மின் வணிகம்

 1. பராக் அகர்வால்

  ட்விட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனரான ஜேக் டோர்சி, தலைமை பொறுப்பில் இருந்து வெளியேற தயாராக இருப்பதாக கூறிய நிலையில், அவரது பதவி விலகல் அறிவிப்பு தற்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 2. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  கிரிப்டோ கரன்சி

  வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிகளைத் தடைசெய்யவும் ரிசர்வ் வங்கியின் அதிகாரபூர்வ டிஜிட்டல் கரன்சியை உருவாக்கவும் புதிய சட்ட முன்வடிவை அறிமுகம் செய்ய இந்திய அரசு முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் விளைவுகள் என்னவாக இருக்கும்.

  மேலும் படிக்க
  next
 3. zomato

  "எங்களது வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் தேசத்தின் மாறுபட்ட கலாசாரத்தின் மீதான எதிர்க்கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரைப் பணி நீக்கம் செய்துள்ளோம்," என்று ஜொமேட்டோ கூறியுள்ளது.

  மேலும் படிக்க
  next
 4. வாடிக்கையாளரிடம் மன்னிப்பு கேட்ட ஜொமேட்டோ: ட்விட்டரில் வைரலாகும் உரையாடல்கள்

  ஜொமேட்டோ

  ஆன்லைன் உணவு டெலிவரி சேவை வழங்கும் நிறுவனமான ஜொமேட்டோ வாடிக்கையாளர் பிரிவு பிரதிநிதி, வாடிக்கையாளர் ஒருவரிடம் "இந்தி நமது தேசியமொழி, சிறிதளவாவது அதைக் கற்றுக்கொள்ள வேண்டும்" எனக் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த நிறுவனத்தை புறக்கணிக்க வேண்டும் என சமூக ஊடகங்களில் பலரும் இடுகைகளை பகிர்ந்து வருகின்றனர்.

  நேற்று மாலை ஆறு மணியளவில் விகாஸ் என்பவர், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவில், தான் ஜொமேட்டோ செயலி மூலமாக உணவு ஆர்டர் செய்தபோது, தான் ஆர்டர் செய்ததில், ஒரு உணவுப் பொருள் வராதது குறித்து ஜொமேட்டோவின் வாடிக்கையாளர் பிரிவைத் தொடர்பு கொண்டு பேசியதாக கூறியுள்ளார்.

  அந்த பிரதிநிதி, "இந்தி தெரியாததால் பணத்தைக் கொடுக்க முடியாது," என கூறியதாகவும், அந்த வாடிக்கையாளர் பிரதிநிதிக்கு தமிழ் தெரியாததால், தன்னைப் பொய்யர் என கூறியதாகவும் விகாஸ் தெரிவித்திருந்தார்.இந்த விவகாரத்தை முழுமையாக படிக்க இங்கே சொடுக்கவும்.

 5. விக்டோரியா கில்

  அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ்

  மின்னணு பொருடகள்

  2021ம் ஆண்டில் சேர்ந்த பழைய மொபைல் போன், டிவி போன்ற எலக்ட்ரானிக் கழிவுகள் 57 மில்லியன் டன் அளவுக்கு குவிந்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 6. எம்.ஏ. பரணிதரன்

  பிபிசி தமிழ்

  கோப்புப் படம்

  வேகமாக வளர்ந்து வரும் இன்டர்நெட் உலகில், அரசாங்கமே ரொக்கப் பரிவர்த்தனையை தவிருங்கள் - ஆன்லைன் பரிவர்த்தனையை செய்யுங்கள் என ஊக்குவிக்கிறது. ஆனால், இதைப் பயன்படுத்தியே மோசடிகளும் தடையின்றி தொடருவதுதான் வேதனை தரும் விஷயம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 7. எலி

  உலகின் முன்னணி பங்குச் சந்தை முதலீடுகளின் லாபத்தை விடவும், ஏன் முதலீட்டு வித்தகரான வாரன் பஃப்பெட்டின் பெர்க்ஸயர் ஹேத்தாவே நிறுவனத்தின் லாபத்தை விடவும் எலியின் லாப விகிதம் அதிகம்.

  மேலும் படிக்க
  next
 8. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  பங்குச் சந்தை

  மத்திய தர வர்க்கத்தினரைப் பொறுத்தவரை பங்குச் சந்தைகளில் நேரடியாக முதலீடு செய்வதைவிட, மியூச்சுவல் ஃபண்ட் எனப்படும் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்வதையே பாதுகாப்பானதாக கருதுகின்றன. ஒருவர், சரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைத் தேர்வுசெய்வது எப்படி?

  மேலும் படிக்க
  next
 9. 623 பொருட்களின் இறக்குமதி உத்தரவாத தொகையை 100% உயர்த்திய இலங்கை மத்திய வங்கி

  ரஞ்சன் அருண் பிரசாத்

  இலங்கையில் அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற தெரிவு செய்யப்பட்ட 623 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 100 வீத உத்தரவாதத் தொகையை வைப்பிலிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இந்த நடைமுறையை உடன் அமலுக்கு வரும் வகையில் செயற்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கி இன்று (09) அறிவித்துள்ளது.இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை நேற்றைய தினம் (08) கூடி, கலந்துரையாடல்களை நடத்திய போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.ஊக வியாபாரத் தன்மையிலான மிதமிஞ்சிய இறக்குமதிகளை ஊக்கமிழக்கச் செய்வதன் ஊடாக, செலாவணி வீத உறுதிப்பாட்டினையும், வெளிநாட்டு நாணயச் சந்தை திரவத் தன்மையினையும் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு உறுதியாக இருக்கும் என இதனை தாம் நம்புவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

  இலங்கை
 10. வாய்யீ யிப்

  பிபிசி செய்திகள்

  சீன தொழிலாளர்கள்

  சீனாவின் ஒரு சில மிகப்பெரிய நிறுவனங்களில் பணியாற்றும் இளம் ஊழியர்கள் மிருகத்தனமான 996 பணி கலாசார நேரப்படி காலை 9 முதல் இரவு 9 வரை என வாரத்தில் 6 நாட்களுக்கு வேலை செய்கிறார்கள்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 6