பாலிவுட்

 1. நிக் ஜோனாஸ்

  2018ஆம் ஆண்டு, தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான ஹாலிவுட் பாடகர் நிக் ஜோனாசை காதல் திருமணம் செய்து கொண்டார் பிரியங்கா சோப்ரா. திருமணம் முடிந்த மூன்று மாதங்களிலேயே, இருவருக்கும் கருத்து வேறுபாடு என்றும் விவாகரத்துக்கு தயாராகி வருகிறார்கள் என்றும் வதந்திகள் பரவின. அதற்கு தனது செய்தித் தொடர்பாளர் மூலம் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று விளக்கமளித்தார் பிரியங்கா. இப்போது மீண்டும் இந்த தம்பதி பிரிவது தொடர்பாக சந்தேகம் எழுப்பப்பட்டிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 2. ஆர்யன் கான்

  23 வயதான ஆர்யன் கானுக்கு, மூன்று நாட்கள் வழக்கு விசாரணைக்குப் பிறகு கடந்த வியாழக்கிழமை மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

  மேலும் படிக்க
  next
 3. 'ஆர்யன் கான் வழக்கின் சாட்சி பிறழ் சாட்சி ஆகிவிட்டார்' - என்.சி.பி

  இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கைது செய்யப்பட்ட வழக்கில் சாட்சியாக இருந்த பிரபாகர் சைல் என்பவர் பிறழ் சாட்சியாக மாறி விட்டார் என்று போதைபொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு (நார்காட்டிக்ஸ் கன்ட்ரோல் பீரோ) தெரிவித்துள்ளது.

  கைதான ஆரியன் கானுடன் செல்ஃபி எடுத்து வைரலான தனியார் டிடெக்டிவ் கே.பி. கோசவி என்பவரின் உதவியாளர் பிரபாகர் சைல், கோசவி சாம் டிசோசா என்பவரும் 18 கோடி ரூபாய் லஞ்சம் வழங்குவது குறித்து பேசிக் கொண்டிருந்ததைத் தான் கேட்டதாகவும், அதில் 8 கோடி ரூபாய் நார்காட்டிக்ஸ் கன்ட்ரோல் பீரோவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடேவுக்கு வழங்கப்படுவதாகவும் கூறியதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.

  கோசவி மற்றும் டிசோசா இடையே அந்த செல்பேசி உரையாடல் நடந்தபோது தாமும் அப்பொழுது காரில் இருந்ததாக அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருந்தார்.

  பிரபாகர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்திற்கு எதிராக நார்காட்டிக்ஸ் கன்ட்ரோல் பீரோ மற்றும் சமீர் வான்கடே தரப்புகளால் தனித்தனியாக எதிர் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

  தம் மீதான விசாரணைக்கு தயாராக இருப்பதாகவும் வான்கடே நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

  View more on twitter
  சமீர் வான்கடே
  Image caption: நார்காட்டிக்ஸ் கன்ட்ரோல் பீரோவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே
 4. நிழலுலக தொடர்புகள் மூலம் மிரட்டினர் - ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா மீது ஷெர்லின் சோப்ரா குற்றச்சாட்டு

  ஷில்பா ஷெட்டி
  Image caption: கணவர் ராஜ்குந்த்ராவுடன் நடிகை ஷில்பா ஷெட்டி

  தங்களுக்கு எதிராக பாலியல் தொந்தரவு புகார் தெரிவித்த நடிகை ஷெர்லின் சோப்ரா மீது ரூ. 50 கோடி மான நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் பாலிவுட் பிரபல தம்பதியான ராஜ்குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டி.

  "இடுப்பு பெல்டுக்கு கீழே அசிங்கமானவர்கள்," என்று பொதுவெளியில் தங்களைப் பற்றி அவதூறாக ஷெர்லின் பேசியதாகக் கூறி அவரது மன்னிப்பை வேண்டியுள்ள ராஜ்குந்த்ரா, ஷில்பா ஷெட்டி தரப்பு, வழக்கறிஞர் மூலம் அதற்கான நோட்டீஸயும் அனுப்பியுள்ளனர்.

