வறட்சி

 1. ஹரியாணாவில் மாவட்ட அலுவலகங்களை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் சங்க தலைவர்கள் தடுத்து வைப்பு

  View more on twitter

  ஹரியாணாவில் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தடியடி நடத்திய நடவடிக்கையை கண்டித்து மாவட்ட தலைநகரங்களை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்களை காவல்துறையினர் தடுத்து வைத்தனர்.

  ஸ்வராஜ் இந்தியா தலைவர் யோகேந்திர யாதவ், பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகெய்த் உள்ளிட்டோரை காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளனர்.

  முன்னதாக விவசாயிகள் திட்டமிட்டிருந்த போராட்டத்துக்கு அனுமதி வழங்க காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது.

  இதையடுத்து விவசாயிகளின் பேரணிக்கு அனுமதி வழங்குவது குறித்து அவர்களின் பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவத்தில் சுஷில் கஜ்லா என்ற விவசாயி காயம் அடைந்து உயிரி்ழந்ததாக விவசாயிகள் தரப்பு குற்றம்சாட்டினர்.

  ஆனால், அந்த விவசாயி மாரடைப்பால் இறந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர். சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற பெயரில் 40 விவசாய சங்கங்கள் செயல்படுகின்றன.

  அவை மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாகவே விவசாயிகள் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

  அதைக் கண்டித்து ஹரியாமா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே விவசாயிகள் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட வழிகளில் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 2. Video content

  Video caption: குருவிகளின் குடில்களாகும் தென்னை மரங்கள் - பரிவு காட்டும் விவசாயிகள்
 3. தோமர்

  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு எப்போதும் தயாராக உள்ளது. ஆனால், வரும்போது விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் கைவிட்டு விட்டு வர வேண்டும் என்கிறார் இந்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்.

  Follow
  next
 4. விவசாயிகள் போராட்டம்

  விவசாயிகளின் போராட்ட விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் இருக்கிறது. விவசாயிகளுடன் அமைதி வழியில் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண முயற்சிக்குமாறு கடந்த ஜனவரியில் மத்திய அரசிடம் நீதிமன்றம் அறிவுறுத்த, அவர்கள் விடாமுயற்சியுடன் தொடரும் போராட்டமே காரணம். அப்போது முதல் டெல்லி எல்லையில் உள்ள விவசாயிகளை காவல்துறையினர் கட்டாயப்படுத்தி வெளியேற்றுவதில்லை. இப்போது அவர்களின் போராட்டம் ஆறு மாதங்களை நிறைவு செய்திருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 5. வேளாண் சட்டங்கள்: விவசாயிகளுக்கு செவி சாய்க்க மறுக்கும் மத்திய அரசு - ப. சிதம்பரம் குற்றச்சாட்டு

  சிதம்பரம் மோதி அரசு

  இந்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் போராட்டம் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவடையும் நாளில் அவர்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்று குற்றம்சாட்டியிருக்கிறார் இந்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "விவசாயச் சட்டங்களை எதிர்த்து நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் இன்று 6 மாதங்கள் நிறைவு விவசாயிகள் தங்கள் போராட்டத்தை விலக்கிப் கொள்ள வேண்டும் என்று சொல்லும் மத்திய அரசு, தான் நிறைவேற்றிய பொல்லாத சட்டங்களை விலக்கிக் கொள்கிறோம் என்று ஏன் சொல்ல மறுக்கிறது?," என்று குறிப்பிட்டுள்ளார். "அரசு வினை விதைத்தது. வினை தானே விளையும்? மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாக அரசு விலக்கிக் கொள்வதுதான் இந்தப் பிரச்னையின் தீர்வுக்கு முதல் படி," என்றும் அவர் கூறியுள்ளார்.

 6. வெங்கட் ரெட்டி

  விவசாயிக்கும் மண்ணுக்கும் இடையிலான பிரிக்க முடியாத பந்தத்தை நாம் விளக்க தேவையே இல்லை. ஆனால் அதே மண்ணை ஒரு உரமாகவும், பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுத்தலாம் என்பதை ஹைதராபாத்தைச் சேர்ந்த சிந்தலா வெங்கட் ரெட்டி நிரூபித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 7. போராட்டம்

  சோனிபத்தை சேர்ந்த ஷிவ் குமார் குண்ட்லியில் இருக்கும் ஒரு தொழிற்சாலையில், தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படாததைக் காரணம் காட்டி சட்ட விரோதமாக பணம் பறிக்க நுழைய முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்டார். இந்த மருத்துவ அறிக்கையில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தப்பட்ட விவரங்கள் உள்ளன.

  மேலும் படிக்க
  next
 8. Video content

  Video caption: விவசாயிகள் போராட்டம்: சர்ச்சை டூல் கிட் வழக்கில் தீஷா கைது
 9. கூ

  மத்திய அரசு குறிப்பிட்ட நூற்றுக்கணக்கான பக்கங்களில் ஒரு சில பக்கம் மீது மட்டும் கட்டுப்பாடுகளை விதித்த நிறுவனம் அடுத்த சில மணி நேரத்தில் அதை நீக்கியது. இதைத்தொடர்ந்தே ட்விட்டர் நிறுவனம் மீதான தனது அதிருப்தியை இந்திய அரசு "கூ" என்ற புதிய இந்திய செயலி வாயிலாக வெளிப்படுத்தியிருப்பதாக கருதப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 10. Video content

  Video caption: இந்திய மாணவர்களின் 100 செயற்கைக்கோள் சாதனை முயற்சி
பக்கம் 1 இல் 5