ஆன்டிபயாடிக்ஸ்

  1. Composite image of Ask America panel

    நாங்கள் காண்பதிலேயே மிகவும் மோசமான பாதிப்பு கர்ப்பிணிகளுக்கு ஏற்படுவதுதான். அது மிகவும் வலியை ஏற்படுத்துகிறது. அவர்களுக்கு தடுப்பூசி பரிந்துரைக்கப்படவில்லை என்றாலும், ஒரு மருத்துவராக அவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என நான் பரிந்துரைப்பேன் என்கிறார் ஒரு அமெரிக்க மருத்துவர்.

    மேலும் படிக்க
    next
  2. ஆ. விஜயானந்த்

    பிபிசி தமிழுக்காக

    கொரோனா தடுப்பூசி

    தமிழ்நாட்டில் கொரோனா நோய் எதிர்ப்புத் திறன் 66 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதேநேரம், மேற்கு மாவட்டங்களில் நோய் எதிர்ப்புத் திறன் குறைந்து விட்டதாக வெளியான தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது?

    மேலும் படிக்க
    next
  3. ஆ. விஜயானந்த்

    பிபிசி தமிழுக்காக

    திமுகவுக்கு மாற்று பாஜகவா? - அண்ணாமலை கருத்தால் கொதிக்கும் அதிமுக

    "திமுகவின் விமர்சனங்கள் அனைத்தும் பா.ஜ.கவை எதிர்த்தே முன்வைக்கப்படுகின்றன. பேச்சு அரசியலில் அவர்களுக்கு நாங்கள்தான் எதிரி. எங்களுக்கு அவர்கள்தான் எதிரி. எங்கள் இரண்டு பேருக்கும் இடையில்தான் யுத்தம் நடக்கிறது. இது இரு முனைப் போட்டியாக சென்று கொண்டிருக்கிறது," என்கிறார் அண்ணாமலை.

    மேலும் படிக்க
    next
  4. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

    பிபிசி தமிழ்

    ஆக்சிஜன்

    கடந்த மே மாதம் 4ஆம் தேதி இரவு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 13 பேர் இறந்ததாக சர்ச்சை தீவிரமான நிலையில், அங்கு நடந்தது என்ன என்பதை தமிழக அரசு விளக்கியுள்ளது. உண்மையில் அங்கு என்ன நடந்தது?

    மேலும் படிக்க
    next
  5. பிரேசில் அதிபர்

    கொரோனா வைரஸ் தடுப்பூசி கொள்முதல், பொது முடக்கத்தை அமல்படுத்துவது, கவச ஆடை வாங்குவது போன்ற விவகாரத்தில் போதிய நடவடிக்கையை எடுக்கவில்லை என்ற விமர்சனத்துக்கும் போல்சனாரூ ஆளானார். அந்த நாட்டில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தைக் கடந்துள்ளது.

    மேலும் படிக்க
    next
  6. ஆ. விஜயானந்த்

    பிபிசி தமிழுக்காக

    விலங்குகள் கொரோனா

    செல்லப் பிராணிகள், விலங்குகளுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பான குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. ''இந்தியாவில் மனிதர்களுக்கான கொரோனா தடுப்பூசியில் மட்டும் ஆர்வம் காட்டப்படுவதால் விலங்குகளின் நிலையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது'' என்கின்றனர் சூழல் ஆர்வலர்கள். என்ன நடக்கிறது?

    மேலும் படிக்க
    next
  7. ஜெயகுமார் சுதந்திரபாண்டியன்

    பிபிசி தமிழ்

    flu vaccine for corona

    ஃப்ளூ காய்ச்சல் தடுப்பூசியின் எதிர்ப்பாற்றல் சற்று குறைவாக இருப்பதாகவும், அதன் விலையும் சற்று அதிகமாக இருப்பதாலும் அதை இந்திய தேசிய நோய்த்தடுப்பு தடுப்பூசி அட்டவணையில் இன்னமும் சேர்க்கவில்லை என ஒரு சில மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.