  மும்பையில் ஆபாச செயலி மூலம் மாடல்களை ஆபாசமாக படம் எடுப்பதாக வெளியான குற்றச்சாட்டின்பேரில் ராஜ்குந்த்ராவை சில மாதங்களுக்கு முன்பு மும்பை காவல்துறையினர் கைது செய்தனர்.

  அந்த வழக்கில் தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், தங்களை விமர்சித்து ஷெர்லின் சோப்ரா வெளியிட்ட கருத்து, போலியானது, தவறானது, அடிப்படை ஆதாரமற்றது என்று ராஜ்குந்த்ராவும் அவரது மனைவி ஷில்பா ஷெட்டியும் கூறியுள்ளனர்.

  தங்களிடம் இருந்து பணத்தை கறப்பதற்காக இப்படியொரு அபாண்டமான புகாரை ஷெர்லின் சோப்ரா சுமத்தியிருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

  இந்த நோட்டீஸ் குறித்த தகவல் ஊடகங்களில் வெளியான சில நிமிடங்களில் ஷெர்லின் சோப்ரா தமது ட்விட்டர் பக்கம் மூலமாக ராஜ்குந்த்ராவும் ஷில்பா ஷெட்டியும் தங்களுடைய நிழலுக தொடர்புகள் மூலம் தன்னை மிரட்டியதாக குற்றம்சாட்டியிருக்கிறார்.

  View more on twitter
 5. ஷாருக் கான் மகன் ஆர்யன் கான்

  "செப்டம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் மணீஷ் பானுஷாலி குஜராத் அமைச்சர்கள் சிலரை சந்தித்துள்ளார். 21ஆம் தேதி அதானி நிறுவனம் இயக்கும் முந்த்ரா துறைமுகத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆப்கானிஸ்தான் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது."

  மேலும் படிக்க
  next
 6. இக்பால் பர்வேஸ்

  திரைப்பட செய்தியாளர், பிபிசி இந்திக்காக, மும்பை

  ஆர்யன் கான்

  பல பாலிவுட் நட்சத்திரங்கள் மீது போதை மருந்து உட்கொண்டதாக முந்தைய காலங்களிலும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சிலர் அதை ஒப்புக்கொண்டனர். பலர் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். பாலிவுட்டில் போதைப்பொருள் கலாசாரம் எப்படி உள்ளது?

  மேலும் படிக்க
  next
 7. தன் மகன் ஆர்யன் கானுடன் ஷாருக் கான்

  பிரபல இந்தி நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கானிடம் அரசின் போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பான நர்கோடிக் கன்ட்ரோல் பீரோ விசாரணை நடத்தி வருகிறது.

  மேலும் படிக்க
  next
 8. Video content

  Video caption: ஒரே பாடலில் இந்தியா முழுவதும் பிரபலமான இலங்கை பாடகி யோஹானி

  ஒரே பாடலில் இந்தியா முழுவதும் பிரபலமாகியிருக்கிறார் இலங்கை பாடகி யோஹானி. இவரது பாடல் 10 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இந்தியப் பிரபலங்கள் பலரும் இவரைப் புகழ்ந்துள்ளனர்.

 9. ஷில்பா ஷெட்டி

  "ஒரு திரை பிரபலமாக நான் ஒரு தத்துவத்தைக் கடைப்பிடிக்கிறேன். எப்போதும் யார் மீதும் புகார் சொல்லக்கூடாது. விளக்கமும் தரக்கூடாது. அந்த வகையில், இது விசாரணை நிலுவையில் உள்ள விவகாரம். மும்பை காவல்துறை மீதும் இந்திய நீதித்துறை மீதும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. ஒரு குடும்பமாக எங்களுக்கு உள்ள எல்லா சட்ட வாய்ப்புகளையும் நாங்கள் பயன்படுத்துவோம்," என்று கூறியுள்ளார் ஷில்பா ஷ்ட்டி.

  மேலும் படிக்க
  next
 10. Video content

  Video caption: ராஜ் குந்த்ரா வாழ்வில் நேபாள பயணம் ஏற்படுத்திய திருப்புமுனை
பக்கம் 1 இல் 11