ரஷ்யா

 1. சர்வதேச விண்வெளி நிலையத்தில் கரும்புகை - அபாய எழுப்பிய லி எழுப்பிய விண்வெளி வீரர்கள்

  நாசா

  சர்வதேச விண்வெளி நிலையத்தில் பிளாஸ்டிக் கருகும் வாசனை வருவதாக அதன் ரஷ்ய பகுதியில் இருந்த வீரர்கள் கூறியதையடுத்து, அபாய சங்கு ஒலிக்கப்பட்டது. இது தொடர்பாக ரஷ்ய கலனில் இருந்து அமெரிக்காவின் நாசா கலனில் இருப்பவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

  சில மணி நேரத்தில் இந்த பிரச்னை சரி செய்யப்பட்டு விட்டதாக ரஷ்ய விண்வெளி அமைப்பான ராஸ்கோமாஸ் தெரிவித்துள்ளது.

  கருகும் வாசனை வந்தபோது விண்வெளி நிலையத்தின் பேட்டரிகள் சார்ஜ் செய்யப்பட்டுக் கொண்டிருந்ததாகவும் அப்போது புகை எழுந்ததாகவும் ரஷ்ய விண்வெளி நிலையமான ராஸ்கோமாஸ் தெரிவித்துள்ளது.

  அந்த பிரச்னை சரி செய்யப்பட்டு தற்போது இயல்புநிலை திரும்பி விட்டதாகவும் ராஸ்கோமாஸ் கூறியுள்ளது.

  ஏழு வீரர்கள் மட்டுமே உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏன் அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது? முழு விவரம் அறிய இந்த செய்தியை படிக்கவும்.

  சர்வதேச விண்வெளி நிலையத்தில் கரும்புகை - அபாய ஒலி எழுப்பிய வீரர்கள் - என்ன நடந்தது?

 2. ரஷ்ய அமைச்சர் யெவ்கேனீ பலி - தண்ணீரில் விழுந்தவரை காப்பாற்றும் முயற்சியில் பரிதாபம்

  ரஷ்ய அமைச்சர்
  Image caption: யெவ்கேனீ ஸீனிட்செஃப்

  ரஷ்யாவின் அவசரகாலத்துறை அமைச்சர் யெவ்கேனீ ஸீனிட்செஃப், நோரீல்ஸ் என்ற இடத்தில் உள்ள செங்குத்தான பாறையில் கால் தவறி கீழே விழுந்த நபரை காக்கும் முயற்சியின்போது உயிரிழந்தார். அவருக்கு வயது 55.

  ரஷ்யாவின் ஆர்டிக் பகுதி, ஏழு பிராந்தியங்கள் முழுமையாக நீளுகிறது. அந்த பிராந்தியத்தின் வளர்ச்சிப் பணிகளை கவனிப்பது யெவ்கேனீயின் பொறுப்பு. இந்த நிலையில அந்த பிராந்தியத்தில் ஆபத்து காலங்களில் மக்கள் எதிர்கொள்வது எப்படி என்ற ஒத்திகையில் ரஷ்ய வீரர்களுடன் சேர்ந்து சுமார் ஆறாயிரம் பேர் ஈடுபட்டனர்.

  இத்தனை பேருடன் அசாதாரணமான ஓர் பயிற்சி இதற்கு முன்பு அங்கு நடந்ததில்லை.

  ரஷ்ய தொலைக்காட்சியான ஆர்டியின் தலைமை அதிகாரி மார்கரிடா சைமோன்யானின் தகவலின்படி, செங்குத்தான பாறை மீது பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார் யெவ்கேனீ ஸீனிட்செஃப். அவருடன் இயக்குநர் அலெக்சாண்டர் மெல்னிக் இருந்தார்.

  அப்போது கால் வழுங்கியதில் மார்கரிட்டா சைமோன்யான் பின்னால் இருந்த தண்ணீரில் விழுந்தார். அவரை காப்பாற்ற முற்பட்ட முயற்சியில் யெவ்கேனியும் உயிரிழந்தார். அவருக்கு முன்பாகவே சைமோன்யானும் இறந்தார்.

  ரஷ்யாவில் அதிபர் விளாதிமீர் புதின் அமைச்சரவையில் நீண்டகாலமாக பணியாற்றி வந்தவர் யெவ்கேனீ. ரஷ்ய அவசரகாலத்துறை அமைச்சராக அவர் 2018 முதல் இருந்தார் அவர்.

  ரஷ்ய அதிபரின் விரிவான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை கவனிக்கும் அதிகாரிகளில் யெவ்கேனியும் ஒருவர். தமது பணிக்காலத்தின் பெரும்பகுதியை அவர் தேச பாதுகாப்பு பணியிலேயே கழித்திருந்தார்.

  சோவியத் கேஜிபி என்ற ரஷ்ய உளவுத்துறையில் பணியைத் தொடங்கிய அவர், படிப்படியாக அந்த துறையின் இரண்டாம் நிலைவரை உயர்ந்தார்.

