தடுப்பூசிகள்

 1. ஸ்மிதா முண்டசாட்

  சுகாதார செய்தியாளர்

  தடுப்பூசி

  கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு ஒரு மாதத்துக்குப் பிறகு மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரு மாதத்துக்குப் பிறகு ஒருவரின் நரம்பு மண்டலம் எப்படி செயல்படுகிறது என ஆக்ஸ்ஃபோர்ட் மற்றும் எடின்பரோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒப்பிட்டுப் பார்த்தனர்.

  மேலும் படிக்க
  next
 2. தடுப்பூசி உற்பத்தியாளர்களை சந்தித்த நரேந்திர மோதி

  இந்தியா 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி என்று இலக்கை அக்டோபர் 21 அன்று எட்டியுள்ள நிலையில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் ஏழு இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகளை பிரதமர் நரேந்திர மோதி சந்தித்துள்ளார் என்று அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்ககள் செய்தி வெளியிட்டுள்ளன.

  சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா, பாரத் பயோடெக், டாக்டர் ரெட்டிஸ் லெபோட்டரீஸ், சைடஸ் காடில்லா, பயாலஜிக்கல் - இ, ஜென்னாவா பயோஃபார்மா , பனாசியா பயோடெக் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் நரேந்திர மோதியைச் சந்தித்தனர்.

  இன்னும் தடுப்பூசி போடாமல் இருக்கும், தகுதியுள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

 3. டெல்டா பிளஸ் அதிவேகமாகப் பரவக்கூடியது - விஞ்ஞானிகள் கருத்து

  கொரோனா வைரஸ்
  Image caption: கொரோனா வைரஸ் - மாதிரிப் படம்

  கொரோனா வைரசின் புதிய திரிபை சிலர் 'டெல்டா பிளஸ்' என்று அழைக்கிறார்கள். அத்திரிபு வழக்கமான டெல்டா திரிபை விட எளிதாக பரவக்கூடியதாக இருக்கலாம் என பிரிட்டனைச் சேர்ந்த நிபுணர்கள் தற்போது கூறுகின்றனர்.

  யூகே ஹெல்த் செக்யுரிட்டி ஏஜென்சி எனப்படும் சுகாதார பாதுகாப்பு அமைப்பு, இத்திரிபை 'ஆய்வில் உள்ள திரிபு' என வகைப்படுத்தியுள்ளது.

  இந்த புதிய டெல்டா பிளஸ் திரிபு ஏற்கெனவே உள்ள திரிபுகளைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என் சொல்வதற்கு ஆதாரம் இதுவரை இல்லை.

  முழுமையாகப் படிக்க இங்கே சொடுக்கவும்

 4. அமித் ஷா

  இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்திய பாதுகாப்பு படைகள், ஜம்மு & காஷ்மீர் காவல்துறை உள்ளிட்டவற்றின் மூத்த அதிகாரிகளுடன் ஸ்ரீநகரில் ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.

  மேலும் படிக்க
  next
 5. Video content

  Video caption: "நடிகர் விவேக்கின் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்ல"

  நடிகர் விவேக்கின் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என்று மத்திய சுகாதாரத் துறைக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 6. விவேக்

  ஊசி போட்டுக் கொண்ட மறுநாளே அவருக்கு கடும் மாரடைப்பு ஏற்பட்டது. ஏப்ரல் 16ஆம் தேதி நினைவிழந்த நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

  மேலும் படிக்க
  next
 7. 100 கோடி தடுப்பூசி போட்ட இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு

  கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கிய ஒன்பது மாதங்களில் 100 கோடி தடுப்பூசி போட்டிருப்பதற்காக அதற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

  இந்த தடுப்பூசி திட்டம் ஜனவரி 16ஆம் தேதி தொடங்கியது. முதல் கட்டமாக கொரோனா முன்கள பணியாளர்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

  இதைத்தொடர்ந்து 18 முதல் 45 வயதுடையவர்கள் தடுப்பூசி போட அனுமதிக்கப்பட்டனர்.

  இந்த நிலையில், 100 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதையொட்டி இந்தப் பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்களுக்கு பிரதமர் மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானம் கேப்ரெயேசூஸ் தமது ட்விட்டர் பக்கத்தில், கொரோனாவில் இருந்து மக்களை காக்கவும், சமமான தடுப்பூசி இலக்கை அடையவும் பெரும் முயற்சி செய்து வரும் பிரதமர் நரேந்திர மோதி, விஞ்ஞானிகள், சுகாதார ஊழியர்கள் மற்றும் இந்திய மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்," என்று கூறியுள்ளார்.

  View more on twitter
 8. தடுப்பு மருந்து

  இதுவரை இந்தியாவில் 3.6 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் அதிகம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 9. 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டு இந்தியா சாதனை - பிரதமர் வாழ்த்து

  இந்தியாவில் 100 கோடி டோஸ் தடுப்பு மருந்து வழங்கப்பட்டு வரலாறு படைக்கப்பட்டுள்ளதாக இந்திய பிரதமர் மோதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோதி, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இந்த மைல் கல்லை அடைய உதவிய அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

  View more on twitter
 10. கீதா பாண்டே

  பிபிசி செய்திகள், டெல்லி

  वैक्सीन

  கொரோனா தடுப்பூசியில் பிரதமர் மோதியின் படம் இருப்பதற்கு எதிராக கேரளாவைச் சேர்ந்த பீட்டர் வழக்கு தொடர்ந்துள்ளார். கேரளாவில் உள்ள நீதிமன்றம் இவரது வழக்கை அடுத்த வாரம் விசாரிக்கவிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 55