ஆப்கானிஸ்தான்

 1. ஆப்கன் போலியோ

  தற்போது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் மட்டுமே போலியோ தொற்று உள்ளது. கடந்த ஆண்டு ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் போலியோ வைரஸ் ஒழிக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 2. ஆப்கானிஸ்தானில் போலியோ தடுப்பு மருந்து முகாம்

  ஆப்கானிஸ்தானில் நாடு முழுவதும் போலியோ தடுப்பு மருந்து முகாம்களை நடத்த உள்ளதாக ஐக்கிய நாடுகள் மன்றம் தெரிவித்துள்ளது.

  வரும் நவம்பர் மாத தொடக்கத்தில் நடக்க உள்ள இந்த போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த தாலிபன்களின் முழு ஆதரவு இருப்பதாக ஐநாவின் குழந்தைகள் அமைப்பான யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

  பெண் ஊழியர்கள் இந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் பங்ககெடுக்கவும், இந்த முகாம் நடத்துவதற்கு போதிய பாதுகாப்பு வழங்கவும் தாலிபன்கள் ஒப்புக்கொண்டுள்ளனர் என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

  கடந்த காலங்களில் தடுப்பு மருந்துகள் செலுத்துவதை கடுமையாக எதிர்த்து வந்துள்ளனர் இஸ்லாமியர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் திறனை இழக்க செய்வதற்காக மேற்கத்திய நாடுகளின் செய்யும் சதியே தடுப்பு மருந்துகள் என்று தாலிபன்கள் தெரிவித்திருந்தனர்.

  ஆப்கானிஸ்தானில் போலியோ தடுப்பு மருந்து முகாம்
 3. ஆப்கனில் அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதல்

  அக்குடும்பத்தில் உயிர் பிழைத்திருப்பவர்களை, அமெரிக்காவில் குடியேற்ற தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாக பென்டகன் கூறியுள்ளது.

  மேலும் படிக்க
  next
 4. ஆப்கன் ஷியா மசூதி தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ எஸ் அமைப்பு

  மசூதி தாக்குதல்

  ஆப்கன் ஷியா மசூதி தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருப்பதாக, செய்தியறிக்கை வெளியிட்டுள்ளது ஐ எஸ் அமைப்பு.

  ஆப்கானிஸ்தான் காந்தஹார் நகரில் நேற்று வெள்ளிக்கிழமை ஷியா இஸ்லாமிய பிரிவினர் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது பீபி ஃபாத்திமா மசூதியில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர்.

  இத்தாக்குதலுக்குப் பின் தாங்கள் இருப்பதாக இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ எஸ் அமைப்பு கூறியுள்ளது.ஆப்கானிஸ்தானில் இதற்கு முந்திய வெள்ளிக்கிழமை குண்டூஸ் மாகாணத்தில் ஒரு ஷியா மசூதியில் தற்கொலை குண்டு தாக்குதல் நடந்ததில் ஐம்பது பேர் கொல்லப்பட்டனர்.

 5. ஆப்கன் மசூதி தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் - பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு

  ஆப்கானிஸ்தான்

  ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஷியா பிரிவினர் தொழுகையில் ஈடுபடும் பீபி ஃபாத்திமா மசூதியில் ஏற்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 30க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

  அங்கிருந்து வரும் படங்களில் சிதைந்த ஜன்னல் பாகங்கள் மற்றும் உடல்கள் தரையில் கிடப்பதை பார்க்க முடிகிறது. உள்ளூர் செய்தியாளரை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த தாக்குதலில் மூன்று தற்கொலை குண்டுதாரிகள் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று தெரிய வந்துள்ளது.

  மூவரில் ஒருவர் தமது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை மசூதிக்கு வெளியிலும் மற்ற இருவர் அதே நேரத்தில் உள்ளேயும் வெடிக்கச் செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

  இது குறித்து விரிவாக படிக்க கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்.

