிக்க
  next
 4. கோயில்களில் இனி தமிழில் அர்ச்சனை - அமைச்சர் சேகர் பாபு

  ஆ. விஜயானந்த், சென்னையில் இருந்து

  இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் என்ள கோயில்களில் அடுத்த வாரம் முதல் தமிழில் அர்ச்சனை செய்யப்பட உள்ளது. இதற்காக அன்னை தமிழில் அர்ச்சனை என்ற பெயர் பலகை வைக்கப்பட உள்ளதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

  தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது, `கோவில்களில் தமிழில் அர்ச்சனை நடத்தப்படும்' என்ற வாக்குறுதியை தி.மு.க அளித்திருந்தது. இதையொட்டி அதற்கான நடவடிக்கைகளை அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர். கடந்த 12 ஆம் தேதி கோயில்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள்குறித்து உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை நடத்தினார்.

  இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், ` தமிழில் அர்ச்சனை செய்வதற்கான பயிற்சியை அனைத்து அர்ச்சகர்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது. கோவில்களில் ஏற்கெனவே தமிழில் அர்ச்சனை நடைபெற்று வருகிறது. தற்போது முக்கியமான 47 கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்றபெயர்ப் பலகையை வைக்க உள்ளோம். அதில் அர்ச்சகர்களின் பெயர்கள், கைப்பேசி எண்கள் இடம்பெறும்' எனத் தெரிவித்திருந்தார்.

  மேலும், ` அர்ச்சகர் பயிற்சியை பெண்கள் எடுக்க விரும்பினால் அவர்களுக்கும் பயிற்சி அளித்து அர்ச்சகராக்குவதற்கான முயற்சியை முதலமைச்சர் அனுமதியுடன் செயல்படுத்துவோம்' என்றார்.

  இந்நிலையில், அடுத்த வாரம் முதல் கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை பாரிமுனையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய அவர், ` தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் தமிழில் அர்ச்சனை நடைபெற உள்ளது.முதல்கட்டமாக சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் புதன் அல்லது வியாழக்கிழமை தமிழில் அர்ச்சனை நடைபெறும். இதற்காக `அன்னைத் தமிழில் அர்ச்சனை' என்ற பெயர்ப் பலகை வைக்கப்பட உள்ளது. முதலில் பெரிய கோயில்களில் இது நடைமுறைப்படுத்தப்பட்டு பின்னர் சிறிய கோவில்களுக்கும் விரிவுபடுத்தப்படும்' என்றார்.

  p k sekar babu
 5. ச ஆனந்தப்பிரியா

  பிபிசி தமிழுக்காக

  விஜய்

  தமிழில் பெயர் வைத்து வரிவிலக்கு இருந்திருந்தால், கிடைக்கும் லாபத்தை விட, ஆங்கிலத்தில் பெயர் வைக்கும் போது இன்னும் அதிக அளவு பார்வையாளர்களை சென்று சேரவும், அந்த கதைக்கான களமும் விரிவடைவதால் இப்போது அதை பெரிதாக யாரும் கண்டு கொள்வதில்லை

  மேலும் படிக்க
  next
 6. नर्स

  மருத்துவமனையின் நர்சிங் கண்காணிப்பாளர் வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில் இந்த உத்தரவு இடம் பெற்றுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, சுற்றிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 7. ஆ விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  கல்லூரி மாணவர்கள் & பெற்றோர்கள்

  தமிழ் வழியில் பட்டப்படிப்புகளை நிறைவு செய்த மாணவர்கள், முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்புகளை நிறைவு செய்து விட்டு ஆராய்ச்சியாளர்களாக பணிபுரிகின்றனர். கல்லூரி காலங்களில் செமினார் வகுப்புகளில் இவர்களால் சரளமாக ஆங்கிலத்தில் பேச முடியவில்லை. அதுவே, அவர்கள் பணியில் சேர்ந்த பிறகு பேச்சு வழக்கில் சரளமாக ஆங்கிலம் பேசுவதைப் பார்த்திருக்கிறேன்.

  மேலும் படிக்க
  next
 8. Video content

  Video caption: இலங்கையில் புறக்கணிக்கப்படும் தமிழ் மொழி

  இலங்கையில் புறக்கணிக்கப்படும் தமிழ் மொழி

 9. "குலக்கல்வித் திட்டத்தை திணிக்க மத்திய அரசு முயற்சி"

  "குலக்கல்வித் திட்டத்தை திணிக்க மத்திய அரசு முயற்சி"

  புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான மத்திய அரசின் ஆலோசனை கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்துள்ளது.

  இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "புதிய கல்வி கொள்கை குறித்த மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகள் மட்டும் பங்கேற்க வேண்டும் என்ற அறிவிப்பு கூட்டாட்சி தத்துவத்திற்கு வேட்டு வைப்பது போல் இருப்பதாக தமிழக முதல்வர் கூறியுள்ளார். கூட்ட அறிவிப்பு குறித்து நாங்கள் மின்னஞ்சல் அனுப்பி இருந்தோம். ஆனாலும் எவ்வித பதிலும் வரவில்லை. எனவே கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் நாங்கள் கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என புரிந்து கொள்ளக் கூடாது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

  "கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட மெயிலுக்கு எவ்வித பதிலும் வரவில்லை. பதில் வரும் என எதிர்பார்க்கிறோம். வராத பட்சத்தில்டெல்லிக்கு சென்று எங்களுடைய கருத்துகளை முன்வைக்க உள்ளோம். புதிய கல்வி கொள்கை பாதகமானது. குலக்கல்வித் திட்டத்தை நினைவுபடுத்துகிறது."

  தமிழக அரசு சொல்லும் திருத்தங்களை ஏற்றுக் கொண்டால் புதிய கல்விக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் புதிய கொள்கையில் மும்மொழி கல்வித் திட்டத்தை ஏற்பதாக இல்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

 10. சித்தார்த்

  "எப்படியாவது தேர்தலில் வென்றுவிட வேண்டும் என்பதற்காக எல்லா விலையையும் கொடுத்து மக்களை கொலை செய்கிறீர்கள். அதன் பிறகு, மத கூட்டங்களில் மேலும் பலரைத் திரளச் செய்து மேலும் மக்களைக் கொல்கிறீர்கள். வரலாறு இதை ஒருபோதும் மறக்காது. மன்னிக்காது, வெட்கம்" என குறிப்பிட்டிருக்கிறார் சித்தார்த்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 8