    மேலும் படிக்க
    next
  8. இரு வேறு டோஸ் தடுப்பூசி போடுவது ஆபத்தானது: WHO தலைமை விஞ்ஞானி

    Corona
    Image caption: செளமியா சுவாமிநாதன், தலைமை விஞ்ஞானி - உலக சுகாதார அமைப்பு

    கொரோனா தடுப்பூசி போடும்போது இரு வேறு தயாரிப்பு மருந்துகளை போடுவது ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

    கொரோனா வைரஸை தடுக்கும் நோக்குடன் உலக அளவில் பல்வேறு நாடுகளில் உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் மற்றும் உள்நாட்டில் மருத்துவ அமைப்பால் ஒப்புதல் தரப்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில், சில இடங்களில் இரு வகை தடுப்பூசி மருந்துகளை போட்டுக் கொண்டால் கொரோனா எதிர்ப்புத்திறன் பெருகுவதாக தகவல் வெளியானது.

    சமீபத்தில் தாய்லாந்து அரசு கூட தமது குடிமக்களுக்கு இரு வேறு தயாரிப்பு கொரோனா தடுப்பூசி போட ஏதுவாக அதன் தடுப்பூசி கொள்கையில் மாற்றம் செய்துள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள செளமியா சுவாமிநாதன், "இப்படி போடப்படும் தடுப்பூசிகளால் ஏற்படும் தாக்கம் பற்றி மிகவும் சொற்ப அளவிலேயே தரவு கிடைத்துள்ளது," என்றார். இது மிகவும் ஆபத்தான போக்கு.

    இரு வேறு வகை கொரோனா தடுப்பூசியை போடுவது நிச்சயம் கவலை தரக்கூடிய விஷமே. இதை தொடர்படுத்த நம்மிடம் வலுவான அறிவியல்பூர்வ தரவு கிடையாது என்று தெரிவித்தார்.

    கொரோனா தடுப்பூசியில் எந்த வகையை எப்படி போடுவது, எதை போடுவது என்பதையும் தீர்மானிப்பது சாதாரண மக்களாக இருந்தால் அது நிச்சயம் குழப்பமான சூழ்நிலைக்கே வழிவகுக்கும் என்று செளமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.

  9. பரணிதரன்

    பிபிசி தமிழ்

    ஆட்டிசம்

    தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, ரூபெல்லா, சின்னம்மை போன்றவை தடுப்பூசி மூலம் தவிர்க்கப்படக்கூடிய நோய்கள். எந்த அளவுக்கு ஒரு பெரும் சமூகமாக இந்த வைரஸ் தடுப்பூசி போடப்படுகிறதோ அந்த அளவுக்கு அங்கு வாழும் சிறார்கள் இந்த வைரஸில் இருந்து தப்பிப்பார்கள் என்பது வல்லுநர்களின் கருத்து.

    மேலும் படிக்க
    next
  10. கொரோனா தடுப்பூசி போட்டால் வாழ்நாள் முழுவதும் நோய்த் தொற்று வராதா? - நிபுணர்கள் கூறுவது என்ன?

    கொரோனா
    Image caption: கோப்புப்படம்

    கொரோனாவுக்கான தடுப்பூசிபோட்டவருக்கு எழும் முக்கியமான கேள்வி, இனி எனக்கு வாழ்நாளில் கொரோனா தொற்றே வராதா என்பதுதான்.

    அமெரிக்காவில் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் முகக் கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதனால் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு வராதா, அவர்கள் மூலமாக நோய் பரவாதா என்ற கேள்விகள் எழுந்தன.

    இப்போதும் பலர் கொரோனாவுக்கான தடுப்பூசி போட்ட பிறகு தமக்கு கொரோனா வருவதற்கான வாய்ப்பே இல்லை என்று கூறுவதைக் கேட்க முடிகிறது. ஆனால் உண்மை அதுவல்ல.

    இதற்கு முன்பு உலகில் வந்த பல்வேறு நோய்களுக்கு கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் பல ஆண்டுகள் வரை பாதுகாப்பு அளித்தன.

    இது குறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்

பக்கம் 1 இல் 17