  அதிபர் புதினுடன் யெவ்கேனீ நீண்ட காலம் பணியாற்றியவர் அவரது மரணம், மிகப்பெரிய இழப்பு என்று ரஷ்ய அதிபரின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோஃப் கூறியுள்ளார்.

  திரைப்பட இயக்குநர் மெல்னிக் ஒரு எழுத்தாளரும் கூட. ஆர்டிக் ஆவணப்படம் ஒன்றை எடுத்ததன் மூலம் 2015இல் அவர் பிரபலம் அடைந்தார்.

  ஆர்டிக் பிராந்தியத்திலும் ரஷ்யாவின் வடக்கு கடல் பகுதியிலும் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக ஆவணப்படம் எடுக்கும் நோக்குடன் அவர் இங்கு வந்திருந்தார்.

  கிராஸ்நோயார்ஸ் பிராந்தியத்தில் சம்பவம் நடந்த வேளையில் ஊடகக் குழுவினர் மக்கள் பயிற்சி செய்யும் காணொளியை பதிவு செய்திருந்தனர்.

 3. The ISS pictured from a Soyuz spacecraft last year

  சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள பல கருவிகள் அதன் காலக்கெடுவை கடந்துவிட்டன என்று ஒரு அதிகாரி கூறியுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 4. ஏவுகனைகள் - மாதிரிப் படம்

  கியூபாவின் மீதமுள்ள ஆயுதங்களை அமெரிக்கா அழித்திருக்கலாம். அமெரிக்காவின் சில நகரங்களும் பதில் தாக்குதல்களை எதிர்கொண்டிருக்கலாம் என்கிற அபாயமும் இருந்தது.

  மேலும் படிக்க
  next
 5. பால் கெர்லே & லூசியா பிளாஸ்கோ

  பிபிசி நியூஸ்

  பஞ்ஷிர் பள்ளத்தாக்கு

  சோவியத் ஒன்றியத்தின் செம்படை வலிமையால் இங்கிருந்தவர்களை வீழ்த்த முடியவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன்பு தாலிபன்களும் இந்தப் பள்ளத்தாக்கை கைப்பற்ற முயன்றனர்; ஆனால் தோற்றுப் போனார்கள்

  மேலும் படிக்க
  next
 6. FM Nirmala Sitharaman after launching National Monetisation Pipeline in Delhi

  அரசு மற்றும் பயன்படுத்தும் நிறுவனத்தால் முன்னரே ஒப்புக்கொள்ளப்பட்ட காலக்கெடு முடிந்தபின், அந்தச் சொத்துகள் மீண்டும் அரசிடம் ஒப்படைத்தாக வேண்டும்.

  மேலும் படிக்க
  next
 7. ஜோனாத்தன் மார்கஸ்

  ராஜீய விவகாரங்கள் நிபுணர், பிபிசியின் முன்னாள் பாதுகாப்பு மற்றும் ராஜீய விவகாரங்கள் செய்தியாளர்

  பைடன்

  ஆப்கானிஸ்தானில் இருந்து சட்டெனப் புறப்பட்டிருப்பது அமெரிக்காவின் நம்பகத் தன்மை மீது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு கூட்டாளியாகவும், உலக விவகாரங்களில் தலையிடும் தார்மிக உரிமை கொண்டதாகவும் இருக்கும் அமெரிக்காவின் நம்பகத் தன்மைக்கு இது களங்கம்தான்.

  மேலும் படிக்க
  next
 8. விகாஸ் பாண்டே

  பிபிசி நியூஸ், டெல்லி

  மோதி தாலிபன் ஆப்கானிஸ்தான்

  இந்தியாவுக்கு எளிதான வழிகள் ஏதும் இல்லை. ஆனால் இந்தியாவின் முடிவுகள் பிராந்திய அமைதி மற்றும் உலகளாவிய புவிசார் அரசியல் ஆகியவற்றில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

  மேலும் படிக்க
  next
 9. எம். மணிகண்டன்

  பிபிசி தமிழ்

  தாலிபன்

  சீனாவின் அரசு ஊடகங்கள் ஆப்கானிஸ்தானைப் பற்றிக் குறிப்பிடும்போது "வல்லரசுகளின் கல்லறை" என்று கூறுகின்றன. அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகிய நாடுகளைப் பின்பற்றி படுகுழியில் விழுந்துவிடக்கூடாது என்று சீனாவின் குளோபல் டைம்ஸ் வெளியிட்ட தலையங்கம் கூறுகிறது.

  மேலும் படிக்க
  next
 10. தாலிபன்

  "20 ஆண்டுகாலப் போராட்டத்துக்குப் பிறகு நாங்கள் நாட்டை விடுவித்துள்ளோம். வெளிநாட்டினரை வெளியே விரட்டியுள்ளோம். நாடு முழுமைக்கும் பெருமிதமான தருணம் இது என்று குறிப்பிட்டார் தாலிபன் செய்தித் தொடர்பாளர்".

  Follow
  next
பக்கம் 1 இல் 19