  ஆப்கன் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல் - 30 பேர் பலி, 32 பேர் காயம்

 6. ஆப்கானிஸ்தான் மசூதி

  ஷியா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தற்கொலை வெடிகுண்டு தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கடந்த வாரம் குண்டூஸில் இதேபோல ஷியா மசூதி தொழுகையில் ஈடுபட்டவர்களை இலக்கு வைத்து தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 7. Getty images

  தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், இந்தியா முழுவதும் அவரின் ஆரோக்கியத்திற்காகவும், விரைவில் குணமடையவும் பிரார்த்திப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Follow
  next
 8. ஜோ பைடனுக்கு உதவி செய்த ஆப்கானியர் ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்பு

  தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பொழுது அவரது ஆப்கானிஸ்தான் பயணத்தில் உயிராபத்து ஏற்படாமல் தவிர்க்க உதவிய மொழிபெயர்ப்பாளர் ஒருவர் ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.

  2008ஆம் ஆண்டு பைடன் மற்றும் பிற அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆப்கானிஸ்தான் சென்றிருந்த பொழுது பனிப்புயல் ஒன்றின் காரணமாக ஒரு பனிப் பள்ளத்தாக்கில் அவர்களது ராணுவ ஹெலிகாப்டர் தரை இறங்க வேண்டிய கட்டாயம் உண்டானது.

  அந்தப் பள்ளத்தாக்கில் அப்பொழுது அவர்கள் தாக்குலுக்கு உள்ளாவதற்கு வாய்ப்புகள் இருந்தன. அப்போது பைடன் உள்ளிட்ட அமெரிக்கக் குழுவினரை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்று ஆப்கானிஸ்தான் அரசு ஊழியர்களின் மொழிபெயர்ப்பாளர் அமான் கலிலியும் அடக்கம்.

  ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதற்கு, தமது விசா பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டுமென்று ஆகஸ்ட் மாதம் முதல் அவர் வேண்டுகோள் விடுத்து வந்தார்.

  ஆகஸ்ட் மாத மத்தியில் தாலிபன்கள் ஆப்கானிஸ்தான் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

  தற்பொழுது ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ள பல்லாயிரம் ஆப்கானியர்களில் ஒருவராக கலிலி இருக்கிறார்.

  அமான் கலிலி மற்றும் அவரது குடும்பத்தினர் தற்போது பாகிஸ்தான் அழைத்து செல்லப்படுகிறார்கள் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அங்கிருந்து அவர்கள் அமெரிக்கா அழைத்துச் செல்லப்படுவார்கள்.

  அமான் கலிலி (வலது பக்கம் இருந்து மூன்றாம் நபர்) மற்றும் அவரது குடும்பத்தினர்
  Image caption: அமான் கலிலி (வலது பக்கம் இருந்து மூன்றாம் நபர்) மற்றும் அவரது குடும்பத்தினர்
 9. செயல்கள் மூலமே தாலிபன்கள் மதிப்பிடப்படுவார்கள்: அமெரிக்கா

  பைடன்

  ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபன்கள் தங்களது செயல்கள் மூலமாகவே மதிப்பிடப்படுவார்களே அன்றி, அவர்களது சொற்கள் மூலமாக அல்ல என்று அமெரிக்கா கூறியுள்ளது.

  ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாறிய பிறகு கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த முதல் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்தக் கருத்தை அமெரிக்கா தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

  இது தொடர்பாக வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் வெளியிட்ட அறிக்கையில், “பாதுகாப்பு, பயங்கரவாதம் தொடர்பான கவலைகள் மற்றும் அமெரிக்க குடிமக்கள் பத்திரமாக வெளியேறுவது ஆகியவற்றை மையப்படுத்தியே பேச்சுவார்த்தை இருந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

  ஆப்கான்ஸ்தான் மக்களுக்கு நேரடியாக மனிதநேய உதவிகளைச் செய்வது குறித்து இருதரப்பும் விவாதித்ததாகவும் பிரைஸ் கூறியுள்ளார்.

  தாலிபன்களுடனான பேச்சுவார்த்தை நேர்மையாகவும் அலுவல்ரீதியாகவும் இருந்ததாக பிரைஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

  தங்கள் வசமுள்ள அமெரிக்க பத்திரிகையாளரை விடுவிக்க வேண்டும் என பைடன் நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக கோரிக்கை விடுத்திருந்தது.

 10. இந்திய ராணுவம்

  நம்பகமான உளவுத் தகவல் அடிப்படையில் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள இடத்தில் தீவிரவாதிகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இடத்தில் தேடுதல் வேட்டையில ராணுவத்தினர் ஈடுபட்டபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

  Follow
  next
பக்கம் 1 இல் 47