சூறாவளி

 1. Post update

  ஐடா சூறாவளி

  அமெரிக்காவின் நியூயார்க், நியூ ஜெர்சியில் பலத்த சேதத்தை ஏற்படுத்திச் சென்ற ஐடா சூறாவளியின் தாக்கத்தில் ஏராளமான இந்திய வம்சாவளியினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சில இடங்களில் சூறாவளி ஏற்பட்டபோது வெளியே சென்றிருந்தவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது குறித்து செய்தியை விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.

 2. சலீம் ரிஸ்வி

  பி பி சி ஹிந்திக்காக, நியூயார்க்கிலிருந்து

  அமெரிக்க சூறாவளி ஐடா

  நியூயார்க்கின் குயின்ஸ் பகுதியிலும் வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. குயின்ஸில், பல கட்டடங்களின் அடித்தளங்களில் வெள்ள நீர் புகுந்தது. நியூயார்க்கின் குயின்ஸ் பெருநகரத் தலைவர் டொனோவன் ரிச்சர்ட்ஸ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவி வழங்குமாறு மாகாண மற்றும் மத்திய அரசுகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 3. ப்ரூக்ளின் சாலையில் புகுந்த வெள்ளம்

  நியூயார்க் நகர மேயர் பில் டி பிளாசியோ, "ஒருவேளை பொதுமக்கள் வெளியே சென்றிருந்தால், சுரங்க பாதைகள், சாலைகளில் செல்வதை தவிருங்கள். வெள்ளம் ஓடும் சாலைகளில் பயணம் செய்யாதீர்கள்," என்று கேட்டுக் கொண்டுள்ளார். கடைசியாக வந்த தகவலின்படி, நியூயார்க், கனெக்டிகட், நியூ ஜெர்சி ஆகியவற்றின் குடியிருப்புகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 4. Video content

  Video caption: நியூயார்க், நியூ ஜெர்சி மாகாணங்களை புரட்டியெடுக்கும் சூறாவளி தாக்கம்
 5. பரணிதரன்

  பிபிசி தமிழ்

  களஞ்சிய சமூக வானொலி

  பருவநிலை மாற்றம், புயல் அபாயம், கன மழை என இயற்கையாக மனிதர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய தீர்வை தரக்கூடியவர்களாக நாகப்பட்டினத்தில் உள்ள சுமார் 20 கிராம தன்னார்வலர்கள் காணப்படுகிறார்கள். அந்த அளவுக்கு அவர்களை தயார்படுத்துவதில் சத்தமில்லாமல் ஒரு விழிப்புணர்வை இந்த வானொலி சேவை ஏற்படுத்தி வருகிறது.

  மேலும் படிக்க
  next
 6. யாஸ் புயல்: மூன்று மாநில முதல்வர்களுடன் அமித் ஷா ஆலோசனை

  ஒடிஷா
  Image caption: பாரதீப் துறைமுகம், ஒடிஷா
  Odisha

  வங்க கடலில் இன்று உருவாகும் யாஸ் புயல் முன்னேற்பாடுகள் தொடர்பாக மேற்கு வங்கம், ஆந்திர பிரதேசம், ஒடிஷா ஆகிய மூன்று மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் முதல்வர்களுடன் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.

  இன்று காலை 11 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது.

  வங்க கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமாகி புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே கூறியுள்ளது.

  இந்த புயல் வரும் 26ஆம் தேதி மணிக்கு மேற்கு வங்கம், ஒடிஷா இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

  புயல் கரையை கடக்கும்போது 155 கி.மீ முதல் 165 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதால் மீனவர்கள் நான்கு நாட்களுக்கு மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

  ஒடிஷாவின் பாரதீப் துறைமுகத்தில் புயல் பாதிப்பு மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக பேரிடர் அதிவிரைவு மீட்புப்படையைச் சேர்ந்த 60 அணிகள் தயார்நிலையில் உள்ளன.

  Odisha
 7. மோதி

  குஜராத்தில் கரையை கடந்த தெள தே புயல் ஏற்படுத்திய பாதிப்புகளை வான் வழியாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆய்வு செய்து வருகிறார். டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோதி, குஜராத்தின் பாவ்நகரில் தரையிறங்கிய பிறகு, உனா, டியு, ஜாஃப்ராபாத், மஹுவா ஆகிய பகுதிகளில் வான் வழியாக ஆய்வு மேற்கொண்டார். இதற்கிடையே, புயல் சீற்றத்தின்போது கடலில் அடித்துச் செல்லப்பட்ட கப்பலில் இருந்த 89 பேரின் கதி என்ன ஆனது என்றே தெரியவில்லை. அவர்களை தேடும் பணியில் இந்திய கடற்படை ஈடுபட்டு வருகிறது.

  மேலும் படிக்க
  next
 8. குஜராத்தில் 160 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்தது டோக்டே புயல்

  டோக்டே புயல்

  இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் டோக்டே புயல் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்தது. இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதிகளில் டோக்டே புயல் பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயலால் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.இந்திய வானிலை மையம் திங்கள் மாலை, “அதிக தீவிரமான டோக்டே புயல்” கரையை கடக்க தொடங்கியது என தெரிவித்திருந்தது.குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இதுகுறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.1998ஆம் ஆண்டு பிறகு ஏற்பட்ட புயல்களில் டோக்டே வலுவான புயலாக கருதப்படுகிறது.குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்திருந்தாலும், இரண்டாம் அலை ஏற்படுத்திய தாக்கம் இன்னும் குறையவில்லை. இந்த நிலையில்தான் டோக்டே புயலின் பாதிப்புகளும் வந்து சேர்ந்துள்ளன. இருமாநிலங்களில் பல்வேறு மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வீடுகள் சேதமடைந்தன. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

 9. அன்பில் மகேஷ் பொய்யாமொழி

  "கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட மெயிலுக்கு எவ்வித பதிலும் வரவில்லை. பதில் வரும் என எதிர்பார்க்கிறோம். வராத பட்சத்தில்டெல்லிக்கு சென்று எங்களுடைய கருத்துகளை முன்வைக்க உள்ளோம். புதிய கல்வி கொள்கை பாதகமானது. குலக்கல்வித் திட்டத்தை நினைவுபடுத்துகிறது."

  Catch up
  next
 10. புரெவி

  மழையின் தாக்கம் கடலோர மாவட்டமான கடலூரில் மிக அதிகமாக காணப்படுகிறது. அங்கு மழை நீர் சூழ்ந்த பகுதிகளில் மிதவை படகுகள் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 6